இன்றைய விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் …

Spread the love
0
(0)

இன்றைய விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்ச்சவ விழாவின் 2ம் நாள் திருவிழா
துளுவ வேளாளர் சமூகம் ( அகமுடையார் ) சமூகத்திற்கு உரியதாகும்.

இத்திருவிழாவின் மாலை நிகழ்வில் ஶ்ரீ வரதராஜ பெருமாள் ,இறைவிகளுடன் துளுவ வேளாளர் சமூகம் ( அகமுடையார் ) சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிகழ்வில் துளுவ வேளாளர் சமூகம் ( அகமுடையார் ) பெரியோர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டதோடு
நமது சமுதாய மகளிர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தி நிகழ்ச்சிகளை கொண்டாடினர்.

மேலதிக தகவல்கள்
இங்கு மட்டுமல்ல அகமுடையார்களுக்கு மற்ற இடங்களில் கூட சந்திர பிரபை வாகனும் மண்டகப்படி மரியாதைகள் வழங்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு திருவள்ளூர் மாவட்டம்..
திருவாலங்காடு வாராண்டயேஸ்வரசாமி என்கிற பழமையான கோவிலில் அகமுடையார்களுக்கு சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை மரியாதைகள் ,வாகனம் பழங்காலமாக வழங்கப்படுகிறது.
இதன் புகைப்படத்தை பார்க்க லிங்க்:
https://www.facebook.com/100079996596549/posts/217277937615425

நன்றி:
இந்த நிகழ்வு சம்பந்தமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சேகரித்து நமது பார்வைக்கு அனுப்பிய சகோதர் திரு. மதியழகன் அகமுடையார் அவர்களுக்கு மிக்க நன்றி! சகோதர் திரு. மதியழகன் பண்ருட்டி நகரில் பிளம்பிங் மற்றும் ஆட்டோ டிரைவராக பணிபுரிகிறார் இருப்பினும் அவருடைய சமுதாய உணர்வு பாராட்டத்தக்கது. இவரது ஊரின் அருகில் உள்ள உறவுகள் சமுதாய உணர்வுள்ள மதியழகன் அவர்களின் தொழிலுக்கு உதவி செய்து முன்னேற உதவி செய்ய வேண்டும் என்பது நமது தனிப்பட்ட வேண்டுகோள். வாய்ப்பு அளித்தால் அவர்களும் முன்னேறுவார்கள் நமக்கும் நம்பிக்கையான ஆட்கள் கிடைப்பார்கள்.

இது போன்ற ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அகமுடையார் நிகழ்வுகளை நம்மிடம் அனுப்பி நாம் பதிவு செய்யும் போது ஒரு ஊரில் உள்ள அகமுடையார்கள் மற்றோரு ஊரில் உள்ள அகமுடையார்களை தெரிந்து கொள்ள உதவும். ஒருவருக்கொருவர் உதவுவதும் சாத்தியமாகும்.

ஆகவே அகமுடையார்களே அகமுடையார் சம்பந்தமான இயக்க செய்திகள் ,பொது நிகழ்வுகள், திருவிழாக்கள் பற்றிய செய்திகளை 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பினால் அதை நமது பல்வேறு சேனல்களில் இலவசமாக நீங்கள் விரும்பினால் உங்கள் பெயருடன் வெளியிடுவோம்

ஆனால் சூரிய குலமான அகமுடையாருக்கு ஏன் சந்திரபிரபை
——————————————-
அகமுடையார்கள் இந்திரகுலம் என்று கூறிக்கொண்டதெல்லாம் மிகவும் தற்காலிகமானது ஆகும். இந்திரன் எனும் ஆரிய கடவுளை தமிழர் சமுதாயத்தில் உட்புகுத்தினர் இந்த இந்திரன் மழைக்கான கடவுளாக உருவகம் செய்யப்பட்டதால் பயிர் செழிப்பதற்கும் நிலம் வளமையடையவும் இந்திரனை கடவுளாக மையப்படுத்தினர்.
ஆனால் எவ்வாறு இருந்தாலும் ஆரிய இந்திரன் 2000 வருடங்களுக்கும் மேலாக தமிழர் சமயத்தில் உட்புகுந்து விட்டது. சரி இப்போது விசயத்திற்கு செல்வோம்.

மிகவும் பிற்காலத்தில் எல்லா பகுதியில் உள்ள அகமுடையார்களும் வேளான்மையில் பெரிதும் ஈடுபட தொடங்கியதால் மழை,நிலத்திற்கு அடையாளமான இந்திரனை அடையாளம் கொண்டு மிகவும் பிற்காலத்தில் சில இடங்களில் “இந்திர குலம் ” என்று தங்களை தற்காலிகமாக பதிவு செய்தனர்.

ஆனால் உண்மையில் அகமுடையார்கள் தங்களை

சூரிய குலம் என்றும் அதன் மற்றொரு பிரிவான மஹாபலி குலம் என்றும் 2000 வருடங்கள் முன் இருந்து சமீபத்திய 50 வருடங்கள் முன்பு வரை தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளனர். அகமுடையார்கள் சூரிய குலம் ,மஹாபலி குலம் என்பதே உண்மையான ஆதி குலங்கள் ஆகும். இந்திர குலம் ,சந்திர குலம் என்பதெல்லாம் விதிவிலக்குகள்,

அதை போலவே

பாண்டியர் பகுதிகளை ஆட்சி செய்ததால் மஹாபலி குலத்தவர்களான வாணர்களும் தங்களை பிற்காலத்தில் சந்திர குலம் என்றும் சந்திரனை அடையாளமாக கொண்டும் ஒரு சில இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

உதாரணமாக

மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூர்,மாறநாடு பகுதிகளை ஆட்சி செய்த தஞ்சை வாணன் எனும் வாணர் குல அரசரை
மகத்தில் சனி அன்ன சந்திர வாணன்” என்று அதே வாணர் மன்னரால் எழுத்துவிக்கப்பட்ட “தஞ்சை வாணன் கோவை” எனும் பழம் நூல் குறிப்பிடுகிறது.
ஆதாரம்: நூல் : வாணாதிராயர்கள் ,பக்கம் எண் 10

இதன் புகைப்படத்தை பார்க்க லிங்க்:
https://www.facebook.com/100063919813164/posts/685792540228067

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் கூட பாண்டிய நாட்டின் பூர்வ அரசர்களாகிய பாண்டியர் அரசகுலத்துர்குறிய பாண்டியர் என்ற பெயரை கொண்டதோடு அவர் காலத்தில் இருந்த புலவர்கள் இலக்கியங்களில் மருதுபாண்டியரை யது குலம் என்றும் நந்தகோபால குலம் என்றெல்லாம் பாடியுள்ளனர் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் ஆதி பாண்டியர் என்ன குலம் என்பதையும் எவரும் அறிந்துகொள்ள முடியும்

சொல்லிக்கொண்டே போனால் இது போன்ற நிறைய நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். மற்றொரு சந்தர்பத்தில் விரிவாக பேசுவோம் .இப்பதிவில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளோம் மற்றொரு பதிவில் வீடியோ பதிவு செய்கின்றோம்.

cuddalore district panruti varatharaja perumal kovil yearly pramotchavam year 2024 festival inrandam naal urchavam agamudayar thuluva vellalar community chandra pirabai vaganam






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Agamudayar Otrumai
Logo
× How can I help you?