@@followersபாகுபலி காட்டும் காலகேயர்கள் யார்?
—————————–
பாகுபலி படத்தில் காலகேயர்களை கவனித்திருக்கலாம். ஆனால் பாகுபலி படத்தில் காட்டப்படுவது போல் காலகேயர்கள் காட்டுமிராண்டிகளும் அல்ல நாம் நினைப்பது போல் காலகேயர்கள் கற்பனை பாத்திரமும் அல்ல.
இரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர்கள் இந்த நாட்டின் ஆதி பூர்வகுடி மக்கள். ஆனால் இவற்றையெல்லாம் நம் அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் ஏன் பேச வேண்டும்???
ஏன் என்றால் அந்த காலகேயர்கள் வேறு யாருமல்ல நம் அகமுடையார் சமுதாயத்தின் முன்னவர்கள்.
ஆனால் ஏன் காலகேயர்களை பாகுபலி படத்தில் காட்டுமிராண்டிகளாக காட்ட வேண்டும்?
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது இந்த நாட்டின் பூர்வகுடி மக்களாக இருந்த மக்களை தங்களின் எதிரிகளை அழைக்க பயன்படுத்திய அதே அசுரர் என்ற பெயர்களில் குறிப்பிட்டனர்.
அப்படிப்பட்ட ஓர் அசுர இனக்குழு தான் தானவர்கள் எனும் பூர்வகுடி மக்கள். அந்த தானவர்களில் ஓர் பிரிவினர் தான் காலகேயர் என்பவர்கள்.
காலகேயர்கள் மகாபாரதம் உள்ளிட்ட புராதன இதிகாச மற்றும் இலக்கியங்களில் தானவ இனத்தை சேர்ந்த அசுரர்கள் என குறிப்பிடப்படுகின்றனர்.
ஆதாரம்: மகாபாரதம் வனபர்வம் 172-175
காலன் என்பது எமனையும் காலா என்பது சமஸ்கிருதத்தில் கறுப்பு நிறத்தையும் குறிக்கும்.
வெண்மை நிறத்திலான ஆரியர்கள் கடும் வெயில் காயும் இந்தியாவின் பூர்வகுடிமக்களின் கறுப்பு நிறத்தை கண்டு அவர்களை அதே நிறத்திலேயே தங்கள் நினைவுகளில் குறித்தனர்.வர்ணாசிரமம் என்பது கூட வண்ணத்தை குறிப்பதாகும்,ஆரியர் ,பூர்வகுடி மக்களை வெண்மை கறுப்பு நிறத்தின் அடிப்படையிலே பிரிக்க ஆரம்பித்த வர்ணாசிரமம் எனும் நிற அடிப்படியிலான அமைப்பு முறை பின்னாளில் இன்னும் பல பகுப்புகளாக பிரிந்து சாதி முறையாக வளர்ந்தது எனலாம்.
காலகேயர் என்பவர்கள் தனும் அனும் அசுர குலத்தவள் (அரக்கி என்று அழைக்கப்பட்டவளின்) மகளான காலகா என்பவளின் வழியினர் ஆவர். காலா என்றால் சமஸ்கிருதத்தில் கருப்பு என்ற பொருள் உள்ளதை ஏற்கனவே கூறினோம் அல்லவா.
ஆரியர்கள் பூர்வகுடிமக்களை அசுரர் என்றும் இருள் வடிவமாக அழைப்பது வழக்கமாகும்.
இன்றும் தென் மாவட்ட அகமுடையார்களின் முக்கிய குலதெய்வங்களாக கருப்பசாமி, இருளாயி,இருளப்பன், ராக்காயி போன்றோர் விளங்கி வருகின்றனர். இந்த தெய்வங்கள் அனைத்துமே கறுப்பு நிறத்தையும் இருளையும் வெளிப்படுத்துவையாக உள்ளன. இன்று இந்த தெய்வங்கள் அனைத்து சமுதாய மக்களும் வழிபடும் தெய்வங்களாக மாறிவிட்டன. அதேபோல் அகமுடையார் சமூகத்தவரும் வேறு பல குலதெய்வங்களையும் வணங்கி வந்தாலும் இன்றும் எந்த குலதெய்வமாக இருந்தாலும் அதில் பரிவார தெய்வமாக கருப்பசாமி, இருளாயி,இருளப்பன், ராக்காயி தெய்வங்கள் இருந்தே தீரும். தென்மாவட்டத்தில் இந்த வழக்கம் இன்றும் வலுவாக வேரூன்றி உள்ளது.
இவை அகமுடையார் இனத்தின் ஆதி தெய்வங்கள் யார் என்பதை விளக்கும் ஆதாரங்களாக உள்ளன.அகமுடையார்கள் இந்த வரலாற்றை மறந்திருந்தாலும் எதிர்தரப்பினர் அகமுடையார்களின் 5000 வருட வரலாற்றை தெளிவாக பதிவு செய்துள்ளனர்.
அவ்வகையில் அகமுடையார் சமுதாயம் 5000 வருட வரலாற்றை எழுதப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளதோடு அதை இன்றும் கடைபிடித்து வருகின்றன.
இவற்றை எல்லாம் வரும் காலங்களில் விளக்க இருக்கின்றோம்.
மேலதிக தகவல்
ஆரியர்கள் பூர்வகுடி மக்களை அசுரர் என்றும் கறுப்பு என்று நிற அடிப்படையில் பிரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை பன்றியாகவும், பாம்பாகவும் கொடூர விலங்காகவும் வர்ணித்துள்ளனர்.
எதிரிகள் எப்படி வேண்டுமென்றாலும் எழுதிவிட்டு போகட்டும் ஆனால் மறைமுகமாகவும் ,நேரடியாகவும் ஓர் உண்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. அது தானவர் எனும் இந்த அசுர வழியினரான அகமுடையார்கள் இந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் இந்த நாட்டின் ஆதி அரசர்கள் ஆவர் என்பதாகும்.
எதிரி என்ற காரணமாக காலகேயர்களை ஆரியர்கள் காட்டுமிராண்டிகளாக ,கொடுரர்களாக சித்தரித்தார்கள் சரி! ஆனால் பாகுபலி படத்தில் ஏன் அவ்வாறு காட்ட வேண்டும்? இதற்கு பின் தமிழர் வெறுப்பு காரணமா அல்லது ஆரியத்தை பின்பற்றி காலகேயர்களை வில்லனாக காட்ட வேண்டும் என்ற நோக்கமா?
தானவ அசுரர்களை பற்றி ஏற்கனவே செய்த பதிவுகளை பார்க்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் பார்க்க முடியும்.
https://www.agamudayarotrumai.com/?s=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5&post_type=post
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்