நாயக்கர்,ஆசாரிகள் உள்ளிட்ட பல்வேறு சாதியினரும் வழிபடும் மருதுபாண்டியர் ———…

Spread the love

நாயக்கர்,ஆசாரிகள் உள்ளிட்ட பல்வேறு சாதியினரும் வழிபடும் மருதுபாண்டியர்
———————————————————————
சில நாட்களுக்கு முன் வேற்று சமுதாயத்தைச் சேர்ந்த (கொண்டையன் கோட்டை மறவர் ) நண்பர் ஒருவர் பார்த்தீர்களா எங்கள் திருநெல்வேலியில் உள்ள கோவிலில் மருதுபாண்டியர் சிலை வைத்திருக்கிறோம் என்றார். அப்பொழுதே நான் பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன் ஆனால் அது வேறு ஒருவர் பதிவில் அவர் இட்ட கமேண்ட் என்பதால் விவாதத்தை வளர்க்காமல் விட்டு விட்டேன்(பொதுவாக வீண் விவாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை,வரலாற்றுத் தேடலுக்கே முழுநேரமும் செலவாகும் நிலையில் இத்தகையோரின் கமெண்டிற்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க எங்களுக்கு விருப்பமும் இல்லை அதையே சக அகமுடையார்களுக்கும் பரிந்துரைக்கிறோம் )

முதலில் மருதுபாண்டியர் விடுதலைப் போராட்டவீரர் ,தேசியத் தலைவர் அவர் பிறந்த இனம் அகமுடையார் சாதியாக இருக்கலாம் அதற்காக மருதுபாண்டியரை அகமுடையார் சாதிக்கு மட்டுமே என்று எவரும் கொண்டாட முடியாது,கொண்டாடவும் கூடாது!

இரண்டாவது மருதுபாண்டியரை தெய்வமாக வழிபடுவதால் ஒருவர் அகமுடையார் சாதி என்றாகி விடமுடியாது.இதோ நாங்குநேரியில் உள்ள ஒர் பகுதியில் மருதுபாண்டியருக்கு கோவில் கட்டி நாயக்கர் ,ஆசாரிமார் மற்றும் இன்ன பிற சாதியினரும் வணங்குகின்றனர்.இது மகிழ்ச்சிக்குரியது.ஆனால் மருதுபாண்டியரை வணங்குவதாலேயே அவர்களையும் அகமுடையார் சாதியும் ஒன்று என்று சொல்லமுடியுமா?

ஒரு சாதியில் பிறந்து தியாகம்/வீரச் செயல் பிறந்தவரை தெய்வமாக்கி குலதெய்வமான ஒருவரை , பல்வேறு சாதியினரும் தங்கள் குலதெய்வமாகக் கொள்ளுதல் தமிழர் மரபு,சிறப்பு! ஒரு குடும்பத்தாருக்கு/குலத்தாருக்கே நன்மை செய்தவரை பின்னாளில் பல்வேறு சாதிகளும் தெய்வமாக வணங்கும் மரபு உள்ள நம்நாட்டில் இந்த ஒட்டுமொத்த தேசத்திற்காகவே உயிர் தியாகம் செய்த மருதுபாண்டியரை இந்த தேசத்தில் உள்ளோர் அனைவருமே வணங்குதல் மிகப்பொருத்தமன்றோம்!

அவ்வகையிலேயே இவ்விசயத்தை நாங்கள் அணுகுகிறோம்!
நூல் அதாரம்: தென் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளில் இடம்பெயர்வு! பக்கம் எண் : 240,241 ஆசிரியர்: டாக்டர்.சு.தாமரைப்பாண்டியன்
Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

வரும் மே மாதம் 16ம் தேதி(16-05-2019) அன்று திருமண நாள் காண இருக்கும் அன்புத் தம்...
இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் அகமுடையார் மகள் மாலிகா திருமணப் புகைப்படங்கள்!
அகமுடையார் குலத்தோன்றல், முன்னாள் சபாநாயகர், முன்னாள் தமிழக அமைச்சர் வீரமிகு ...
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த #வேப்பூர் ஊருக்குள் பிரதான சமுதாயம் அகமுடையா...
நிரந்தர தொழில்வாய்ப்பு ,அருமையான வருமானம்-லக்கிமேட்ரிமோனியின் ப்ரான்சிஸ் உங்கள் ...
வேலூர் மாவட்டம், கே வி குப்பம் அடுத்த #வேப்பங்கனேரி மருதுபாண்டியர் இளைஞர் அணி......
சென்னை பாடியநல்லூர் பகுதியில் நடைபெற்ற அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழா
நாளை(அக்டோபர் 27 ) காளையார்கோவிலில் நடைபெற உள்ள குருபூஜைக்கு முன்னோட்டமாக காளையா...
அகம்படி நன்னன் கல்வெட்டும்-துளுவ வேளாளரும் -------------------------------------...
இன்று ( 23 மார்ச்) பிறந்தநாள்காணும் புதுச்சேரி மாநில அகமுடையார் அரண் அமைப்பாளரு...
அக்டோபர் 14 - முதலியார் சகோதரர்கள் என சான்றோர் பெருமக்களால் அழைக்கபடும் ஆற்காடு ...
மாவட்டத்தில் நடந்த சுதந்திர போராட்ட வீரர்கள் படக் கண்காட்சிக்கு அழைப்பு விடுக்கா...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo