நேற்று(05-04-2024) அன்று நடந்த மன்னார்குடி அகமுடையார்களின் தங்க சூர்ய பிரபை நிகழ…

Spread the love

நேற்று(05-04-2024) அன்று நடந்த மன்னார்குடி அகமுடையார்களின் தங்க சூர்ய பிரபை நிகழ்ச்சி குறித்து தினகரன் நாளிதழில் வெளியான செய்தி

குறிப்பு:
பல இலட்சங்கள் செலவு செய்து வானவேடிக்கை ,அலங்காரம் என என்னவென்வோ செய்கிறார்கள். 5000ரூபாய் வீடியோகிராபருக்கு கொடுத்தால் மாலை நிகழ்ச்சி முழுவதையும் நேர்த்தியாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தந்து விடுவார். ஓர் ஆவணமாக இருக்கும். பல இலட்சக்கங்கள் செலவழித்துவிட்டு அந்த நிகழ்ச்சியை பற்றி வெளியில் பெரிதாக தெரியவில்லை என்றால் அதனால் பலன் என்ன? வானவேடிக்கைக்கு மட்டும் இலட்சக்கணக்கில் செலழிக்கும் போது வருடத்தில் ஒரு முறை நடக்கும் விழாவிற்கு 5000 செலவழித்து ஆவணப்படுத்தக் கூடாதா?

அல்லது யாராவது ஒருவர் பொறுப்பு எடுத்து நிகழ்ச்சி முழுவதையும் மொபலில் வீடியோ எடுத்து இருந்தால் நிகழ்ச்சியை அனைவரும் அறியும்படி வெளியில் சிறப்பாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் வழக்கம் போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வினாடிகள் வீடியோ கிடைக்கும்.

ஆனால் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல எந்த அகமுடையார் நிகழ்ச்சி என்றாலும் இதை செய்வதற்கு ஆட்கள் இல்லை.

எல்லா அகமுடையார் திருவிழாக்கள்,நிகழ்வுகளிலும் இதே கதை தான். முறையாக அவணப்படுத்துவது கிடையாது ,ஆவணப்படுத்தாதால் ஆதாரங்களை தொலைத்துவிட்டு பின்னர் தேடுவது. சேர்வைக்காரர் மண்டபம் பிரச்சனையே இதற்கு ஓர் நல்ல உதாரணம்!

இனியாவது பழகிக்கொள்ளுங்கள்! நிகழ்ச்சி நடத்துவது ஒர் முக்கிய விடயமென்றால் அதை ஆவணப்படுத்துவது அதனினும் முக்கியம்.

அகமுடையார்களே உங்கள் ஊரில் நடக்கும் அகமுடையார் சம்பந்தமான கோவில் ,திருவிழாக்கள் நிகழ்வுகளை
நம் அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பலாம்.
எல்லோரும் பார்க்கும்படி நாம் வெளியிடுவோம்.
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் நம்பர்: 072005 0762929 ( 7200507629)


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo