சேந்தன்குடி ஜமீன் – “அகமுடையார் ஜமீன்” ————————- வழுவாட்டியார், வ…

Spread the love
0
(0)

First
சேந்தன்குடி ஜமீன் –
“அகமுடையார் ஜமீன்”
————————-
வழுவாட்டியார், வாழுவாட்டி, வழுவாட்டித்தேவர் மரபினர்கள் – அகமுடையார் சாதியே – நீதிமன்ற ஆவணம்.

அகமுடையார் சாதியில் வன்னியர் என்ற பட்டப்பெயர் உள்ளது என்பதற்கும், சேந்தன்குடி ஜமீன் அகமுடையார் என்பதற்கும் நேற்று நீதிமன்ற ஆவணத்தில் ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியே இந்த ஆவணம். நேற்று வெளியிட்ட நீதிமன்ற ஆவணம் இந்த நீதிமன்ற தொகுப்பு நூலில் இருந்தே பெறப்பட்டதே (பார்க்க படம் 1)

புதுக்கோட்டை பகுதியை பொறுத்தவரை
அறந்தாங்கி அரசு, வழுத்தூர் அரசு, நெடுவாசல் அரசு, சூரைக்குடி அரசு, பெரம்பூர் அரசு உள்ளிட்ட அகமுடையார் சிற்றரசுகள் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக சோழ, பாண்டிய பெருவேந்தர்களுக்கு கீழ் அரசாட்சி செய்துள்ளனர்.

அப்படி பாரம்பரியாமாக ஆட்சி செய்த வழியினர், பின்னாட்களில் அந்நியர் படையெடுப்பின் காரணமாக, தாங்கள் ஆட்சி பகுதி சுருங்கி ஜமீன் என்ற அளவிற்கு சுருக்கப்பட்டனர்.

அப்படிப்பட்ட ஓர் ஜமீனே, பழைய தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் சேர்ந்த, தற்போது புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், சேந்தங்குடி, நகரம், கீரமங்கலம், குலமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சேந்தங்குடி ஜமீனாகும்.

சேந்தன்குடி ஜமீன் பகுதி சுற்றி பரவி வாழ்ந்து வந்த அகமுடையார் பேரினம், சேந்தன்குடி ஜமீன் வரலாற்றை முழுமையாக அறியாமல், தங்களுக்குள் தொடர்புகளை பேணாததால் பின்னாட்களில் வந்த அகமுடையார்கள், சேந்தங்குடி ஜமீன், அகமுடையார் ஜமீன் என்பதை அறியாமலே விட்டு விட்டனர்.

அதே போல், சேந்தங்குடி ஜமீன் வரலாற்றை பற்றி பதிவு செய்த ஆங்கிலேயர்களும், தனிநபர்களும் நேரடியாக அப்பகுதியில் கள ஆய்வு செய்யாமலும், ஜமீன் வாரிசுதாரர்களை நேரடியாக சந்தித்து விசாரிக்காமலும் வாய்மொழியாக துபாஷிகள் சொன்னதை கேட்டதை அப்படியே எழுதிக்கொண்டனர்.

ஆனால், சேந்தங்குடி ஜமீன், அகமுடையார் ஜமீன் என்பதும், அதை சுற்றி பல்வேறு ஊர்களில் வாழும் ஜமீன்தார்களின் உறவினர்கள், அகமுடையார் சமுதாயத்தினர் என்பதும் அப்பகுதியில் வழங்கி வரும் ஆயிரக்கணக்கான நிலப்பத்திரங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஏற்கனவே சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் சாதியை சார்ந்தவர்களே என்பதற்கான நிலப்பத்திரங்களின் ஆவணங்களை பதிவிட்டுள்ளோம். இனி வரும் காலங்களில் நிறைய நிலப்பத்திர ஆவணங்களை வெளியிட உள்ளோம்.

அதுமட்டுமல்ல, இன்றும் வாழும் சேந்தங்குடி ஜமீன் வாரிசுகள் தங்களை அகமுடையாராகவே பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான திருவிழா உரிமை “கரை” என்பது “அகம்படியர் கரை” என்றே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, சேந்தங்குடி ஜமீன் சொத்துக்களை மற்றவர்களுக்கு எழுதி கொடுத்தது சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகள் நடந்த போது
நீதிமன்றத்தில் ஜமீன் வாரிசுகள் தாங்கள் என்ன சாதி என்பதை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர்.

அப்படிப்பட்ட வழக்கு ஆவணம் ஒன்றில், சேந்தன்குடி ஜமீன் வாரிசுகள், வழுவாட்டித்தேவர் என்பவர்கள் தங்களை அகம்படியர் சாதி (இன்றைய அகமுடையார் சாதி) என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளனர்.

சுதந்திரத்திற்கு முன் நடந்த இந்த நீதிமன்ற வழக்கில் வாதி (வழக்கு தொடுத்தவர், இங்கு சொத்தை பெற்றவர்), பிரதிவாதி (இங்கு ஜமீன் வாரிசுகள்) என்பவர்கள் அனைவருமே அகம்படியர் சாதியை சேர்ந்தவர்கள்
(பார்க்க, படம் இணைப்பு : 2, 3)

இணைப்பு படத்தை படிக்க முடியாதவர்களுக்காக அவர்களின் பெயர்களை தமிழில் டைப் செய்து கீழே கொடுத்துள்ளோம்.

வாதி (வழக்கு தொடுத்தவர்)
———————
1) M.K.சொக்கலிங்கம் பிள்ளை,
த/பெ, களப்பன் கங்காணியார்
அகம்படிய சாதி, வயது 59, குடியிருப்பு : பனங்குளம், பட்டுகோட்டை தாலுகா.

பிரதிவாதி (எதிர் மனுதாரர்கள்)
—————-
1) சி.மேகவர்ணம் வழுவாட்டியார்,
த/பெ, சின்னசுவாமி வழுவாட்டியார்,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 51, குடியிருப்பு : பனங்குளம், பட்டுகோட்டை தாலுகா.

2) துரை முத்துவேல் வழுவாட்டியார், த/பெ, கருப்பண்ண வழுவாட்டியார்,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 33, குடியிருப்பு : கீரமங்கலம், பட்டுக்கோட்டை தாலுகா.

3) முத்துச்சாமி வழுவாட்டியார்,
த/பெ, பெரியதம்பி என்கிற முத்துச்சாமி, வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 22, குடியிருப்பு : நகரம், பட்டுக்கோட்டை தாலுகா.

4) துரைச்சாமி, த/பெ, சேதுபதி,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 19, குடியிருப்பு : கீரமங்கலம், பட்டுக்கோட்டை தாலுகா.

5) மைனர் சின்னத்தம்பி,
த/பெ, சேதுபதி,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 10,
குடியிருப்பு : கீரமங்கலம், பட்டுக்கோட்டை தாலுகா.

6) சொ.சிங்கமுத்து,
த/பெ, சொக்கலிங்கம்,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 46,
குடியிருப்பு : நகரம், பட்டுக்கோட்டை தாலுகா.

7) சொ.சுப்பிரமணியன்,
த/பெ,சொக்கலிங்கம் வழுவாட்டித்தேவர்,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 43, குடியிருப்பு : நகரம், பட்டுக்கோட்டை தாலுகா.

8) சொ.மேகவர்ணம்,
த/பெ, சொக்கலிங்கம்,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 39, குடியிருப்பு : நகரம், பட்டுக்கோட்டை தாலுகா.

9) சி.முத்துத்துரை, த/பெ, சின்னசுவாமி என்கிற தெய்வசாமி,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 36,
குடியிருப்பு : நகரம், பட்டுக்கோட்டை தாலுகா.

10) சி.சிங்காரவேலு, த/பெ, சின்னச்சாமி என்கிற தெய்வசாமி,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 33, குடியிருப்பு : கீரமங்கலம், பட்டுக்கோட்டை தாலுகா.

11) சி.கருப்பையா, த/பெ, சின்னச்சாமி என்கிற தெய்வசாமி,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 30,
குடியிருப்பு : கீரமங்கலம், பட்டுக்கோட்டை தாலுகா.

12) சி.கண்ணையா, த/பெ,சின்னச்சாமி என்ற தெய்வசாமி,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 26, குடியிருப்பு : கீரமங்கலம், பட்டுக்கோட்டை தாலுகா

13) சி.அருணாச்சலம்,
த/பெ, சின்னசாமி,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 26, குடியிருப்பு : பனங்குளம், பட்டுக்கோட்டை தாலுகா.

14) சி.சின்னத்துரை,
த/பெ, சின்னசாமி வழுவாட்டியார்,
வழுவாட்டி அகம்படிய சாதி, வயது 40, குடியிருப்பு : பனங்குளம், பட்டுக்கோட்டை தாலுகா.

15) அப்பன் என்கிற குமாரசாமி சேர்வை,
த/பெ, முத்துச்சாமி சேர்வை,
அகம்படிய சாதி, வயது 33, குடியிருப்பு : கீரமங்கலம், பட்டுக்கோட்டை தாலுகா.

ஆதாரம்: Part L
Record of Proceedings
In the court of the District Judge of West
Thanjore at Tanjore

குறிப்பு:
சில பெயர்கள் தெளிவாக புகைப்படம் எடுக்காததால் சில பெயர்களை வெளியிட முடியவில்லை மற்றொரு சந்தர்பத்தில் தெளிவாக அனைத்து பெயர்களையும் வெளியிடுகின்றோம். ஆனால், நாம் வெளியிட்டுள்ள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படும் ஜமீன் குடும்பத்தவர் உள்ளிட்ட அனைவருமே அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் தான்.

இன்னும் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகவும் பின்னர் நூல் தொகுப்பாகவும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

நன்றி:
இந்த நீதிமன்ற ஆவணத்தை திரட்டி, நம் பார்வைக்கு அனுப்பிய அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நமது நன்றி!

இதுபோல், வரலாற்றை திரட்டி அதை வெளியிடுவது சாதாரண பணி அல்ல. ஒரு முறைக்கு பல முறை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும். போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, உணவுக்கான செலவு , பொறுமையாக இருந்து பேசி , ஆவணங்கள் திரட்டி (இடங்களை புகைப்படம் எடுத்து, ஆவணங்களை ஸ்கேன் செய்து, ஜெராக்ஸ் எடுப்பது) என ஆவணங்களை சேகரிக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி நம்முடைய பொன்னான நேரம், வாழ்க்கையை இதற்காக செலவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் பெரும் பணி!

அகமுடையார் அரண், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் கடந்த 15 ஆண்டு காலமாக இதே போல் ஏராளமான அகமுடையார் வரலாறு சார்ந்த ஆவணங்களை சிரமப்பட்டு சேகரித்து வைத்துள்ளார்.

ஏற்கனவே, பல்வேறு ஆவணங்களை அக்கறையின்மையால் தொலைத்துவிட்டோம். காலங்கள் செல்ல செல்ல ஆவணங்களில் 98% அழிந்தும் விடும். சமுதாயம் இப்பணிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் மிச்சம் இருக்கிற ஆவணங்களும் அழிந்து முழுக்க பயன்படாமலே அகமுடையார் வரலாறு மீட்கப்படாமலே சென்று விடும்.

மேலதிக லிங்குகள்
—————–
ஏற்கனவே வெளியிட்ட ஆவணங்களை பார்க்க விரும்புவர்களுக்காக லிங்குகள்

அகம்படியர் சாதி- வன்னியர் பிரிவு
https://www.facebook.com/agamudayarotrumai/posts/859589359515050

சேந்தன்குடி ஜமீன் வழுவாடியார்கள் – அகமுடையார் சாதியினரே – நிலப்பத்திர ஆவண ஆதாரம் பதிவு -1

https://www.facebook.com/agamudayarotrumai/posts/657517533055568

கீரமங்கலம் சேர்வைக்காரர் – அகம்படியர் முதல் கரைக்காரர் சேவி புஞ்சை
https://www.facebook.com/agamudayarotrumai/posts/713096267497694

கட்டுரையாக்கம்,
மு.சக்திகணேஷ் அகமுடையார்,
அகமுடையார் ஒற்றுமைத்தளம்,
——————————
அகமுடையார் வரலாற்று மீட்புப்பணியில…
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.

இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

  1. வாழ்த்துக்கள்

Agamudayar Otrumai
Logo
× How can I help you?