• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

மாமன்னர் மருதுபாண்டியர்கள் வேளாளரா? ————————————— ம…

May 26, 2021 by administrator

மாமன்னர் மருதுபாண்டியர்கள் வேளாளரா?
—————————————
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பல்வேறு தமிழ் புலவர்களை ஆதரித்து வந்தது நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

அந்த வகையில் மருதுபாண்டியர்கள் புலவர் சுப்பிரமணியம் என்பவரைக்கொண்டு மானமதுரை நகரையும் அதன் கோவில் வரலாற்றையும் புகழுறுமாறும் “வானர வீர மதுரைப்புராணம்” என்ற நூலினை ஏற்ற செய்துள்ளார்.

இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்நூலின் 15ம் பாடல் இந்த நூலை இயற்ற துணைபுரிந்தவராக மருதுபாண்டியர்களை குறிப்பிடுகின்றது.

அவ்வாறு குறிப்பிடுகையில் மருதுபாண்டியர்களை உடையார் வேள் என்பவரின் மகன் என்பதாக குறிப்பிடுகிறது. அதாவது மருதுபாண்டியர்களின் தந்தையான உடையார் மொக்க பழனியப்பன் சேர்வை அவர்களை உடையார் என்றும் வேள் என்றும் குறிப்பிடுகிறது.

அதாவது வடமாவட்ட அகமுடையார் வேளாளர் என்றும் , தென் மாவட்ட அகமுடையார் முக்குலத்தோர் போர்குடி என்றும் குறிப்பிடும் சில குழப்பவாதிகள் பார்வையில் சொன்னால் மருதுபாண்டியர்களை வேளாளர் என்று இந்த இலக்கியம் குறிப்பிடுகின்றது.

இந்த நூல் மருதுபாண்டியரின் சமகாலத்தில் மருதுபாண்டியர் ஆதரவுடன் எழுந்த நூலாகும்.ஆகவே இந்த நூலில் உள்ள கருத்துக்கள் மருதுபாண்டியர்களே ஏற்றுக்கொண்ட கருத்தாகும்.

ஒருவேளை மற்ற அகமுடையார் இன நாயகர்கள் போல் மருதுபாண்டியர்கள் பற்றியும் நாம் ஏதும் அறியாமல் இருந்து , தீடீர் என்று இந்த இலக்கியம் மூலம் மருதுபாண்டியர்களை பற்றி அறிந்து கொள்பவர்கள் என்ன முடிவு கட்டுவார்கள்???

மருதுபாண்டியரை இன்றைக்கு இருக்கும் வேளாளர் சாதி என்று தானே முடிவு கட்டுவார்கள்???

ஆனால் மருதுபாண்டியர்கள் சுத்தமான அகம்படியர் சாதி அல்லவா?
ஆனால் அவர்களும் வேள் என்றும் உடையார் என்றும் நில உடமையாளர்களாக ,வேளாளர் அடையாளங்களோடு காணப்படுகின்றனர்.

இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால் அகமுடையார்கள் பட்டங்கள் , தூரங்களின் இடைவெளியை கடந்து ஒருங்கிணைவதை பொறுக்கமுடியாத சிலர் வட மாவட்ட அகமுடையார்கள் என்பவர்கள் வேளாளர்கள் என்பதாகவும் , தென் மாவட்ட அகமுடையார்கள் முக்குலத்தோர் சம்பந்தப்பட்டவர்கள் என்பது போலவும் இவர்களுக்குள் சம்பந்தம் இல்லையென்றும் குழப்ப வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

தென் மாவட்ட அகமுடையார்களும் வேளாளர் அடையாளங்களோடு இருந்திருக்கிறார்கள் என்பதை தென் மாவட்ட அகமுடையார்களுக்கு நன்றாக உரைக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று தான் மருதுபாண்டியர்களை உதாரணமாக காட்டினோம் அதனால் தான் இப்பதிவிற்கு அந்த தலைப்பையும் கொடுத்தோம்.

மற்றுமொரு ஆதாரம்
——————–
தென் மாவட்டத்தில் ஏதோ மருதுபாண்டியருக்கு மட்டும் தான் ஏதோ தப்பி தவறி வேள் என்ற பட்டம் வந்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக மற்றுமொரு ஆதாரத்தையும் வழங்குகின்றோம்.

சண்முகஞ் செட்டியார் பொருளதவியாலும் கந்தசாமி கவிராயரால் தொகுக்கப்பெற்று 1908ம் வருடம் வெளியிடப்பட்ட வெளியிடப்பட்ட தனிசெய்யுட் சிந்தாமணி நூலில்

அகம்படியார்‌ டிஸ்டிரிக்ட்‌ ‌ சபைப்‌ பிரசிடெண்டும்‌ வக்கீலுமாக இருந்த சீனி முருகப்பிள்ளை எனும் அகம்படியாரை இந்த நூலில் உள்ள செய்யுள் வேள் என்ற பதம் கொண்டு குறிப்பிடுவதைக்காணலாம் (பார்க்க இணைப்பு 3,4) .

மதுரை டிஸ்டிரிக்ட்‌ போர்டு மெம்பரும்‌, சிவகங்கை தாலூகா போர்டு வைஸ்‌ பிரசிடெண்டும்‌, அகம்படியார்‌ டிஸ்டிரிக்ட்‌ ‌ சபைப்‌ பிரசிடெண்டும்‌ வக்கீலுமாக இருந்த ‌ சீனி முருகப்பிள்ளை அவர்கள் அகம்படியர் கூட்டத்தை ஊர் தோறும் கூட்டினார் என்று செய்யுள் குறிப்பிடுவதைக்காணலாம்( பார்க்க இணைப்பு 4)

குறிப்பிட்ட சீனி முருகப்பிள்ளை என்பவர் பிள்ளைப்பட்டமும் வேள் என்றும் குறிப்பிடப்படுவதைக்கொண்டு இவரையும் வேளாளர் என்று முடிவு கட்டிவிடுவீர்களா என்ன ? சிவகங்கை நகரை சேர்ந்த இவர் தென் மாவட்ட அகமுடையார் தானே?

வேளாளர் அடையாளம் கொண்டு வகைப்படுத்தானால் மாமன்னர்கள் மருதுபாண்டியரும் வேளாளர் அடையாளத்திற்குள் தான் வருவார் ? ஆனால் அப்படி சேர்க்க எந்த அகமுடையாரும் துணிவார்களா?

அப்படியிருக்கையில் வடமாவட்ட அகம்படியர்களை வேளாளர் அடையாளத்தில் சேர்க்க நினைப்பது எவ்வளவு பெரிய அறியாமை!!!

ஆகவே உலகம் முழுவதும் அகமுடையார்கள் 100 ஆண்டுகளுக்கு முன்புவரை அகம்படியர் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே இது ஒரே சாதி !

அதே போல் வடமாவட்டத்தை போலவே தென் மாவட்ட அகமுடையார்களும் வேளாளர் அடையாளத்தோடு இருந்துள்ளனர் ஆகவே வடதமிழ்நாடு, தென் தமிழ்நாட்டு அகமுடையார் என்று பேதம் இல்லாமல் பட்டங்கள், தூரங்களை கடந்து அகமுடையாராக ஒருங்கிணைய வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்!

இந்த நோக்கம் நிறைவேற மேலும் பல ஆதாரங்களை தொடர்ந்து வெளிப்படுத்துவோம்.

வணங்களுடன்
மு.சக்தி கணேஷ் சேர்வை(அகமுடையார்) ,மதுரை
அகமுடையார் ஒற்றுமைக்காக

இணைப்புகள்
1- வானர வீர மதுரை புராண நூலில் தமிழக அரசு வெளியிட்டுள்ள முன்னுரையில் நூலை பாடவைத்தவர் பற்றிய குறிப்பு
2- வானர வீர மதுரை புராண நூலில் பாடவைத்தவர் குறித்து நூலை இயற்றியவர் அளித்த மூலக்குறிப்பு
3,4,5,6- தனிசெய்யுட் சிந்தாமணி நூல் பக்கங்கள் 730,731,732






Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய சத்திரத்தில்...
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கண்டிதம்பேட்டையில் பிறந்து...
அகமுடையார் தனி பேரின அரசியலில் "தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்" (1964 ...
மலேசியாவில் நடபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று அகமுடையார் இன...
அகம்படி நன்னன் கல்வெட்டும்-துளுவ வேளாளரும் -------------------------------------...
#வேளாளர் என்பது ஓர் சாதியல்ல.வேளாண்மையில் ஈடுபட்ட அனைவருமே வேளாளர்கள் தான். வரலா...
முதற்கட்ட தேர்வில் 41 அகமுடையார் கல்வி மைய மாணவ,மாணவியர் எழுத்து தேர்வில் தேர்ச...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
  • சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
  • புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
  • அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
  • மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…