மதுரை ஆதீன குரு மூலவர் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருள்வதற்காக மாமன்னர் மருத…

Spread the love

First
மதுரை ஆதீன குரு மூலவர் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருள்வதற்காக மாமன்னர் மருதுபாண்டியர்கள் செய்வித்தளித்த வெள்ளித்தேர்!!

மதுரை ஆதீனத்தின் குருமூலவர் திருஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜைப் பெருவிழா, வைகாசி மூல நட்சத்திரத் திருநாளில் நடப்பதாகும். ஆண்டுதோறும், மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலிலிருந்து, திருஞானசம்பந்தப் பெருமான் உற்சவ மூர்த்தியை வெள்ளித் தேரில் எழுந்தருளச் செய்து, ஆவணி மூல வீதிகள் வழியாக. ஆதீன முகப்பிற்கு வந்து திருக்கண் சாத்தப் பெறுகின்றது. இந்த உற்சவ மூர்த்தியை, குருமகாசன்னிதானம் வழிபடுவதற்காகவே, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு வெள்ளித் தேரை உருவாக்கி அதனைக் காணிக்கையாகச் சமர்ப்பித்து ஆசிபெற்றவர்கள் “மாமன்னர் மருது பாண்டியர்கள்” இந்த வெள்ளித் தேர், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஒரு பெரிய உயரமான அறையில் பாதுகாப்பாக வைக்கப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும், திருஞானசம்பந்தப் பெருமானை, அத்தேரில் எழுந்தருளச் செய்வது, மரபாக இருந்து வருகிறது!

அந்த வழி வழி நிகழ்வு வரும் சனிக்கிழமை, 25/05/2024, மாலை : 05.30 மணியளவில்,

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அம்மன் சன்னதியிலிருந்து மதுரை ஆதீனம் வரை வெள்ளித்தேரோட்டம் இனிதே நடைபெற உள்ளது.

அகத்தமிழ் உறவுகளும், ஆன்மீக அன்பர்களும் தவறாது கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறோம்.

இவண்,
சேர்வைக்காரர் மண்டகப்படி திருப்பணிக்குழு, மதுரை.
தொடர்புக்கு : 94429 38890, 98421 43888,
70104 93288,இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo