First
திருப்பத்தூர் வருபவர்கள் காளையார்கோவில் வருவதில்லை.ஒருவருடம் வருபவர்கள் அடுத்த வருடம் வருவதில்லை.ஆனால் ஒவ்வொருவருடமும் தவறாது திருப்பத்தூர்,காளையார்கோவில் என இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர். சிவகங்கை ராமநாதபுரம்,மதுரை அகமுடையார்கள் மட்டுமே கலந்து கொண்ட மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வுகளில் வடமாவட்டம்,கொங்கு பகுதி,திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கும் விழிப்புனர்வு ஊட்டி கலந்து கொள்ளச் செய்தவர்
காட்சிக்கு எளியவர் ஆனால் பொறுமையும்,விடாமுயற்சியும் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர் என்று அகமுடையார் வரலாறு தேடி சுற்றிக் கொண்டே இருப்பவர் .சலிப்பே இல்லாமல் தேடுவதில் என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் பயன்படுத்தத் தவறிய ஓர் நல்முத்து.அவர் தான் திரு.பாலமுருகன் அகமுடையார்- நிறுவனர் -அகமுடையார் அரண் இயக்கம்.
இந்த வருடம் விழுப்புரத்திலிருந்து நம் உறவுகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். முதல் புகைப்படத்திற்கு அடுத்து வருபவை அவர்களின் புகைப்படங்களே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்