First
அகம்படியர் போர்குடி என்பதற்கு எண்ணற்ற கல்வெட்டுச் சான்றுகள் பதிவிட்டாயிற்று.இன்னிக்கு தேடுனாலும் நம் கருத்திற்கு வலுசேர்க்க புதிதாய் ஆதாரம் வந்து கொண்டே இருக்கிறது!
திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு எழுந்த “ஐவர் ராசாக்கள் கதை” எனும் நாட்டுப்புற கதைப்பாடலில் படையினராக குறிக்கப்படும் சாதிகள் -அகம்படியர்(அகமுடையார்) ,பார்க்கவகுல உடையார்,துறைக்காரர் எட்டையபுர ஜமீன் படைகள்.
மற்ற சாதிகள் படைகளாக அல்லாது வணங்கி நின்ற கூட்டதாராக காட்டப்படுகின்றனர். இந்த நூலின் தோற்றம் ,மையக்கருத்து போன்றவற்றில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் இது போன்ற நாட்டுப்புற கதைகளும் மேற்கண்ட நடைமுறை உண்மைகளைக் காட்டி நிற்கின்றன .
எந்த சாதி வரலாறை எடுத்துப் பார்த்தாலும் அகமுடையார்களை போர்குடியாகத் தான் பதிவு இருக்கிறது. அகமுடையாரை தொட்டுக்காட்டாமல் தமிழகத்தில் எந்த சாதியும் வரலாறை எழுத முடியாது!இதற்கு நிறைய உதாரணங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் இனியும் வரும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்