ராக்காச்சி அல்லது ராக்காயி அம்மன்- வாணர் குல அசுரர்களின் வழிவந்த பெண் தெய்வம்–…

Spread the love

First
ராக்காச்சி அல்லது ராக்காயி அம்மன்- வாணர் குல அசுரர்களின் வழிவந்த பெண் தெய்வம்-
———————————————————————–
வாணாதிராயர்கள் அழகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு மதுரையை ஆண்டபோது அழகர்மலையில் உள்ள தீர்த்தக்கரையில் ராக்காயி அம்மனுக்கு கோவிலை எழுப்பினர்.

இந்த ராக்காயி அம்மன் வழிபாடு எவ்வாறு தோன்றியது என்று பார்தோமானால் அது அசுர தொடர்புடைய வாணர்களிடமிருந்து தொடங்குவதை அறிய முடியும்.மகாபலி வாணர்கள் அசுரர் என்றும் அசுர குல சத்திரியர் என்றும் புராணங்கள் அழைப்பதை முன்பே பார்த்தோம்.
அத்தகைய அசுரர்களை ,ராட்சதர் என்றும் அழைப்பர் ஆண்களை ராட்சதர் என்றும் பெண்களை ராட்சசி என்றும் அழைப்பது மரபு.

ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவமே ராக்கசி/ராட்சசி என்பதாகும். வாணர் குல அசுர வழிவந்த பெண் தெய்வம் என்பதாலேயே ராக்ஷசி என்று அழைக்கப்பட்ட தெய்வம் இன்று ராக்காச்சி/ராக்காயி என்றும் அழைக்கப்படுகிறாள்.

மதுரையில் ராக்காயி அம்மன் கோவிலையும் வழிபாட்டையும் வாணாதிராயர்கள் கொண்டு வந்த செய்தி இதனை மேலும் நிரூபிக்கிறது.
வாணாதிராயர்கள் ஆண்ட அழகர்கோவிலில் தீர்த்தக்கரை எனும் பகுதியில் ராக்காயி அம்மனுக்கு கோவில் உண்டாக்கிய செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.அதுமட்டுமல்ல வாணாதிராயர் ஆண்ட சிவகங்கை,ராமநாதபுரம்,மானாமதுரை போன்ற அனைத்துப் பகுதிகளிலும் ராக்காயி அம்மன் வழிபாடு உண்டு.
வாணாதிராயர் வழிவந்த அகமுடையார்களுக்கு ராக்காயி அம்மன் முக்கிய தெய்வம் ஆகும்.

தென் மாவட்ட அகமுடையார்களின் குலதெய்வக் கோவில்களில் ராக்காயி அம்மனுக்கு சிலையும் வழிபாடும் கட்டாயம் உண்டு! வெவ்வேறு அகமுடையார்களுக்கு வேறுபட்ட குலதெய்வங்கள் இருந்தாலும் அது எத்தகைய குலதெய்வகோவிலாக இருந்தாலும் அகமுடையார் குலதெய்வக் கோவில்களில் ராக்காயி அம்மனுக்கு தவறாது சிலையும் வழிபாடும் இருந்தே தீரும்!

அது போல் ராக்கு,ராக்காயி என்பது அகமுடையார்களின் பெண்களுக்கு பொதுவாகவும் அதிகமாக வழங்கப்படும் பெயராவும் 20 வருடங்கள் முன்புவரை இருந்துள்ளது(இப்ப தமிழ் பெயர்களையெல்லாம் மறந்து ஸ்டைல்லுக்காக பெயர் வைக்கத் தொடங்கிய போது மாறிவருகிறது)

புகைப்படம் 1: அழகர்கோவில் ராக்காயி அம்மன் – எங்கள் குலதெய்வம்
புகைப்படம் 2: வாணாதிராயர் ஆண்ட மானாமதுரை தஞ்சாக்கூரில் உள்ள காவேரி ஐய்யனார் எனும் அகமுடையார்களுக்குரிய கோவிலில் ராக்காயி அம்மன் சிலை

மதுரை சோழவந்தானில் படமாகபப்ட்ட/திரைக்களமாகக் கொண்ட அகமுடையார் திரைப்படமான “பட்டிகாடா பட்டணமா” திரைப்படத்தில் மூக்கையா சேர்வை எனும் சிவாஜியின் முறைப்பெண்ணாக வரும் ராக்கம்மா எனும் கதாபாத்திரமும் ,படத்தில் வரும் “அடி என்னடி ராக்கம்மா” எனும் பாடலும்

 

சேர்வைடா-சேர்வை(அகமுடையார்) -பட்டிகாடா பட்டணமா படத்தில் ஓர் காட்சி!

முழுத் திரைப்படத்தையும் இணையத்தில் பார்க்க

ஆராய்வதற்கு நிறைய உண்டு! அசுரன்டா!

ராக்காயி அம்மனை குலதெய்வமாக கொண்ட அகமுடையார்கள் அல்லது உங்கள் குலதெய்வக் கோவில்களில் ராக்காயி அம்மன் சில இருந்தால் உங்கள் கோவில் இருக்கும் ஊர்களை கமேண்ட் செய்க! அதே போல் கோவில் புகைப்படங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments
  1. madurai’ koothiyarkundu. valayankulam agmudayarkalukku pathiyappattathu. angaala easwari kovilla rakkachi irukku

  2. எங்கள் குல தெய்வம் ராக்காயி, கருங்காலக்குடியில் உள்ளது.. அடுத்த மாதம் குல தெய்வ கோவிலுக்கு செல்ல உள்ளேன்.. அப்போது கோவில் புகைப்படத்தை பகிருகிறேன்…

  3. Thirupuvan..alli nagaram .dandiswara ayyanar kovil la rakkayee amman silai ullathu

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?