@followers மருதுபாண்டியர் அருங்காட்சியகமும் ,அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டும்
——————
அகமுடையார் வரலாறு குறித்த தெளிவான வரலாற்று நூலை 20 வருடங்களுக்கு முன்பு எழுதி வேறு ஒருவர் பெயரில் வெளியிட்டவரும் ,ஒரிரு வருடத்திற்கு முன்பு “வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்” நூலை பெரு முயற்சியில் எழுதி வெளியிட்ட தனது பெயரை வெளியிட விரும்பாத அண்ணன் ஒருவர் ஒரு யோசனையை குறிப்பிட்டார்.
அதாவது தஞ்சாவூரில் செயல்படும் “Food Museum” ஒன்றை சுட்டிக்காட்டி இது போல் மருதுபாண்டியர்களுக்கும் ஓர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் . நமது மக்கள் இது குறித்து வலியுறுத்த வேண்டும் என்றார்.
மிகவும் அருமையான யோசனை. இது மாதிரி அருங்காட்சியகம் அமைத்தால் மருதுபாண்டியர் பயன்படுத்திய பொருட்கள், அவர் வெளியிட்ட கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ,கலை பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி மருதுபாண்டியர் பெயரை உட்சத்திற்கு கொண்டு செல்லலாம்.
சில வருடங்கள் முன்பு எனக்கு ஒரு தீவிர ஆசை தோன்றியது. அதாவது மருதுபாண்டியர் வெளியிட்ட நாணயங்களை அறிந்த போது, எந்த விலை கொடுத்தாவது அதை பெற்று நம் மக்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஏற்கனவே பொருளாதாரத்தை செலவழித்து விட்ட நிலையில் அது இன்றும் கனவாகவே இருக்கின்றது.
ஆனால் இது போன்ற அருங்காட்சியகம் அமைத்தால் மருதுபாண்டியர்களின் நினைவுபடுத்தும் ஒவ்வொரு பொருளையும் சேகரித்து காட்சிப்படுத்த முடியும்.
இந்த யோசனையை அரசு நிறைவேற்ற சொல்லி நாம் முயற்சிகளை முன்னெடுத்தாலும் சரி,தனிபட்ட முயற்சியிலும் கூட செய்யலாம்.
எது எப்படியோ மருதுபாண்டியர் வெளியிட்ட நாணயங்களை என்ன விலை கொடுத்தாவது பெற வேண்டும் என்ற என்னுடைய முனைப்பு இன்றும் உள்ளது.
கடந்த 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் , மருத்துவமனைகளில் பல்வேறு பரிசோதனைகள் , மருத்துவத்திற்கும் அலைந்து கொண்டிருந்ததாலும் சில விசயங்களை தீவிரமாக முயற்ச்சி செய்ய முடியவில்லை, தீவிரமாக எழுதவும் முடியவில்லை. இருப்பினும் வரும் காலங்களில் இது குறித்து தீவிரமாக முயற்ச்சி செய்வோம்.
அகமுடையார் ஒற்றுமை தளம் ரெனுவல் செய்யப்பட்டது
———————————
அகமுடையார் ஒற்றுமை இணைய தளம் மற்றும் அப்ளிகேசனை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகின்றோம்.
பேஸ்புக்கில் நாம் வெளியிட்ட ஓர் பதிவை பார்க்க வேண்டுமென்றால் ஒவ்வொரு பதிவாக கீழே சென்று தேடி பிடிக்க வேண்டும். பல காலம் முன்பு செய்த பதிவு என்றால் அந்த பதிவை தேடி பிடித்து எடுப்பதற்குள் நேரமும் உழைப்பும் ஓடிவிடும்.
அதேநேரம் அகமுடையார் ஒற்றுமை இணைய தளத்தின் சிறப்பு என்னவென்றால் அதில் உள்ள பதிவுகளை எளிதாக சர்ச் செய்து எடுத்து விடலாம்.
உதாரணத்திற்கு அகமுடையார் சாதியில் பல்லவராயர் பற்றிய வரலாற்று பதிவுகளை பார்க்க விரும்பினால் வெப்சைட் சென்று அதில் உள்ள சர்ச் பாக்ஸ்சில் பல்லவராயர் என்று டைப் செய்து தேடினால் பல்லவராயர் பற்றி இதுவரை பதிவிட்ட எல்லா பதிவுகளையும் உடனே தேடி பார்த்து விட முடியும்.
ஆகவே அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் என்பது மிகவும் முக்கியமானது.
இத்தகைய அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் ரெனுவல் சில நாட்கள் முன்பு வந்தது.
பல வருடங்களாக பல்வேறு முயற்சிகளை எளிதாக செய்துள்ளோம் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் சுமை காரணமாக சிறிது தடை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் 12வது வருடமாக அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் டிற்கான டொமன் மற்றும் ஹோஸ்டிங் ரெனுவல் செய்துவிட்டோம்.
ஆகவே நாங்கள் உங்களிடம் கேட்பதெல்லாம் நமது அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் உள்ள தகவல்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான். நம்பிக்கையுடன்.
அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்: AgamudayarOtrumai.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்