சோழர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரே வரியில் சான்று!
————————————————————
சோழர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரே வரியில் பதிலாக கீழ்கண்ட கல்வெட்டு சான்று பகர்கிறது!
எதிரிகண நாயன் பொத்தப்பிச் சோழன்(பொத்தப்பி சோழ பரம்பரையைச் சேர்ந்தவன்) தன்னை அகம்படி இனத்தவரில் முதன்மையானவனாக விளங்கியுள்ள செய்தி ஶ்ரீ ராஜ ராஜ சோழனின் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது!
சான்று: தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி 7-கல்வெட்டு எண் 149
பொத்தப்பிச் சோழர் பரம்பரையைப் பற்றி
———————————
உறையூர் புராதீஸ்வரர்கள் (உறையூரை பூர்வீகமாக கொண்டவர்கள்) என்று போற்றப்பட்ட சோழர்கள் “தமிழ் சோழர்” என்பதனை பெரியபுராணம் குறிப்பிடுகிறது. இச் சோழ மரபினர்கள் ஆந்திர மாநிலத்திலும் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆந்திர பகுதிகளில் இவர்கள் ஆட்சி செய்த காரணத்தினால் “ரேநாட்டு தெலுங்கு சோழர்கள்” என்று அழைக்கப்பெற்றனர். இந்த தெலுங்கு சோழர்களில் சில பிரிவுகளும் இருந்திருக்கிறது. அவர்கள் பொத்தப்பி நாட்டை ஆண்ட காரணத்தினால் “பொத்தப்பி சோழர்கள்” என்றும் குறிப்பிடப்பட்டனர். இம் மரபினில் இருந்து வந்தவரே சோழப் பெருவேந்தன் “விஜயாலய சோழன்” என்பவர் ஆவார். இவரது தந்தை “பொத்தப்பி தெலுங்கு சோழன் ஸ்ரீ கண்டன்” என்பவர் ஆவார். இதை சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் செப்பேடு குறிப்பிடுகிறது.
எனவே சோழர்கள் என்போர் அகமுடையார் சாதியினரே என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்! ஆனால் இன்னும் எத்தனையோ சான்றுகள் உள்ளன.விரிவாக ஓர் நள் எழுதுவோம்!
Source Link:
Source
Leave a Reply