First
அகமுடையார்களும் நாயக்கர்களும் -இரு சமூகத்தவரும் பரஸ்பரம் உதவிக் கொண்ட நிகழ்வுகள்!
——————————————————————————–
நாயக்கர் சமூகத்தவரான பாஞ்சாலங்குறிச்சி மன்னர் கட்டபொம்மு நாயக்கர் நினைவுநாளான ( ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தினமான ) இன்று(அக்டோபர் 16) அன்று இக்கட்டுரையை வரைவதில் மகிழ்கின்றோம்!
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை ஏற்கனவே வேறு தலைப்புகளில் நம் தளத்தில் வெளியிட்டுள்ளோம் என்றாலும் ,இன்றைய தினத்தில் இதை இக்கட்டுரை தலைப்பிற்கான வடிவில் சேகரித்து வழங்குவது இந்நாளுக்கான சிறப்புச் செய்தியாக அமையும் என்பதால் இக்கட்டுரையை வரைகின்றோம்.
கட்டபொம்மன் ஒருமுறை இராமநாதபுரம் வரும் வழியில் சிவகங்கை அருகில் உள்ள பழமாநேரி எனும் ஊருக்கு வருகை புரிந்தார். சின்ன மருதுபாண்டியரின் கட்டளையின் பேரில் சிவகங்கைச் சீமையின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கு ரகசியமாக அனுப்பபட்டனர்.
மேற்கோள் ஆதாரம்: நூல் மருதுபாண்டிய மன்னர்கள் -பக்கம் எண்: 549
முக்கிய ஆதாரம்: Book: History of Freedom Struggle in India Page number 77,78,80 Author: Dr.Rajaiyyan
மேலும் கட்டபொம்மன் படையில் சிவகங்கை பகுதியில் இருந்து சென்ற அகமுடையார் வீரர்கள் பெருமளவில் இருந்தனர்
படிக்க கட்டபொம்மன் படையில் அகமுடையார்கள் -ஒர் குடும்பத்தின் கதை -http://www.agamudayarotrumai.com/1387
போரில் தோல்வியடைந்து கட்டபொம்மன் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து வெளியேறிய போது அவர்களை சின்ன மருதுபாண்டியர் சிவகங்கை அரண்மனையில் தங்க வைத்தார்.
மேற்கோள் ஆதாரம்: நூல் மருதுபாண்டிய மன்னர்கள் -பக்கம் எண்: 550
முக்கிய ஆதாரம்: Book: – Ramanadapuram District Gazateer -page number 961
Historical and cultural importance of Sivaganga vide
பின்னர் கட்டபொம்மன் அங்கிருந்து புதுக்கோட்டை காடுகளுக்குள் தஞ்சம் அடைய அவர்களை புதுக்கோட்டை மன்னன் கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்ததும் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும் அறிந்ததே
கட்டபொம்மனின் மரணத்திற்கு பிறகு அவரது தம்பி ஊமைத்துரையை ஆங்கிலேயரின் சிறையில் இருந்து காப்பாற்றியதில் மருதுபாண்டியரின் படைவீரர்கள் ஈடுபட்டனர்.இம்முயற்சியை வரலாற்றாசிரியர்கள் முகலாயரின் சிறையில் இருந்து சிவாஜியை தப்பிக்கச் செய்த செயலோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
மேற்கோள் ஆதாரம்: நூல் மருதுபாண்டிய மன்னர்கள் -பக்கம் எண்: 566,567,568
முக்கிய ஆதாரம்: Book: History of Modern Tamilnadu -Page number 103
இவ்வாறு ஊமைத்துரைக்கு அடைக்கலம் அளித்ததாலேயே சிவகங்கையில் போர் வந்ததும் அறிந்ததே(இது பற்றி விரிவான செய்திகள் உண்டு ஆனால் இதை பின்னாளில் விரிவாக அறியத் தருகின்றோம்)
இவ்வாறு ஊமைத்துரை-மருதுபாண்டியர் நட்பு பற்றி நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம்
ஆனால் மருதுபாண்டியர் காலத்திற்கும் முன்பே அகமுடையார்-நாயக்கர் என்ற இரு சமூகங்களும் நல்ல பிணைப்பில் இணைந்திருந்தனர்.
மதுரை நாயக்க மன்னர் வாரிசான பங்காரு திருமலை நாயக்கருக்கு பட்டம் சூட்டிய வெள்ளையன் சேர்வை
———————————————————————————————
மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த பங்காரு திருமலை நாயக்கர் ஆட்சியை ஆங்கிலேயர் பிடித்துக் கொண்ட போது படைகொண்டு ஆங்கிலேயரை வீழ்த்தி மீண்டும் பங்காரு திருமலை நாயக்கருக்கு முடி சூட்டியவர் வெள்ளையன் சேர்வை எனும் அகமுடையார் இனத்தவர் ஆவார்.
ஆதாரங்கள்: ராமநாதபுரம் வரலாற்றுக்குறிப்புகள் .ஆசிரியர் .கமால் பக்கம் 137
Book:The Manual of Ramnad Samastanam page number 248 By T Rajaram Rao ,Year : 1891
மேலும் ஆதாரங்கள் மற்றும் விரிவாதகவலுக்கு கீழ் இணைப்பில் உள்ள கட்டுரையை படியுங்கள்!
http://www.agamudayarotrumai.com/1905 -வெள்ளையன் சேர்வை திருமலை பங்காரு நாயக்கருக்கு முடி சூட்டிய செய்தி!
விருப்பாச்சி கோபால நாயக்கரின் படையில்-
——————————————–
அதுமட்டுமல்ல திண்டுக்கல் விருப்பாச்சிய நாயக்கர் படையில் சோமநாத சேர்வை, சோமன்துரை போன்ற அகமுடையார்கள் படைத் தலைவர்களாக இருந்துள்ளனர் .
ஆங்கிலேயருக்கு எதிராக விருப்பாச்சி நாயக்கருக்காக போரிட்ட இவர்கள் ஆங்கிலேயர் 1801 மே 4ல் கைது செய்து, நவ.,5ல் தூக்கிலிட்டனர்.குறிப்பிட்ட சோமநாத சேர்வை சிவகங்கைப் பகுதியில் இருந்து திண்டுக்கல் நாயக்கரிடம் பணியாற்ற சென்றவர் என்பது குறிப்பிடத்தகது.
ஆதாரம்: தமிழ்நாடு அரசு மக்கள் செய்தி தொடர்புதுறை வெளியிட்ட கோபால் நாயக்கர் மணிமண்ட இணையதளச் செய்தி –
http://tndipr.gov.in/memorials/tamil/veerakobalanaykermanimadapam.html
குறிப்பு:
இச்செய்தியை இன்றே பதிவிட வேண்டும் என்று நினைத்தோம் .நேரம் குறைவாக இருந்ததால் இன்னும் அதிக செய்திகளை இணைக்க முடியவில்லை.வரும் காலங்களிக் கூடுதல் தகவல்களை இணைப்போம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்