உலகநாய் தினம்:
இந்நடுகல் முதலாம் மகேந்திரவர்மனின் 34 ஆவது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும். ஆநிரை மீட்கும் தொறுப்போரில் வீரமரணம் அடைந்த #கருந்தேவகத்தியுடன் கோவிலன் என்னும் நாயும் இறக்க, அதற்காக எடுக்கப்பட்ட நடுகல் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
“கோவிசைய மயிந்திரபருமற்கு முப்பத்து நான்காவது #வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கை ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்னெருமைப் புறத்தே வாடிப்பட்டான் கல்’ என்ற வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது.
நடுகல்லில் வீரனது உருவம் இடதுபுறம் பார்த்த நிலையில், இடதுகையில் வில்லும், வலதுகையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். இவ்வீரனது காலின் பக்கத்தில் நாயின் உருவமும், சிமிழும், கெண்டியும் காணப்படுகின்றன. நாயின் பின்புறம் ” கோபாலன் னென்னுந் நாய் ஒரு கள்ளனைக் கடித்துக் காத்திருந்தவாறு’ என்ற வட்டெழுத்து வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
#செங்கம் #திருவண்ணாமலை
#herostones #ஆற்றுப்படை #நடுகல்
#பாணர் #வாணாதிராயர் #வாணகோவரையர் #அகம்படி
( இது அகமுடையார்கள் அதிகம் வாழும் ஊர்) 🔰🤩
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
Leave a Reply