இலவச விழிப்புணர்வு நூல் வெளியிட உள்ளோம்- நன்கொடையாளர்கள் தேவை-
————————
இன்னும் அகமுடையார் சமுதாயத்தில்
சேர்வை என்பதையும் ,தேவர் என்பதையும்,முதலியார் என்பதையும் சாதியாக நினைத்து ஒரு பட்டத்தில் உள்ள அகமுடையார்கள் மற்ற பட்டத்தில் உள்ள அகமுடையார்களை வேறு சாதி என நினைத்து தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி ஒற்றுமையடையாமல் இருக்கிறார்கள்.
இதற்காக அகமுடையார் ஒற்றுமை தளத்தின் வாயிலாக ஆன்லைனில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறோம்.
ஆனாலும் கூட இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தாத 45 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலானோரிடம் இந்த செய்தி சென்று சேரவில்லை.
இன்னும் கூட அகமுடையார்களில் வயதில் மூத்தவர்கள் பலர் அகமுடைய முதலியார் என்பதை சாதி என்று நினைத்துக்கொண்டு தங்களை முதலியார் சாதி உட்பிரிவு என நினைத்தும்
அகமுடைய தேவர் என்பதை சாதியாக நினைத்துக்கொண்டு
தங்களை தேவர் சாதி என்று நினைத்தும்
குழம்பி ஒற்றுமையடையாமல் இருக்கிறார்கள்.
இதை போக்கும் வண்ணம் அகமுடையார் ஒற்றுமை சார்பில்
“விழிப்புணர்வு கையேடு அல்லது விழிப்புணர்வு நூல்” பிரிண்ட் செய்து வெளியிட உள்ளோம்.
இதை தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார் சங்கங்களுக்கு அனுப்பி அவர்களிடம் உறுப்பினர்களாக உள்ள அகமுடையார்கள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் அகமுடையார்கள் நிறைய பேருக்கு இந்நூலை இலவசமாக வழங்க உள்ளோம். இதன் மூலம் அகமுடையார் சமுதாயத்தில் உள்ள அகமுடையார்களும் வரலாற்றை படித்து விழிப்புனர்வு அடைந்து ஒற்றுமை அடைவார்கள்.சமுதாயத்தில் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும் இதில் அகமுடையார்களின் சுருக்கமான வரலாற்றையும் அகமுடையார் அரச வம்சம் பற்றிய தகவல்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
ஆனால் நிச்சயமாக இதை தனியே செய்ய முடியாது ஏற்கனவே அகமுடையார் ஒற்றுமை,அகமுடையார்மேட்ரி, அகமுடையார்சங்கம் போன்ற பல்வேறு தளங்களுக்கு நாம் சொந்த பணத்தை செலவழித்து விட்டோம் .
ஆகவே அகமுடையார் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒற்றுமைப்படுத்தும் இம்முயற்சிக்கு அகமுடையார் சமுதாயத்திடம் இருந்து நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம்.
அகமுடையார் ஒற்றுமை தளத்தின் முயற்சியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமையின் ஜிபே நம்பருக்கு தங்கள் நன்கொடைகளை அனுப்பலாம்.
நன்கொடையாளர்களின் பெயர் மற்றும் தொகைகள் இந்த வெளியீடுகளில் வெளியிடப்படும்( நன்கொடை அளிப்பவர்கள் விரும்பாவிட்டால் பெயர் வெளியிடப்படாது)
ரூ1000 ற்கு முதல் நன்கொடை அனுப்புவர்களின் பெயர், ஊர் அமைப்பு/இயக்க பெயர்களுடன் விழிப்புனர்வு கையேட்டு நூலில் வெளியிடப்படும்
மேலும் 5000ரூபாய் அல்லது அதற்கு மேல் அனுப்பவர்களின் புகைப்படம் அல்லது நிறுவன/இயக்கம்/ வணிக நிறுவனங்களின் தகவல்கள் அரைப்பக்கத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரம் தேவைப்படுவர்கள் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை நம்பருக்கு போன் செய்து விவரம் கேட்டுக்கொள்ளலாம்.
நன்கொடை அளித்தவர்கள் உங்கள் பெயரை வெளியிடுவதற்கு மறக்காமல் 7200507629 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.. நன்றி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
@followers மேலே உள்ள செய்தியை பார்க்க வேண்டுகிறேன்.நன்றி!