@followers வழுவாடியார், வழுவாடி ,சேந்தன்குடி ஜமீன் அகமுடையார்களே -கோர்ட் ஆவணம் ஆதாரம்.
———————
அகமுடையாரில் வன்னியர் என்ற பிரிவு உள்ளது என்பதற்கும் சேந்தன்குடி ஜமீன் அகமுடையார் என்பதற்கும் நேற்று நீதிமன்ற ஆவணம் வெளியிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சியே இந்த ஆவணம். நேற்று வெளியிட்ட நீதிமன்ற ஆவணம் இந்த நீதிமன்ற தொகுப்பு நூலில் இருந்தே பெறப்பட்டதே (பார்க்க படம் 1)
புதுக்கோட்டை பகுதியை பொறுத்தவரை
நெடுவாசல்,அறந்தாங்கி, நேமநாடு மற்றும் சேந்தன்குடி பகுதிகளை 1000 வருடங்களுக்கும் மேலாக பாரம்பரியமாக ஆட்சி செய்துள்ளனர்.
அப்படி பாரம்பரியாமாக ஆட்சி செய்த வழியினர் பின்னாட்களில் மாற்றார் படையெடுப்பின் காரணமாக தாங்கள் ஆட்சி பகுதி சுருங்க ஜமீன் என்ற அளவிற்கு சுருக்கப்பட்டனர்.
அப்படிப்பட்ட ஓர் ஜமீனே புதுக்கோட்டை கீரமங்கலம் பகுதியை சேர்ந்த சேந்தங்குடி ஜமீனாகும்.
இந்த ஜமீனை பற்றி அருகில் இருந்த அகமுடையார்களே தங்களுக்குள் தொடர்புகளை பேணாததால் பின்னாட்களில் வந்த அகமுடையார்கள் சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் என்பதை அறியாமலே விட்டு விட்டனர்.
அதேபோல் சேந்தங்குடி ஜமீன் பற்றி வெளியில் இருந்து வந்தவர்களும் தங்கள் கேட்டதை தீரவிசாரிக்காமல் அப்படியே எழுதிக்கொண்டனர்.
ஆனால் சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் ஜமீன் என்பதும் அதை சுற்றி பல்வேறு ஊர்களில் பல்வேறு பட்டங்களில் வாழும் ஜமீன்களின் உறவினர்கள் அகமுடையார் சமுதாயத்தினர் என்பதும் அப்பகுதியில் வழங்கி வரும் ஆயிரக்கணக்கான நிலப்பத்திரங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஏற்கனவே சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் என்பதற்கு நிலப்பத்திர ஆவணங்களை பதிவிட்டுள்ளோம். இனி வரும் காலங்களில் நிறைய நில ஆவணங்களை வெளியிட உள்ளோம்.
அதுமட்டுமல்ல இன்றும் வாழும் சேந்தங்குடி ஜமீன் வாரிசுகள் தங்களை அகமுடையாராகவே பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான திருவிழா உரிமை கரை என்பது “அகம்படியர் கரை” என்றே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல சேந்தங்குடி ஜமீன் சொத்துக்களை மற்றவர்களுக்கு எழுதி கொடுத்தது சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகள் நடந்த போது
நீதிமன்றத்தில் ஜமீன் வாரிசுகள் தாங்கள் என்ன சாதி என்பதை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர்.
அப்படிப்பட்ட வழக்கு ஆவணம் ஒன்றில் சேந்தன்குடி ஜமீன் வாரிசுகள்,வழுவாடி தேவர் என்பவர்கள் தங்களை அகம்படியர் சாதி( இன்றைய அகமுடையார் சாதி) என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளனர்.
சுதந்திரத்திற்கு முன் நடந்த இந்த நீதிமன்ற வழக்கில் வாதி ( வழக்கு தொடுத்தவர் ,இங்கு சொத்தை பெற்றவர் ) ,பிரதிவாதி ( இங்கு ஜமீன் வாரிசுகள்) என்பவர்கள் அனைவருமே அகம்படியர் சாதியை சேர்ந்தவர்கள் ( பார்க்க படம் இணைப்பு 2,3)
இணைப்பு படத்தை படிக்க முடியாதவர்களுக்காக அதன் பெயர்களை தமிழில் டைப் செய்து கீழே கொடுத்துள்ளோம்.
வாதி ( வழக்கு தொடுத்தவர்)
———————
1) களப்பன் கங்காணியார் மகன் சொக்கலிங்கம் பிள்ளை , அகம்படிய சாதி ,வயது 59 குடியிருப்பு: பனங்குளம் ,பட்டுகோட்டை தாலுகா
பிரதிவாதி
—————-
2) சின்ன சுவாமி வழுவாடியார் மகன், மேகவர்ண வழுவாடியார் ,வழுவாடி அகம்படிய சாதி ,வயது 64 குடியிருப்பு: பனங்குளம் ,பட்டுகோட்டை தாலுகா
3)கருப்பண்ண வழுவாடியார் மகன் துரை முத்துவேலு வழுவாடியார் ,வழுவாடி அகம்படிய சாதி,வயது 33,குடியிருப்பு: கீரமங்கலம் பட்டுக்கோட்டை தாலுகா
4) சேதுபதி மகன் துரைச்சாமி ,வழுவாடி அகம்படிய சாதி,வயது 19 ,குடியிருப்பு: கீரமங்கலம் பட்டுக்கோட்டை தாலுகா
6) சொக்கலிங்கம் மகன் சிங்கமுத்து ,வழுவாடி ,அகம்படிய சாதி,வயது 46 ,குடியிருப்பு: நகரம் ,பட்டுக்கோட்டை தாலுகா
7)சொக்கலிங்கம் வழுவாடி தேவர் மகன் சுப்பிரமணியன் ,அகம்படிய சாதி,வயது 43 ,குடியிருப்பு: நகரம் ,பட்டுக்கோட்டை தாலுகா
8)சொக்கலிங்ம் மகன் மேகவர்ணம் அகம்படிய சாதி,வயது 39 ,குடியிருப்பு: நகரம் ,பட்டுக்கோட்டை தாலுகா
10)சின்னசுவாமி எனும் துரைச்சாமி மகன் சிங்காரவேலு ,வழுவாடி அகம்படிய சாதி வயது 33,கீரமங்கலம் ,பட்டுக்கோட்டை தாலுகா
11)தெய்வசுவாமி மகன் கன்னையா ,வழுவாடி அகம்படிய சாதி வயது 26,கீரமங்கலம் ,பட்டுக்கோட்டை தாலுகா
13) சின்னசுவாமி மகன் அருணாச்சலம் ,வழுவாடி அகம்படிய சாதி வயது 26,பனங்குளம் ,பட்டுக்கோட்டை தாலுகா
14) சின்னசாமி வழுவாடியார் மகன் சின்னதுரை ,வழுவாடி அகம்படிய சாதி வயது 40 ,பனங்குளம் ,பட்டுக்கோட்டை தாலுகா
15) முத்துசுவாமி சேர்வை மகன் அப்பன் எனும் குமாரசாமி சேர்வை ,அகம்படிய சாதி வயது 38 , கீரமங்கலம் ,பட்டுக்கோட்டை தாலுகா
ஆதாரம்: Part L
Record of Proceedings
In the court of the District Judge of West
Thanjore at Tanjore
குறிப்பு:
சில பெயர்கள் தெளிவாக புகைப்படம் எடுக்காததால் சில பெயர்களை வெளியிட முடியவில்லை மற்றொரு சந்தர்பத்தில் தெளிவாக அனைத்து பெயர்களையும் வெளியிடுகின்றோம். ஆனால் நாம் வெளியிட்டுள்ள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படும் ஜமீன் குடும்பத்தவர் உள்ளிட்ட அனைவருமே அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் தான்.
இன்னும் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகவும் பின்னர் நூல் தொகுப்பாகவும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
நன்றி:
இந்த நீதிமன்ற ஆவணத்தை திரட்டி நம் பார்வைக்கு அனுப்பிய அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நமது நன்றி!
இதுபோல் வரலாற்றை திரட்டி அதை வெளியிடுவது சாதாரண பணி அல்ல. ஒருமுறைக்கு பல முறை இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, உணவுக்கான செலவு , பொறுமையாக இருந்து பேசி , ஆவணங்கள் திரட்டி ( இடங்களை புகைப்படம் எடுத்து, ஆவணங்களை ஸ்கேன் செய்து ,ஜெராக்ஸ் செய்து ) என ஆவணங்களை பாதுகாக்க வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி நம்முடைய பொன்னான நேரம் ,வேலை வாழ்க்கையை இதற்காக செலவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் பெரும் பணி! ஏற்கனவே பல்வேறு ஆவணங்களை அக்கறையின்மையால் தொலைத்துவிட்டோம். காலங்கள் செல்ல செல்ல ஆவணங்களில் 98% அழிந்தும் விட்டது. சமுதாயம் இப்பணிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் மிச்சம் இருக்கிற ஆவணங்களும் அழிந்து முழுக்க பயன்படாமலே அகமுடையார் வரலாறு மீட்கப்படாமலே சென்று விடும்.
மேலதிக லிங்குகள்
—————–
ஏற்கனவே வெளியிட்ட ஆவணங்களை பார்க்க விரும்புவர்களுக்காக லிங்குகள்
அகம்படியர் சாதி- வன்னியர் பிரிவு
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid0MARms9xwg1zrkFwWqZWm4G1NDuAetSFj49K15k4Mi2VaKkX75ZnKkHPjBKi3mj6vl
சேந்தன்குடி ஜமீன் வழுவாடியார்கள் -அகமுடையார் சாதியினரே -நிலப்பத்திர ஆவண ஆதாரம் பதிவு -1
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid0hyJsEqYM5piSFpYAh3aiij14NRXWZ3DzbxJNy5ewcQRRte6fPsGL2MuvGPmrcQ81l
கீரமங்கலம் சேர்வைக்காரர் – அகம்படியர் முதல் கரைக்காரர் சேவி புஞ்சை
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid0EZRoodkRinqQfGTrJm9n8Sz6Qi9kjkwmpMFeCVcopDcPXC9V87odTpDQsbgVBKhwl
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்