திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவின் 8ம் நாள் மண்டகப்படி வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் அவர்களின் மண்டகப்படி நிகழ்வாகும். இந்த வருடத்திற்கான நிகழ்வு இன்று (21-05-2024) அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வின் முடிவில் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை தொண்டு அறக்கட்டளை சார்பாக அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வை அறக்கட்டளையின் தலைவர் திரு.ரத்தினகுமார் அவர்கள் தலைமையேற்று சிறப்புடன் நடத்தி வைத்தார்.
நிகழ்விற்கு ஒத்துழைத்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் அனைவருக்கும் அகமுடையார் ஒற்றுமை சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்.
இம்மண்டகப்படி பற்றி சில வரிகள்
———————–
இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் பக்தர்களுக்காகவும் திருப்புல்லாணி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அவர்கள் சத்திரத்தை நிறுவினார். அச்சத்திரத்தில் பக்தர்களுக்கு தங்குமிடத்துடன் உணவும் வழங்கப்பட்டு வந்தது.
இதற்காக திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவின் 8ம் நாள் மண்டகப்படி வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
காலஓட்டத்தில் சத்திரமும் பாலாகி இருந்த இடமே தெரியாமல் புதர் மண்டியும் சமுக விரோதிகளின் ஆக்கிரமிப்பிலும் இருந்ததது.
இதை உணர்ந்த திரு.ரத்தினகுமார் அவர்கள் சில வருடங்கள் முன்பு பல்வேறு முயற்சிகளுக்கு பின் இச்சத்திரத்தை மீட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததோடு வருடந்தோறும் மண்டகப்படி நிகழ்வை சிறப்பாக நடத்தி வருகின்றார். அதற்காக அவருக்கு நமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
திரு.ரத்தினகுமார் அவர்கள் நிறுவனர் அகமுடையார் புலிப்படை என்ற அமைப்பையும் நிறுவி நடத்தி வருகிறார். மேலும் அகமுடையார் சமுதாய உணர்வாளர் திரு.சரவண பாண்டியன் அவர்களின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளையன் சேர்வை பற்றி சில வரிகள்
————————–
தென் தமிழகத்தின் பாளையக்காரர்கள் அனைவரையும் வென்றவர்
தஞ்சை மராட்டியர்களை தோல்வியடைய செய்து ஓடவைத்தவர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிலைகளை முகமதியரிடமிருந்து கொணர்ந்து மானாமதுரையில் பாதுகாத்தவர்
ஆங்கில தளபதி கோப்புடன் மோதி ஆங்கிலேய முகமதிய படைகளை வென்று
நாடிழந்த மதுரை நாயக்க மன்னர்கள் வாரிசான பங்காரு திருமலை நாயக்கருக்கு முடிசூட்டியவர்
ஒத்துவராத மன்னராக இருந்த சேதுபதியை மாற்றி புதியவரை சேதுபதியாக அறிவித்தவர் (அழிக்கவும் அரசர்களை உருவாக்குபவரகவும் திகழ்ந்ததால் கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்டார்)
மருதுபாண்டியரில் மூத்தவரான பெரிய மருதுபாண்டியரின் இயற்பெயரான வெள்ளை மருது என்பது வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையை நினைவாக வைக்கப்பட்ட பெயரே ஆகும்.
வெள்ளையன் சேர்வை பற்றி ஏற்கனவே வெளியிட்ட செய்திகளை ஆதாரங்களுடன் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்.
https://www.facebook.com/100063919813164/posts/581008924039763
மற்றொரு சந்தர்ப்பத்தில் வெள்ளையன் சேர்வை பற்றி விரிவாக பதிவு செய்கின்றோம்.
velliyan servai mandagapadi thiruppullani Adi Jagannatha Perumal Temple
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
முன்னெடுத்த உறவுகளுக்கு மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள்…