இராமநாதபுரத்தை சேதுபதிகளுக்கு முன்பே ஆண்ட அகமுடையார்கள்! ———————–…

Spread the love

First
இராமநாதபுரத்தை சேதுபதிகளுக்கு முன்பே ஆண்ட அகமுடையார்கள்!
——————————————————————-
பெரிய மறவர் சீமை என்று அறியப்படும் இன்றைய இராமநாதபுரம்,ராமேஸ்வரம் உள்ளிட்ட சேதுபதிகள் ஆண்ட பகுதி அவர்களுக்கு பரம்பரைப் பாத்தியமானது அல்ல, அது நாயக்க அரசர்களால் வழங்கப்பட்டது .
கள்வர்களிடமிருந்து இராமேஸ்வரம் புனித யாத்திரை செல்லும் யாத்திரிகளை பாதுகாக்கும் பணிக்கு நாயக்க மன்னர்களால் அமர்த்தப்பட்டவர்களே இந்த சேதுபதிகள் அதனாலேயே அவர்களுக்கு சேது காவலன் என்ற பெயர் விளங்கிற்று!

அவ்வாறு காவலுக்காக நியமிக்கப்பட்ட சேதுபதிகள் அவர்கள் காவல் புரிந்த பகுதிகளை பின்னாளில் ஆள்வதற்கும் உரிமை நாயக்க மன்னர்களால் வழங்கப்பட்டது.

அதாவது நாயக்கர்களின் மேலாண்மையின் கீழ் ( நாயக்கர்களுக்கு வரிகொடுத்துக்கொண்டு) சேதுபதிகள் இராமநாதபுரம் ,இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டனர்.

ஆனால் அவர்களுக்கு முன்பே இராமநாதபுரம் ,இராமேஸ்வரம் பகுதிகளை ஆண்டவர்கள் பாண்டியர் வழியினரான வாணாதிராயர்கள் எனும் அகமுடையார் இனத்தவர்களே! இன்று இராமநாதபுரத்தில் அகமுடையார்கள் செறிந்து காணப்படுவதற்கு வாணாதிராயர்கள் அகமுடையார்களை இங்கு குடியமர்த்தியதே காரணமாகும். இதுவே சொல்லும் இராமநாதபுரம் யாருடைய பூமி என்று!

அப்புறம் அது என்ன படத்தில் குறிப்பிட்டுள்ள “தங்கள் செய்கையால் இழந்தனர்” அது வேறு ஒன்றுமல்ல அகமுடையார்களுக்கே உள்ள பொதுவான புத்தி .அதுவே தலைக்கனம்- நீ என்ன சொல்லுறது ,நான் என்ன கேட்கிறது என்று நாயக்கர் அரசர்கள் மிகவும் பலம் பொருந்தி இருந்த காலத்திலேயே அவர்களை எதிர்த்து தங்கள் ஆட்சியை இழந்தனர்.

அந்த தலைக்கனத்திற்கு காரணம் விஜய நகர,நாயக்க மன்னர்கள் இங்கு வருவதற்கு முன்பே மதுரை,ராமநாதபுரம் ,சிவகங்கைப் பகுதிகளை ஆண்ட பாண்டியர்களின் வாரிசுகளே இந்த வாணாதிராயர்கள். காலநிலையால் வாணாதிராயர்களின் படைபலம் குன்றி ,வாணாதிராயர்களில் சிலர் விஜய நகர அரசின் கீழ் சிற்றரசர்களாக வாழ நேரிட்டாலும் தங்களின் பாரம்பரிய பழம் அரச உரிமை அவர்கள் மனதில் ஆடிக்கொண்ட்டே இருந்திருக்க வேண்டும்! அதனால் தான் அகமுடையார்கள் அரசபரம்பரையினரான விஜய நகர அரசர்களை மதித்து நடந்தாலும் விஜய நகர அரசப்பிரதிநிதிகளான நாயக்க அரசர்களை துச்சமாக எண்ணி,எதிர்த்து ஆட்சியை இழந்தனர்.

ஆனால் பின்னால் வந்த சேதுபதிகள் ,நாயக்கர்கள் பலமாக இருக்கும் வரை ஜால்ரா போட்டு பின்னால் நாயக்க அரசர்களில் பலம் குன்றியோர் ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை நாயக்க அரசர்களின் மேலாண்மையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.

வாணாதிராயர்கள் மட்டுமல்ல பொதுவாகவே அகமுடையார்களுக்கு தான் என்ற எண்ணம் மேலோங்கியே இருக்கும் அதற்கு அவர்கள் இந்த நாட்டின் பழம் அரசமரபினர்(அகம்படி மரபினர்) என்ற எண்ணம் அவர்கள் அடிமனதின் இன்னும் இருப்பதன் காரணமேஆகும்!

பெரிய மறவர் சீமை எனும் ராமநாதபுரம் மட்டுமல்ல சின்ன மறவர் சீமை எனும் சிவகங்கையும் அகமுடையாருடையது தான்! வாணாதிராயராகிய அகமுடையார்கள் இன்று சின்ன மறவர் சீமை என அறியப்படும் காளையார்கோவில் ,மானாமதுரை,தஞ்சாக்கூர் போன்ற பகுதிகளில் கோட்டை கட்டி பல காலம் சிறப்புற ஆண்டிருக்கிறார்கள்.வாணாதிராயர்களின் காலத்திற்கு வெகு காலம் பின்னே வந்தவர்கள் தான் சிவகங்கையை சமீபத்தில் ஆண்ட மறவர் வழியினர்.

சரி இராமநாதபுரத்தையும்,சிவகங்கையும் ஆண்ட மறவர் வழியினர் யார்? அவர்களுக்கும் மற்ற பகுதிகளில் வாழும் மறவர்களுக்கும் ஏன் திருமண உறவு இல்லை.ஏன் சேதுபதிகளின் திருமண உறவு அகமுடையார்களுடன் இருந்தது? இதெல்லாம் பில்லியன் டாலர் கேள்விகள்!

கூடுதல் சான்றுகளுடன் விரிவான தகவல்கள் மற்றொரு நாளில்!

அப்புறம் யாருக்காவது வாணாதிராயர்கள் அகமுடையார்களா என்று சந்தேகம் வந்தால் கீழே இருக்கும் லிங்கில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்(ஏன்னா ஆதாரம் இல்லாமல் பேசுவது நமது வழக்கம் இல்லை)
http://www.agamudayarotrumai.com/1874
http://www.agamudayarotrumai.com/4521

முதல்ல பதிவை முழுமையாக படிங்க! அதிலேயே சான்றுக்கான லிங்க கொடுத்திருக்கு!

பல காலம் முன்பே அகமுடையார்கள் தான் வாணாதிராயர் என்பதற்கு தனிக்கட்டுரையில் பல சான்றுகளுடன் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் கொடுத்தாயிற்று அதைப் படிக்காமல் விட்டுருந்தால் இந்தப் பதிவில் இரண்டு லிங்க் கொடுத்திருக்கிறோம் படித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோ!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo