பல்லவ அரசர்கள் ஈரானிய பகுதியில் இருந்து வந்த பிராமணர்கள்
————————-
பல்லவ அரசர்கள் பிராமண சமூகத்தினர் என்பதற்கு அவர்களை பிராமணர் என்று குறிப்பிடும் நேரடி செப்பேட்டை வெளியிட்டோம்.
அதுமட்டுமல்ல அந்த பல்லவர்கள் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்பதை பல்லவர்கள் பயன்படுத்திய சிங்ககொடியும் உணர்த்துகிறது. பல்லவ அரசர்களின் பல பெயர்கள் சிம்ம என்ற பெயர் கொண்டு தொடங்குகின்றன.
சிம்ம விஷ்ணு,சிம்ம வர்மன்…
சரி நீங்கள் கேட்கலாம் இதை வைத்து எப்படி அவர்களை ஈரானியர் என்று சொல்லலாம் என்று? நீங்கள் கேட்பது சரி தான்!
புலிகளை போல சிங்கங்கள் இந்தியாவில் பரவலாகவும், பெரும் எண்ணிக்கையிலும் வாழவில்லை.
சிங்கம் என்பதே இந்திய துணைக்கண்டத்தில் 2000 க்கு முன்பு கிடையாது. இன்றும் சிங்கங்கள் இந்தியாவின் குஜராத் பகுதியில் மட்டுமே அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வாழ்கின்றன. அவ்வளவு ஏன் இந்திய சிங்கம் என்பது ஆசிய சிங்கம் என்பதாகும் இதை பெர்சிய சிங்கம் என்று தான் அழைப்பார்கள் மேலும் இந்த சிங்கத்தின் அறிவியல் பெயரே Panthera leo persica என்ற பெர்சிய பெயரே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்த சிங்கங்கள் ஈரானிய தலைநகர் பெர்சியாவின் வகையை சேர்ந்தது (அங்கிருந்தே இந்த சிங்கங்கள் வந்திருக்க வேண்டும்)
மேலும் ஈரானிய அல்லது பெர்சிய அரசர்களின் சின்னம் சிங்கம் தான். ஏன் என்றால் அது அவர்களது ஊரில் வாழ்ந்த ஓர் விலங்கு அதையே அவர்கள் சின்னமாக கொண்டதில் வியப்பேதும் இல்லை.
ஈரானில் இந்த அரசர்கள் தங்கள் சின்னமாக சிங்கத்தை செதுக்கியுள்ளனர், (உதாரணத்திற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்ப செதுக்கப்பட்ட படத்தை இப்பதிவில் காணலாம்)
கல்லில் சிற்பங்களை செதுக்குவதில் புகழ்பெற்ற இந்த பெர்சியர்களே இந்தியாவிற்கு கல்லில் கடவுள் மற்றும் பல்வேறு சிற்பங்களை வடிப்பதை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அதற்கு முன்பு இந்தியாவில் மரம், மண் இவற்றில் உருவங்களை வரைவதும் செதுக்குவதும் வழக்கமாயிருந்தது.
அதுமட்டுல்ல பஹல்வன் என்ற பெயரில் பஹல்வி என்ற பெயரில் ஈரானிய அரசகுடும்பத்தினர் உள்ளனர். pahlavan என்ற பெயரை இலட்சக்கணக்காணோர் ஈரானில் இன்றும் உள்ளனர் .பேஸ்புக்கில்
pahlavan தேடினால் இவர்களை நீங்கள் காண முடியும்.
பிராமணர்களின் தரவுகள் ஈரானிய பகுதி அகழாய்விலும் கிடைத்துள்ளது. ஈரானியர்களின் கொடியில் சூரியனும் இடம்பெற்றிருக்கும். பிராமணர்களின் வேதங்களில் சூரியனே முதற்கடவுளாக போற்றபப்ட்டுள்ளது .குளிர் நிறைந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் சூரியனை முழு முதற்கடவுளாக நினைத்து போற்றுவது இயற்கை தான்!
பல்லவர்கள் மட்டுமல்ல குஷானர்கள் உள்ளிட்ட பெரும் பேரரசர்கள் பலர் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்களே! எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் பூர்விகமாக இல்லாது இருந்த சிங்கம் எனும் விலங்கை முன்னிருத்தி சிங்கக்கொடியை 2000 ஆண்டுகளுக்கு முன் கொண்டிருந்த அரசர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்களாகவே இருக்க வேண்டும்.
அதேநேரம் தொண்டைமான் ,கச்சிராயர் என்ற பெயர்கள் தொண்டைமண்டலத்தை பல்லவருக்கு முன் ஆட்சி செய்த வாணர்களுக்குரியதாகும். இவர்கள் பெயரை மட்டுமல்ல அகம்படிய இனத்தவர்களின் வாணர்களின் நந்திக்கொடி,நந்தி என்ற பெயரை தான் பல்லவர்கள் தங்கள் பெயராகவும் புனைந்து கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் விளக்குவோம்.
சொல்வதற்கு நிறைய உள்ளது. எழுதுவதற்கு தான் நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது.
பல்லவர் பிராமணர் என்பதற்கு ஏற்கனவே வெளியிட்ட சான்றை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கலாம்.
https://www.facebook.com/100063919813164/posts/719960826811238
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்