இன்று (22.02.2024) சென்னை,
தலைமைச் செயலகத்தில்,
சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் முழு உருவ வெண்கலச் சிலையை சிவகங்கை நகரத்தில் அமைக்க கோரியும், காளையார் கோவிலில் மணிமண்டபம் அமைக்கக் கோரியும்,
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களிடம், சிவகங்கை நகர் கழக செயலாளரும், நகர் மனற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள், மாமன்னர் மருபாண்டியர்கள் வாரிசுதாரர் தா.ராமசாமி சேர்வை அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். அதனை ஏற்ற அமைச்சர் அவர்கள் இதனை உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று செய்து விரைந்து ஆவணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
உடன் அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள், காஞ்சிபுரம் செந்தில்நாதன் புகழ் அகமுடையார் அவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஜெயகாந்தன் அவர்கள், சண்முகராஜன் அவர்கள், செந்தில்வேல் பாண்டியன் அவர்கள், ராம்தாஸ் அவர்கள், சக்திவேல் பாண்டியன் அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்