First
வெண்பாக்கமுடையார் அகம்படி வெளார்(வேளார்) திருவண்ணாமலை உடையார்- கல்வெட்டு
—————————————————————————-
விருதாச்சலம் அருகே உள்ள திருவெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அகமுடையார்களைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று நம் பார்வைக்கு கிடைத்துள்ளது.இக்கல்வெட்டில் வெண்பாக்கமுடையார் அகம்படி வெளார்(வேளார்) (திருவெண்பாக்கம் ,திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த வேளான் உடையார்களாகிய அகம்படி இனத்தவர் ) கோவிலுக்கு அளிக்கப்படும் சூலவரியை வசூலித்து அதற்கு நிலத்தை பெற்று கோயிலுக்கு தானமாக அளித்துள்ளனர்.
இக்கல்வெட்டுச் செய்தியில் அகமுடையார்கள் அகம்படி வேளார்கள் என்றும் வெண் பாக்கமுடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் இது வரலாற்றின் ஆரம்பத்திலேயே அகமுடையார்கள் வேளாளர்களாக மாறியதையும் இவர்கள் பெரும் நிலக்கிழார்களாக உடையார்களாக இருந்துள்ளார்கள் என்பதையும் உறுதிசெய்யும் மற்றுமொரு சிறப்பான ஆதாரம் என்பதால் அகமுடையார்களின் முக்கிய கல்வெட்டுக்களில் இடம் பெறுகிறது.
மேலும் சூலவரி வசூலித்த குறிப்பு இருப்பதாலும்திருவெண்பாக்கம் உடையார் என்றிருப்பதாலும் இவர்கள் இப்பகுதியில் அரசப்பிரதிநிதிகளாக நியமிக்கபட்டிருந்தார்கள் என்பது தெரிகிறது!
இக்கல்வெட்டின் முழுச்செய்தியும் கிடைக்காததால் இக்கல்வெட்டின் காலமும் ,இக்கல்வெட்டில் குறிக்கப்படும் மன்னர் மர்றும் இன்னும் அதிகச் செய்திகளைஅறிய முடியவில்லை ஆனால் விரைவில் இக்கல்வெட்டுச் செய்தியினை முழுதாக கண்டறிந்து முழுக்கல்வெட்டுச் செய்தியும் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் வெளியிடப்படும்!
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி -22 ,மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்