சென்னை அருகில் உள்ள திருநின்றமலையில் கிடைக்கப்பெற்ற விஜய நகர பேரசரான சயன உடையார்…

Spread the love

சென்னை அருகில் உள்ள திருநின்றமலையில் கிடைக்கப்பெற்ற விஜய நகர பேரசரான சயன உடையார் எனும் முதலாம் புக்கன்ன உடையார் காலத்திய கல்வெட்டு( 14ம் நூற்றாண்டு கல்வெட்டு) அகம்படியார்களுக்கு விதிக்கப்பட்ட தண்டம் குறித்து பேசுகிறது.

இக்கல்வெட்டுச் செய்தியின் படி திருநின்றமலை அருகில் உள்ள படுவூர் என்ற ஊரின் தலைவர்களான
சேதிராயன்,காலிங்கராயன்,ஆதித்தன் உள்ளிட்ட அகம்படியார்கள் தங்கள் காவல் பணியை கைவிட்டதனால் பல சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்பட்டதையும் அதனால் குறிப்பிட்ட அகம்படியார் இனத்தைச் சேர்ந்த ஊர்தலைவர்களும் அவர்களின் கீழ் பணிபுரிந்த அகம்படியார்கள் என 48 அகம்படியார்களுக்கு தண்டம் விதிக்கப்பட்ட செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது!

இக்கல்வெட்டுச் செய்தியின் மூலம் வடதமிழகத்தில் பெரும்பாலான அகம்படியார்கள் 8ம் நூற்றாண்டுக்கு முன்பே வேளாண்மைக்குச் சென்று விட்ட போதிலும் குறிப்பிட்ட அளவிலான அகம்படியார்கள் தொடர்ந்து தங்களின் பூர்வீக காவல் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்த செய்தியை அறிய முடிகின்றது!

நெடுநாட்களாக காவல் பணியில் ஈடுபட்ட வந்த இவர்கள் திடீரென்று தங்கள் பணியை உதறியதற்கான காரணம் தெரியவில்லை என இக்கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.ஊர்தலைவர்களாக அதிகாரமும் பெரும் வருமானம் வரக்கூடிய ஊர்காவல் பணியை ஏன் கைவிட்டனர் என்பது குறித்து தெரியவில்லை. ஒருவேளை விஜயநகர அரசின் மேலாண்மையை ஏற்காமல் இதைச் செய்தார்களா என்பது ஆராய்ச்சிக்குரியது!

மேலும் அகமுடையார்களுக்குரிய சேதிராயன்,காலிங்கராயன் எனும் பாரம்பரியப் பட்டங்களோடு ஆதித்தன் என்ற பட்டமும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆதித்தன் பட்டம் சோழர் தொடர்பானதாக இருக்கலாம்(மேற்கூடிய பட்டங்களை அகமுடையார்கள் பயனபடுத்திய சான்றுகள் வேறு ஒரு நாளில் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் வெளியாகும்)

ஆதாரம்: The Early History Of The Madras Region 1957 பக்கம் 144-145Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

சின்னமருதுவின் எளிய வாழ்க்கை சொல்லும் பாடம்- அகமுடையார்கள் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண
#குருபூஜைக்கு இன்னும் 90 நாட்களே உள்ளன! #சென்ற ஆண்டு நம் அகமுடையார் பெரிம்பாண்ம...
ஐவராட்டம் அகமுடையார் திரைப்படம் – விமர்சனம் | Agamudayar Otrumai.com
அகமுடையார் அரண் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நிறைவு புகைப்படங்கள்!
#அகமுடையார்_கட்டிய #விதான்_சொளதா ( கர்நாடகா) பி. ஆர். மாணிக்க முதலியார்(B.R. Ma...
மதுரை-மேலூர் தாலுகா -திருச்சுனை திருஅகத்தீஸ்வரர் கோவில் இறைவனுக்கு , தென்னங்கதேவ...
அகமுடையார் அப்பன் பெயரை திருடும் காமிண்டன் யூடிப் படம் ------------------------...
அகமுடையார் கேள்வி பதில்கள் 1
தலைநகர் டில்லியில் பட்டொளி வீசி பறந்த #முதல்_சுதந்திர_கொடியை வடிவமைத்த குடியாத்த...
#குருபூஜைக்கு இன்னும் 81 நாட்களே உள்ளன! #சென்ற ஆண்டு நம் அகமுடையார் சமுதாயம் பெ...
பாண்டிய அரசனின் உறவினன் அகமுடையான் ----------------------------------- அகமுடையார...
அரகண்டநல்லூர் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் உள்ள அகம்படி முதலி பெரிய பெருமாள் பாண்டியராயன்
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo