மீள்பதிவு : இன்று( ஜீன் 04) பிறந்தநாள் காணும் திரு.பாலமுருகன் அகமுடையாருக்கு வாழ…

Spread the love

மீள்பதிவு : இன்று( ஜீன் 04) பிறந்தநாள் காணும் திரு.பாலமுருகன் அகமுடையாருக்கு வாழ்த்துக்களும் சமுதாயத்திற்கு நமது வேண்டுகோளும்
——————————–
இன்று( ஜீன் 04) பிறந்தநாள் காணும் அகமுடையார் உணர்வாளர் களப்பணியில் அகமுடையார் ஆவண சேகரிப்பாளர் அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையாருக்கு ,அகமுடையார் ஒற்றுமை சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

இப்பிறந்தநாள் வாழ்த்துப்பதிவில் திரு.பாலமுருகன் அகமுடையார் பற்றி நான்(மு.சக்திகணேஷ் அகமுடையார்-அகமுடையார் ஒற்றுமை) தெரிந்தவற்றை சற்றே பகிரிந்து கொள்கிறேன் .சற்றே நேரம் ஒதுக்கி படிக்கவும்.

வாழ்க்கை பயணத்தில் பலர் பாதையில் நடக்கிறார்கள் ஒரு சிலரே மற்றவர்கள் நடக்க பாதையாக மாறுகிறார்கள்.
அகமுடையார் சமுதாயத்தை பொறுத்தவரை அப்படிப்பட்ட ஓரிருவரில் ஒருவர் தான் திரு.பாலமுருகன் அகமுடையார்.

ஆயிரக்கணாக்கான வருடங்களாக பட்டங்களாலும், தூரத்தால் பிரிந்திருந்தாலும் அகமுடையார்களுக்கிடையே பிரிவுகள் பெரிதாக பேசப்பட்டதில்லை. காலம்தோறும் அகமுடையார்கள் இணக்கத்தை பேணியும்,திருமண உறவோடு இணைந்தும் இருந்தார்கள்.

இந்த நிலையில் 1990களில் தென் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட வேறு இரு சமுதாயங்கள் அகமுடையார் சமுதாயத்துடன் இணைந்து நடத்திய குழப்ப அரசியல் நிகழ்வுகளால் ஓர் குழப்ப மயக்க நிலை உருவாகியது.

இந்நிலையில் அகமுடையார் சமுதாயத்தை அகமுடையார் என்ற ஒற்றை சொல்லால் இணைத்த பெருமைக்கும் களப்பணிக்கும் சொந்தக்காரர் திரு.பாலமுருகன் அகமுடையார் என்றால் மிகையில்லை!

வடமாவட்டங்களின் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அகமுடையார் பட்டங்கள் பற்றியும் ,மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பற்றிய விழிப்புனர்வு ஏற்படுத்தியும் இவர் செய்த களப்பணிகள் அளப்பரியது!

அதுமட்டுமல்ல
பல்வேறு அகமுடையார் சமுதாய தலைவர்கள் , பெரியவர்கள் அரிதின் முயன்று சேகரித்து வைத்திருந்த அகமுடையார் சம்பந்தமான நூல்கள் ,ஆவணங்கள், ஓலை சுவடிகள் ,,இயக்கங்களின் நிகழ்வுகள்,புகைப்படங்கள் போன்ற வரலாற்று ஆவணங்கள் பெரும்னமையானவை அகமுடையார் சமுதாயத்தின் அக்கறையின்மையால் அதை உரியவர்களிடமிருந்து பெற்று பாதுகாக்காததால் அழிந்துவிட்டன. இவற்றில் எஞ்சி தப்பித்த ஆவணங்களை
பெரு முயற்சியால் ( ஒரு முறைக்கு 10 முறை சென்று பேசி ,பார்த்து ,திரும்ப திரும்ப கேட்டு ,நேரில் சென்று பார்த்து என பெரு முயற்சி செய்து) தனது வீட்டில் சேகரித்து வைத்துள்ளார்.அப்படிப்பட்ட பெரு முயற்சியினால் தான் அகமுடையார் இயக்கங்கள்,நிகழ்வுகள், புகைப்படங்கள் என சில நம் பார்வைக்கு கிடைக்கின்றன.

இவ்வளவு முயற்சி செய்து அகமுடையார் சமுதாயத்திற்கு களப்பணி செய்துவரும் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்றால் இல்லை என்றே பதில் கூறவேண்டும்.

பழனியில் உள்ள இவரது வீடு முழுவதும் ஆவணங்கள் (இவற்றை நாமே நேரில் சென்று பார்த்தோம்) ஆனால் இவற்றை உரிய முறையில் பாதுகாக்க பீரோ போன்ற பொருட்கள் தேவை.

மேலும் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து பாதுகாக்க கம்யூட்டர், ஸ்கேனர் போன்றவை தேவை!

முக்கியமாக இவருடைய சேகரிப்புகளை மதுரை போன்ற மைய இடத்தில் வைத்து பாதுகாத்தால் நமக்கும் (அகமுடையார் ஒற்றுமைக்கும்) நம்மை போல அகமுடையார் சமுதாய வரலாற்று ஆய்வு செய்வர்களும் அடிக்கடி பார்வையிட உதவும். இதற்கும் உதவி தேவை!

பல்வேறு ஊர்களுக்கும் செல்கிறார் அங்கு தங்கி அகமுடையார்களை சந்தித்து வரலாற்று தகவல்களை சேகரிக்கிறார்.இதற்க்கெல்லாம் போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, உணவு போன்றவற்றிற்கு பொருள் செலவு நிச்சயம் ஆகும். இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு அகமுடையார் சமுதாயம் புரிந்து கொண்டு இவருக்கு பொருளதவி செய்ய வேண்டும். அகமுடையார் வரலாற்றை மீட்பதற்கல்ல பேசுவதற்கு கூட பெரும்பாலானோருக்கு நேரமில்ல்லை,அப்படி இருக்கையில் வரலாற்றை மீட்க உண்மையில் முயற்சி செய்வர்களுக்கு பொருளதவியாவது செய்ய வேண்டும்.

சேந்தங்குடி ஜமீன், அறம்தாங்கி தொண்டைமான்கள் ,சூரைக்குடி அரசு விசாயாலயத்தேவர் ,பல்லவராயர்கள் ,சோழர்,சேரர் ,வாணாதிராயர் என அகமுடையார் அரசுகள் பற்றி சம்பந்தப்பட்ட பகுதிகளில் களப்பணி செய்வது மிகவும் தேவையாக உள்ளது. இனியாவது அகமுடையார் சமுதாயம் அகமுடையார் வரலாற்று மீட்பு தேவையை உணர்ந்து அகமுடையார் வரலாற்று மீட்புக்கு வேண்டிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

அகமுடையார் ஒற்றுமைக்காக
மு.சக்திகணேஷ் சேர்வை( அகமுடையார் )
திருமங்கலம் (மதுரை)இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அண்ணன்

  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

  3. எங்களினே வழிகாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  4. இனிய பிற்தநாள் வாழ்த்துகள்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo