@followers மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வழங்கிய வெளித்தேர் தேரோட்டம் வரும் சனிக்கிழமை (25-05-2024) அன்று நடைபெற உள்ளது! அனைவரும் வருக!
——————–
தேவராரம் பாடிய மூவரில் ஒருவரும் மதுரையில் ஆதினத்தை ஏற்படுத்தி சமயப்பணி புரிந்த ஆதின கர்த்தராகிய திருஞானசம்பந்தர் வீதி உலா வருவதற்காக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வெளித்தேர் ஒன்றை மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வழங்கியிருந்தார்கள்.
இது ஒவ்வொரு வருடமும் இந்த வெள்ளித்தேரின் தேரோட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
இந்த வருடம் இந்த நிகழ்வு வரும் சனிக்கிழமை அன்று (25-05-2024) அன்று மாலை 5.30 மணிக்கு மதுரை அம்மன் சன்னதியில் இருந்து ஆரம்பமாகிறது.
ஆகவே வாய்ப்புள்ள உறவுகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மருதுபாண்டியர் அளித்த அந்த வெள்ளித்தேரை நேரில் காணும் வாய்ப்பை பெறவேண்டும் என்பதோடு இறையருளையும் பெற உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
உறவுகளுக்கு மற்றுமொரு வேண்டுகோள்: தேரோட்ட நிகழ்வு நிறைவுறும் வரை உறவுகள் அவரவர் தனிப்பட்ட மற்றும் குருப்களின் டிபி படமாக (பார்க்க படம் 3) இப்படத்தை பயன்படுத்தியும் இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த குருப்களில் பகிர்ந்து கொண்டும் நிகழ்வை எல்லோருக்கும் கொண்டு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்