களத்தில் அகமுடையார் வழக்கறிஞர்கள் #JusticeForSrimathi #கள்ளக்குறிச்சி மாவட்டம…

Spread the love

👉களத்தில் அகமுடையார் வழக்கறிஞர்கள் 🙏

#JusticeForSrimathi

#கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த பிளஸ் டூ மாணவி #ஸ்ரீமதி என்ற அகமுடையார் சமுதாய மாணவி நேற்று அதிகாலை மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளி நிர்வாகம் சொல்கின்றது. இதை ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் #தனஞ்செயன் (சென்னை உயர் நீதிமன்றம்) மற்றும் வழக்கறிஞர் #கோமளவள்ளி அவர்களும் இன்று கள்ளக்குறிச்சி சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து நடந்ததை தீர விசாரித்து ஆய்வு செய்தனர். அதில் நடந்தது தற்கொலை அல்ல கொலை என்று ஒரு பக்கம் உறுதியாகி உள்ளது. அதிகாரிகளை சந்தித்து விட்டு அந்த மாணவியின் பெற்றோர்களை சந்திக்கும் போது இந்த மாணவியின் தந்தை கூறியதாவது பிரேத பரிசோதனைக்கு முன் நாங்கள் என் மகளை பார்க்கும் பொழுது அவளது மூக்கின் ஒரு பகுதியில் கீரலும் மார்பக பகுதியில் சிறு சிறு கீறல்களும் இருந்ததை பார்க்க முடிந்தது எனவே இது தற்கொலை அல்ல என்று அந்த மாணவியின் தந்தை கூறியுள்ளார். எனவே நானும் என் உடன் இருந்த வழக்கறிஞரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறி எங்களுக்கு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் இதற்காக நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகவும் தயாராக உள்ளோம். எனவே மறு பிரேத பரிசோதனைக்கு பிறகு பிரேதத்தை நாங்கள் கையில் வாங்குவோம் என்பதை தெளிவாக மாவட்ட ஆட்சியருக்கு எடுத்துக் கூறி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளியில் இதுபோல பல கொலைகள் நடந்ததை எடுத்துக் கூறி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகி ரவிசங்கர் அவர்களை முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம். வழக்கறிஞர் கோமளவல்லி போல சமுதாய உணர்வோடு அனைத்து வழக்கறிஞர்களும் முன்வந்து கைகோர்க்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
வழக்கறிஞர் ப.ப.கி.தனஞ்செயன்
சென்னை உயர்நீதிமன்றம்….

#JusticeForSrimathiதகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page

Source

தொடர்புடைய செய்திகள்:

#வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த #மேல்_அரசம்பட்டு எனும் கிராமம்...உருத்தான போர...
இறுதியாக வாணாதிராயர்கள் மதுரையை ஆண்டனர் என்பதும் அவர்கள் தங்களை கங்கர் குலமென்று...
துளுவ வேளாளர்(அகமுடையார்) சமுதாய கல்வி சேவை மையத்தின் முப்பெரும் விழா நிகழ்வு புகைப்படங்கள
ஆரணி #குன்னத்தூர்_மலைநாட்டு_அகம்படியர். பெரிய மருதுபாண்டியர் பிறந்தநாள் விழா......
நேற்று ஆரணியில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வு புகைப்படங்கள் -தொகுப்பு...
முதல் படம்: தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை சார்பாக நடந்த மருதுபாண்டியர் கல்ல...
திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு மத்திய அமைச்சர் திரு.சதானந்�
#குருபூஜைக்கு இன்னும் 90 நாட்களே உள்ளன! #சென்ற ஆண்டு நம் அகமுடையார் பெரிம்பாண்ம...
வல்வேற் கட்டியர்"(குறுந்தொகை:11) போராடும் தானை கட்டி"(அகம்226) கொங்கணர், கல...
2015ம் வருடம் திருப்பத்தூரில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்...
#அகம்படி_விநாயகர் #தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வடகரையில் பாயும் காவிரி ஆற்றின...
அண்ணன் வரிச்சியூர் செல்வம் (அகமுடையார்) அவர்களின் பேத்தி பூப்புனித நீராட்டு விழா...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.
We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo