18 காளைகளை அடக்கிய காளை வீரன் அகமுடையார் இனத்தை சேர்ந்த தம்பி கார்த்திக் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இரண்டாம் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு நம் பாராட்டுக்கள். ஆனால் இந்த முறை அவருக்கு கண்ணில் காயம் அடைந்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கும் அகமுடையாருக்குமான தொடர்பில் அகமுடையார்கள் தொழுவை பாதுகாக்கும் வீரர்களாக பணியாற்றியுள்ளனர். தொழு என்றால் 10, 20 மாடுகள் இருக்கும் தொழுவம் அல்ல 500,1000 மாடுகள் கட்டி பாதுகாவல் செய்தவர்கள் நாங்கள். பல்வேறு கல்வெட்டுக்களில் அகமுடையார்கள் ஆநிரை காப்பவர்களாக வருகின்றனர்.
அப்படிப்பட்ட அகமுடையாரில் தொழுவை பாதுகாக்கும் வீரர் பிரிவை சேர்ந்தவர்கள் தான் தொழு சூரர் என்றழைக்கப்பட்டு இன்று துளுவ வேளாளர் என்பவர்கள்.
கோவில்பட்டியின் கழுகுமலை பகுதியில் கிடைத்த
கி.பி 8ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு செய்தியில் இன்று துளுவ வேளாளர் என்று அழைக்கப்படும் பிரிவினர் ,தொழு சூரர் என்று குறிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் அகம்படியாரின் பிரிவினர் என்றும் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.
அதாவது உள்வீட்டுகோயில் (அரண்மனை ) சேவகர்( வீரர் ) எனும் அகம்படியரின் பிரிவை சேர்ந்த தொண்டைமண்டலத்து பூந்தமல்லி பகுதியை சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனை குறிப்பிடுகிறது. இவன் அகம்படியாரின் ஓர் பிரிவாகிய தொழுவை பாதுகாக்கும் பிரிவை சேர்ந்தவன் ஆவான். துளுவ வேளாளர்களின் 70 வருடங்களுக்கு முன்னால் உள்ள நிலப்பத்திரங்களில் தொழுவ வேளாளர் என்றே சாதி காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தமிழக அரசின் சாதி பட்டியலில் “அகமுடையார் ( தொழுவ அல்லது துளுவ வேளாளர்)) ” என்றே சாதி பெயர் இடம்பெற்றுள்ளது.
அது மட்டுமல்ல நடுகல் கல்வெட்டில் குறிப்பிடும் வீரன் பூந்தமல்லி எனும் இன்றும் அகமுடையார் துளுவ வேளாளர் மிகப்பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் என்பதோடு இந்த நடுகல் குறிப்பிடும் வீரன் சென்னை பூந்தமல்லி பகுதியில் இருந்து 600 கீ.மீட்டர் தொலைவில் உள்ள கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்ற கோட்டை போரில் இறந்துள்ளான் என்பதும் அவனுக்காக கோவில்பட்டியில் நடுகல் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது இறந்தவன் எத்தகைய வீரன் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இக்கல்வெட்டு செய்தியை மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
உள் வீட்டு கோயிற் சேவகர் உதிரப்பட்டி நடுகல் செய்தி—————————-…
#துளுவவேளாளர்
#துளுவவெள்ளாளர்
#தொழுவவெள்ளாளர்
#தொழுவவேளாளர்
#thuluva
#thuluvavellalar
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்