First
அகமுடையார்களின் பின் தங்குதல்- கல்வி
——————————————————————————–
சுவாரஸ்யமான பதிவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நம்முடைய அதிமுக்கிய பிரச்சனைகளுக்கான பதிவு ஆகவே அகமுடையார் உறவுகள் முழுமையக படியுங்கள்!
வரலாற்று காலம் தொட்ட்டே பெருஞ் சிறப்போடு வாழ்ந்த அகமுடையார்கள் இன்று அடையாளமில்லாமல் வாழத் தள்ளப்பட்ட நிலைக்கு கீழ்கண்டவற்றில் நாம் பின் தங்கியதே காரணமாகும்!
கல்வி
வேலைவாய்ப்பு
பொருளாதாரம்
அரசியல் அதிகாரம்
இவற்றில் நாம் முன்னேற என்னவென்ன செய்யலாம் என்பதை என் கருத்துக்களாக இங்கு சுருக்கமாகக் காண்போம்! இவற்றில் கல்வி பற்றி இன்றைய விவாதத்தில் காண்போம்!
கல்வி- பெரும்பாலான அகமுடையார்கள் மேல்நிலைப்பள்ளி படிப்புவரை படித்து விடுகிறார்கள். அகமுடையார்களில் இன்று மேல்நிலைப்பள்ளி படிப்பு படிக்காதவர்கள் மிகக்குறைவே ! மேலும் பட்டப்படிப்பையும் ஒருவாறு படித்து முடித்து விடுகிறார்கள். இன்று கல்விக்கடன்களை அரசு வழங்குகின்றது அதனால் ஒருவாறு பட்டப்படிப்பையும் முடித்து விடுகிறார்கள்!
ஆனால் நம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலான பட்டதாரிகள் குறிப்பிட்ட பிரபலமான பாடப்பிரிவுகளையே தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்கள் (BA,BCOM,BSC ) (Engg/Medical) (Advocate/Legal) இதனால் என்ன ஆகிறது என்றால் வருடத்திற்கு குறைவான வேலைவாய்ப்பை உண்டாக்கக்கூடிய படிப்பை லச்சணக்காணோர் எடுத்துப் படிப்பதால் படிப்பதற்கேற்ப்ப வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிரமம ஏற்படுகிறது! மேலும் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததால் நம் இளைஞர்கள் பலர் தங்கள் படிப்பிற்கேற்ப வேலை கிடைக்காததால் சம்பந்தமில்லாத வேறு வேலைகளில் சேர்ந்து அவர்கள் அதில் முன்னேற முடியாத நிலை (சம்பந்தமில்லாத வேலைகளில் வேறு ஓர் படிப்போடு சேர்ந்து ப்ரமோஷன் பெறுவதும் கடினம் ) என்பதோடு மனச்சோர்வு உண்டாகும் நிலை ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்க நம் இளைஞர்களுக்கு பிரபலமான படிப்புகளைத் தவிர்த்து நல்ல வாய்ப்புள்ள, வேலைவாய்ப்பினை தரக்கூடிய படிப்புகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல் (என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் ,எந்த கல்லூரி சிறந்தது ,செலவு ,கல்விக்கடன் ) போன்ற தகவல்களை நம் இளைஞர்களுக்குச் சொல்லி வழிகாட்டிடுதல் வேண்டும்!
குறிப்பாக 10ம் வகுப்பு முடித்தவர்கள் என்ன குருப் எடுத்துப் படிக்கலாம் அல்லது வேறு கல்விமுறைகளான ஐடிஐ, டிப்ளமோ படிப்புகள் படிக்கலாமா? பட்டப்படிப்பு என்பதே அடிப்படைக் கல்வித் தகுதி என்று மாறிவரும் இந்நிலையில் இது போன்ற படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டா? அப்படிப் படித்தால் என்ன படிக்கலாம் என்பதனை விளக்கமான ஆலோசனைகள் தேவைப்படுகின்றன!
அதைப் போலவே 12ம் வகுப்பு முடிந்தவுடன் எந்தப் பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என்பதில் நம் மாணவர்களுக்கு பெரும் குழப்பமே நிலவி வருகிறது!
எத்தனையோ சிறந்த உடன் வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட படிப்புகள் எவ்வளவோ உள்ளன.அவையெல்லாம் நம் இளைஞர்களுக்கு பல நேரம் தெரிவதே இல்லை.நான் ஏற்கனவே சொன்னது போல்
10ம் வகுப்பு ,12ம் வகுப்புத் தேர்வுகள் நெருங்கி வரும் இந்நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் இத்தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளியாகும் ஆகவே அப்போது நம் மாணவர்களுக்கு ஓர் தெளிவான வழிகாட்டுதல் கண்டிப்பாக தேவைப்படும்!
ஆகவே அகமுடையார் சமுதாயத்தில் உள்ள கல்வியாளர்கள், கல்வி ஆலோசனை நிறுவனங்கள் அல்லது தன்னார்வலர்கள் இவ்விசயத்தில் நம் இளைஞர்களுக்கு உதவிட வழிகாட்டுதல் மையங்கள், நிகழ்ச்சிகள் போன்றவை குறித்த இலவச ஆலோசனைகளை வழங்கிட முன் வர வேண்டும்!
ஆகவே குறிப்பிட்ட கல்வி ஆலோசனை வழங்குவதில் ஆலோசனை வழங்கக்கூடிய அனுபவம் அல்லது ஆர்வமுள்ளவர்கள் மட்டும் கீழ்கண்ட லிங்கில் உங்கள் தகவல்களை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!
http://inventran.com/forms/view.php?id=22838
இவ்வாறு பெறப்படும் தகவல்களைக் (கல்வியாளர்களின் தகவல்) கொண்டு கல்வி ஆலோசனைகளை நம் இளைஞர்கள் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்ப்படும்!
மேலும் விரைவில் நம் அகமுடையார் ஜாப்ஸ் தளத்தில் 12ம் வகுப்பிற்குப் பிறகு என்ன படிக்கலாம் என்பதற்கான நூல் ஒன்று இந்த வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இது 12ம் வகுப்பு படிக்கும் இளைஞர்களுக்கு பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தலில் அவர்களே படித்து அறிந்து கொள்ளும் வழிகாட்டுதலாக அமையும்!
அகமுடையார் சமுதாயம் இந்த நாட்டின் பழந்தமிழ் குடியாகவும் இந்நாட்டின் பெரும்பான்மை குடியாக இருந்த போதிலும் கல்வி/வேலைவாய்ப்பிலும் போதிய இடஒதுக்கீடு கிடைக்காததால் நம் இளைஞர்கள் பலருக்கு கல்வி உதவித் தொகை, கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் வேலையில் இடஒதுக்கீட்டில் தேவையான அளவு ஒதுக்கீடு கிடைக்காமல் தம் மக்கள் தொகை சதவீதத்திற்கும் மிகக் குறைவான நிலையிலேயே இருந்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
1980களுக்கு முன் வரை அரசுப் பதவிகளில் பெரும்பான்மையாக அலங்கரித்த அகமுடையார்கள் எல்லாம் இப்போது வெறும் கதையாகிப் போனது! இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் அகமுடையார்கள் அரசுப்பதவிகளில் உள்ளனர்.அதிலும் உயர் அரசுப்பதவிகளில் அகமுடையார்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துள்ளது! உயர்நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவக்கல்லூரி பதவிகளில் அகமுடையார்கள் எவருமே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது! கல்வித்தகுதி, திறமை இருந்தும் நம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிட்டாமலும் , உயர்பதிவிகளை அடையாமலும் இருப்பதற்கு இந்த நாட்டில் நம்முடைய மக்கள் தொகைக்கு ஏற்ப நியாமன பிரதிநிதித்துவம்(இட ஒதுக்கீடு) கிடைக்காமல் இருப்பதே காரணம் ஆகும்!
அகமுடையார்கள் கல்வி/வேலைவாய்ப்பில் தங்களுக்குரிய உரிமையை நிலைநாட்டிட தனி இட ஒதுக்கீடோ அல்லது மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் இணைவதற்கோ செய்ய வேண்டிய வேலைகளை/சாத்தியக் கூறுகளை அடுத்த விவாதத்தில் செய்வோம்! அதன் வழியாக வரும்காலங்களில் முயற்சிகளை மேற்கொள்வோம்!
கூடுதல் செய்தி
இப்பதிவுடன் ஓர் படத்தையும் இணைத்துள்ளோம் அது வெகு முக்கியமான ஓர் படமாகும். 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு என்னவென்ன கல்வி வாய்ப்புகள் உள்ள்ன என்பதை விளக்கும் படம் இது.ஆகவே தேவையுள்ளவர்கள் இப்படத்தை உங்கள் கணிப்பொறியில் டவுன்லோட் செய்து கொண்டு பெரிதாக்கி(ஜீம் செய்து)
பார்க்கவும்!
அதைப் போலவே 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உள்ள கல்வி வாய்ப்புகள் குறித்து www.after12thwhat.com என்ற இணையதளம் அருமையான தகவல்களைக் கொண்டுள்ளது.நேரம் இருப்பவர்கள் இதனைப் பார்வையிடலாம்.
12ம் வகுப்பு முடித்தவர்கள் பொறியில படிப்பு சேருவதற்கும் ,மருத்துவக் கல்வியில் அரசின் இடஒதுக்கீடுபடி அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு நிர்ணயைத்த கட்டணத்தில் (நன்கொடை இல்லாமல்) சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள் |(Entrance Exams ) நடத்தப்படுகின்றன.
இதில் பொறியியில் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (JEE) விண்ணப்பங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு( NEET) தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்னும் நில நாட்களில் வெளியிடப்பட இருக்கின்றன. ஆகவே அகமுடையார் உறவுகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வில் பங்கேற்கவும் வேண்டுகின்றோம்!
அதே போல் சில நாட்களுக்கு முன் காவல் துறைக்கான 16,000 வரையிலான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வந்துள்ளன நம் இளைஞர்கள் இப்படிப்புக்கு தயாராக் வேண்டும்!
உடனடியாக காவலர் தேர்வுக்கு நம் இளைஞர்களை வழிகாட்டுதல் செய்யக்கூடிய உணர்வுள்ள கல்வியாளர்கள் ,அனுபவம் உள்ளவர்கள் அல்லது ஆர்வமுள்ளவர்கள் தேவை!
இந்த நுழைவுத் தேர்வுகள் /போட்டித் தேர்வுகள்/காவல்துறை பணிவாய்ப்பு உதவி சம்பந்தமாக நம் அகமுடையார் இளைஞர்களுக்கு இலவச அலோசனைகள் வழங்கக்கூடிய திறமை/ஆர்வம் உள்ள நம் அகமுடையார் உறவுகளும் கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டுகிறோம்!
http://inventran.com/forms/view.php?id=22838
தேர்வுக்குச் செல்லும் அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்!
வரலாற்றுப் பதிவுகள் நிறைய வர இருக்கின்றன ஆனால் அதைப் போலவே நாம் கல்வி,பொருளாதாரம்,அரசியல் அதிகாரம் பெறுவதும் மிக அவசியம் என்பதால் இப்பதிவுகள் அவசியமானவை!
வரும்நாட்களில் அடுத்த நமது முக்கிய பிரச்சனைகளான வேலைவாய்ப்பு,பொருளாதாரம்,அரசியல் அதிகாரம் பற்றியும் விவாதிப்போம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்