மைல்கல் ! ************ மருதரசர்களின் மாண்புகளை, குறிப்பாக அவர்களின் பெரு வரலாற்ற…

Spread the love

First
மைல்கல் !
************
மருதரசர்களின் மாண்புகளை, குறிப்பாக அவர்களின் பெரு வரலாற்றில் SIGNATURE என ஆங்கிலத்தில் வர்ணிக்கும் அளவிற்கும்,
துப்பாக்கியும், பீரங்கியும் கொண்டு உலகையே அடிமைப்படுத்திய ஆங்கிலேயன் அஞ்சி நடுங்கும் அளவிற்கு தன் சொல் வலிமையை, தொலை நோக்கு சிந்தனையை, தேசப்பற்றை, மக்களை ஒருங்கிணைத்த ஆளுமையை உலகுக்கு அறிவித்தது அவர்களின் ஜம்புத்தீவு பிரகடனம் தான் !

ஆனால், அதை வாசித்தால் மக்களிடம் பெரும் புரட்சி ஏற்படும் என அஞ்சிய ஐரோப்பிய அரசு வெகு வேகமாக அதன் நகல்களை கைப்பற்றி அழித்தது !

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது !
எனும் வாக்கியத்திற்கேற்ப,
கோர்லே என்ற மனசாட்சியுள்ள ஒரு ஸ்காட்லாந்தியன் “மருது தி இண்டியன் ஸ்டோரி” என்ற தலைப்பிட்ட நூலில், மருதரசர்களின் மரணத்திற்குப் பின், 1813 இல், 13 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்புத்தீவு பிரகடனத்தை அந்நூலில் அச்சு பிசகாமல் அப்படியே இலண்டனில் பதிவு செய்திருந்தான் ! புண்ணியவான் !!

ஆனாலும், இந்திய வரலாற்று ஆசிரியர்களோ, தமிழக வரலாற்று ஆய்வாளர்களோ இந்த முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனத்தை எங்குமே எடுத்துரைக்கவில்லை !

காலச்சக்கரம் சுழன்றது, இந்தியாவில் முதன்முறையாக “South Indian Rebellion 1800-1801 The First War of Indepenence”
என்ற தலைப்பில், 1971 ஆம் ஆண்டு, பேரா கே.இராஜய்யன் அவர்கள் எழுதிய ஆங்கில நூலில், சின்ன மருதுவின் ஜம்புத்தீவு பிரகடனத்தை பொதுச் சமூகத்தின் பார்வைக்கு முழுமையாக பதிவு செய்திருந்தார்.

“மருதுபாண்டிய மன்னர்கள்” என்ற தலைப்பில், 1994 ஆம் ஆண்டு, சிவகங்கை மீ.மனோகரன் அவர்கள் எழுதிய நூலில், ஜம்புத்தீவுப் பிரகடனத்தை தமிழில் மொழிப்பெயர்த்து பாமர மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றார்.

1813 – கோர்லே, 1971- பேரா.கே.இராஜய்யன், 1994 – மீ.மனோகரன் இவர்கள் மூவரும் தான் சின்னமருதுவின் ஜம்புத்தீவுப் பிரகடனத்தை பொது பார்வைக்கு கொண்டு சென்ற முன்னோடிகள் ஆவர்.

அகத்தமிழ் பேரினம் பிரகடனத்தை படித்து, படித்து வியக்க, இது போன்ற பிரகடனத்தை தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் கூட இதற்கு இணையான ஒரு அறிக்கை கிடையாது என்பதை ஆய்ந்து அறிகின்றனர் !

பிறகென்ன, ஒப்பில்லா இப்பிரகடனத்தை சமூகம் கொண்டாடுகிறது, இதற்கு முறையான அரசு அங்கீகாரத்தை பெறவும் போராடுகிறது !

இச்சூழலில், அருமை உறவினர் திருமதி Radha Thevar அவர்கள் இப்பிரகடனத்தின் ஆவணங்களை அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், Balamurugan Agamudayar அவர்களிடம் கேட்டுப் பெற்று, மருதரசர்களின் வாரிசுதாரர், திரு த.இராமசாமி சேர்வை அவர்களோடு மேதகு தமிழக ஆளுநர், திரு ஆர்.என்.இரவி அவர்களிடம் அழைத்துச் சென்று முறையிடுகிறார்கள்.

ஈடுஇணையற்ற இப்பிரகடனத்தை படித்து வியந்த ஆளுநர் அவர்கள்,
உடனடியாக இப்பிரகடனத்தை நினைவூட்டும் வகையில் பெருநிகழச்சி ஒன்றை, பிரகடனம் வெளியிடப் பெற்ற திருச்சி மாநகரில் நடத்த பணிக்கிறார் !

அவ்வண்ணமே, சென்ற 2023 ஆம் ஆண்டு, திருமதி இராதா தேவர் அவர்கள் தலைமையான “ஜம்புத்தீவு பிரகடன விழா ஒருங்கிணைப்புக் குழு” சார்பாக, 2023 அக்டோபர், 23 இல் திருச்சி மாநகரில் நடத்திய நிகழ்வில், ஆளுநர் பங்கேற்று சிறப்பித்ததுடன், ஆண்டுதோறும் பிரகடனத்தை நினைவூட்டி சிறப்பிக்க வேண்டும் என தன் கருத்தை பதிவு செய்தார் !

அத்துடன், பிரகடனத்தின் பெரும் மாண்பை உணர்ந்த மேதகு ஆளுநர் அவர்கள், தமிழக பல்கலைக் கழகங்களின் “வேந்தர்” என்ற முறையில் இந்த ஆண்டு, தமிழகத்தின் அனைத்து பல்கலைக் கழகங்களும் ஜம்புத்தீவு பிரகடனத்தை போற்றி, இன்றைய தலைமுறையின் மனதில் பதிவு செய்யும் வண்ணம் கொண்டாட வலியுறுத்தியுள்ளார்!

மேலும், ஜூன்-16 அன்று, சென்னை ராஜ்பவனிலும் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாளை அனுஷ்டிக்கும் வகையில் பெருநிகழ்ச்சிக்கு திட்டமிட்டுள்ளார்கள் !

நாடு, நகரம், மனைவி, மக்களோடு தன் இன்னுயிரையும் இந்த மண்ணிற்காக ஈந்த மாமன்னனர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நம் பயணத்தில் இந்நிகழ்வு ஒரு மைல்கல் ஆகும் !

இந்த மைல் கல்லை கடக்க உதவிய அருமை அக்கா திருமதி இராதா தேவர் அவர்களுக்கும், ஜம்புத்தீவு பிரகடன விழா ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும், மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும் அகத்தமிழ் பேரினத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழே பதிவிடப்பட்டுள்ள 5 படங்கள்,

1) தமிழக ஆளுநர் அவர்களிடம், 2023 சூலை 06 அன்று, திருமதி இராதா தேவர் அவர்கள் ஜம்புத்தீவு பிரகடனம் பற்றிய ஆவணங்களை அளித்த போது.

2) மாமன்னர் மருது பாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவர், த.இராமசாமி அவர்கள், திருச்சி மலைக்கோட்டை வாயிலோ அல்லது திருவரங்கம் கோயில் வாயிலிலோ ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டியும், தலைநகர் புது டெல்லியில், புதிய நாடாளுமன்ற வளாகத்தில், மருது பாண்டியர்களின் முழுவுருவச் சிலை அமைக்க வேண்டியும் வலியுறுத்தி மனு அளித்த போது.

3) கோர்லே யின் “மருது தி இண்டியன் ஸ்டோரி என்ற நூலின் ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவத்தை சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள், தமிழக ஆளுநர் அவர்களிடத்தில் வழங்கிய போது.

4) ஜம்புத்தீவு பிரகடன விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, திருச்சியில் 2023 அக்டோபர் 23 அன்று நடைபெற்ற விழாவில் ஆளுநர் அவர்கள் ஜம்புத்தீவு பிரகடனத்தின் மாதிரி படத்தை மேடையில் வெளியிட்ட போது.

Vengatesh Ogun அவர்களின் முகநூல் பதிவிலிருந்து…இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo