First
மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய மானாமதுரை சோமேஸ்வர் கோவில் கோபுரம்!
—————————————————————————
காளையார்கோவில் கோபுரம் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட போது மானாமதுரையிலுருந்து செங்கற்கற்கள் அனுப்பப்பட்டபோது காளையார்கோவிலுக்கு அனுப்பப்பட்ட ஆயிரம் செங்கற்கல்களுக்கு ஒரு செங்கல் வீதம் எடுத்து வைத்த வகையில் சேர்ந்த கற்களைக் கண்டு கட்டப்பட்டதே இக்கோவிலின் கோபுரம் ஆகும்!
இந்தக் கோபுரம் ஐம்பதை உயரமும் மூன்று நிலைகளையும் கொண்டுள்ளது! ஆயிரம் கல்லுக்கு ஒரு கல் எடுத்து வைத்துக் கட்டிய இக்கோவிலின் கோபுரமே இவ்வளவு உயரத்திற்கு இருக்கிறதென்றால் காளையார்கோவிலுக்கு எத்தனைக் கற்கள் அனுப்பபட்டிருக்கும் காளையார்கோவில் கோபுரம் கட்டும் முயற்சி எத்தனை பிரம்மாண்டமானது என்பதை எண்ணிப்பார்க்கின்றோம்!
நம்மவர்களுக்கு மருதுபாண்டியர்கள் கட்டிய காளையார்கோவில் தெரிந்த அளவிற்கு இது போன்ற பல செய்திகள் தெரியவில்லை என்பதால் இச்செய்திகளை இன்று முழுவதும் பகிர்ந்து கொள்கிறோம்! இதை மற்றவர்களுக்கும் தெரிய வைக்க பதிவுகளை நீங்களும் சேர் செய்யுங்கள்!
manamadurai someswarar someswar kovil temple gopuram kopuram built by maruthu pandiar sivangai kings
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்