எகிப்திய மன்னர்களை பாரோ என்று அழைப்பது வழக்கம்! பாரோ என்றால் பெரிய வீட்டினுள் வச…

Spread the love

First
எகிப்திய மன்னர்களை பாரோ என்று அழைப்பது வழக்கம்! பாரோ என்றால் பெரிய வீட்டினுள் வசிப்பவன் என்று எகிப்திய சொல்லகராதி பொருள் தருகிறது!
மன்னர்களுக்கு இந்தப் பெயர் ஏன் இந்தப் பெயர் சூட்டப்பட்டது? ஏன் என்றால் அந்நாளில் வீட்டினுள் வசிப்பவர்கள் அரச வம்சத்தவர்கள் என்ற பொருளே உலகம் முழுக்க வழக்காய் இருந்துள்ளது.

உத்தர்காண்டில் உள்ள ஹர்வாலி மக்கள் (ஹர்வாலி என்றால் வீட்டினுள் வசிப்பவர்கள் என்று பொருள்) .ஹர்வால் மக்கள் ராஜபுத்திர சத்திரியர்கள்!இந்திய ராணுவத்தில் ஹர்வால் ரெஜிமன்ட் என்ற தனிப்பிரிவே உள்ளது!

உலகப்புகழ்பெற்ற ஆய்வாளர் திரு.ஐராவதம் மஹாதேவன் உலகத் தமிழ் மாநாட்டில் சமர்பித்த தனது ஆய்வுக் கட்டுரையில் அகம்படி,அகத்தான் என்ற வார்த்தைகளே அரசபரம்பரையினரைக் குறிக்க உலகம் முழுவதும் பயன்பட்டதை தெரிவித்துள்ளார்

“புரிசை ஆழிசூழ் வட்டத் தகம்படி- புரிசையும்அகழியும் சூழ்ந்த வட்டத்து அகம்படி “-நூல்: கருவூர்த் தேவர் திருவிசைப்பா ஆசிரியர்: கருவூத் தேவர்( சோழமன்னன் முதலாம் ராஜராஜனின் குரு) காலம்: 11ம் நூற்றாண்டு

அதாவது புரிசை(கோட்டை அரணும்,மதிலும்) , ஆழி அல்லது அகழியும் (அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும்) கொண்ட பாதுகாக்கப்பட்ட இடமே அகம்படி(அரண்மனை ) ஆகும்.

அகம்படியர் என்போர் அரண்மனையில் வசிக்கும் அரசகுலத்தவர் ( எகிப்திய பாரோ மற்றும் ஹர்வாலி வார்த்தைகளுடன் பொருத்திப் பார்த்தால் இதன் உண்மைப் பொருள் விளங்கும்)

அதுமட்டுமா அகம்படி அல்லது அகம்படியர் ,உள்மனையார், மனைப்பெருஞ்சனம் என்று இன்றைய அகமுடையார்களை குறிக்க இதே வார்த்தைகளே பழந்தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்ததை கல்வெட்டு இலக்கியங்கள் வழியாகப் பார்த்தோம்!

கி.மு 1400களில் பாரோ என்ற வார்த்தை எகிப்திய மன்னர்களை பயன்படுத்தப் பயன்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது , இப்பொருளுக்கான அடிப்படை எங்கிருந்து சென்றிருக்கும் ? அகம்படியர் ,அகத்தான் எனும் தமிழ் மூலத்திலிருந்து?

இப்படி உலகம் முழுக்க அரசவம்சத்தினரை குறிக்க அகம்படியர் பொருள் மூலம் தமிழகத்தில் இருந்தே சென்றிருக்க வேண்டும் ஏனென்றால் சிந்து சமவெளி நாகரீகத்தில் இக்குறியீடுகள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்றும் தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களில் கி.பி 3ம் நூற்றாண்டில் இது பயன்பட்ட ஆதாரம் உள்ளதாலும் இதனை வலுவாக நம்புவதற்கு ஆதாரம் உள்ளது. ஆராய்வதற்கு நிறைய உண்டு! தொடர்வோம்!

படம் 1: பாரோ என்ற எகிப்திய சொல்லின் பொருளும் அதன் மூலமும்
படம் 2: எல்லையைப் பாதுகாக்கும் ஒர் ஹர்வால் வீரன்

மேற்கோள்கள்!
http://www.agamudayarotrumai.com/2710 -சிந்துவெளி நாகரீகத்தில் இருந்தே அரசபரம்பரையினரைக் குறிக்கப் பயன்படும் “அகம்படியினர்” “அகத்தான் ” எனும் வார்த்தைகள் ஆய்வுக் கட்டுரை!
http://www.agamudayarotrumai.com/4033 -கி.பி 5ம் நூற்றாண்டுக்கு முந்தைய பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்படும் உள்மனையார்(அகம்படியார்)!
http://www.agamudayarotrumai.com/4109 -கி.பி 3ம் நூற்றாண்டில் மனைப்பெருஞ்சனம் என இலக்கியத்தில் அகம்படி இனத்தவர்கள்
https://en.wikipedia.org/wiki/Pharaoh
https://en.wikipedia.org/wiki/Garhwal_Rifles
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. Day by day we are getting very polished and sharpened agamudayar history….deep and logical interpretation……

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?