First
பாண்டிமண்டலமான வாணாதிராயர்கள் ஆண்ட வைகைநதி கால் தவழும் தஞ்சாக்கூரில் அகமுடையார்களுக்கு ஊர்தெய்வமாக காவேரி ஐய்யனார் எப்படி வந்தார்? ஏனென்றால் தஞ்சாக்கூர் அகமுடையார்கள் வாணாதிராயர்களால் தஞ்சையில் இருந்து பாண்டி நாட்டில் நுழைந்தவர்கள்! அதே போல் விருதுநகர் மாவட்டத்திலும் அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள V.கரிசல் குளத்திலும் காவேரி ஐய்யனார் கோவில் உள்ளது.பாண்டிய நாட்டில் எப்படி காவேரி ஐய்யனார் கோவில்கள்?
ஏனென்றால் இவர்கள் சோழ மன்னர்களால் பாண்டிய நாட்டை வென்று அதை ஆள இராஜப்பிரதிநிதியாக அனுப்பப்பட்ட தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட வாணாதிராயர் வழிவந்த அகமுடையார்கள்.இவர்கள் தங்கள் தஞ்சைப் பகுதியின் குலதெய்வமான காவேரி ஆற்றின் அமைந்த ஐயனார் தெய்வத்தை பாண்டிய நாட்டிலும் வைகை ஆற்றின் அருகில் அதே பேரில் நிறுவினர். நாமே மறந்து போனாலும் குலதெய்வங்களின் பெயர்களே பல வரலாற்று உண்மைகளை நம் செவிட்டில் அடித்தாற் போல் சொல்கின்றன!
படம் 1: வைகை நதி கால்களைத் தடவும் தஞ்சாக்கூரில் காவேரி ஐயனார் கோவில்
படம் 2: விருதுநகர் மாவட்டம் V.கரிசல் குளத்தில் காவேரி ஐயனார் கோவில்
வீடியோ 1 : மருதுபாண்டியர் ஜெயந்தி விழா – V.கரிசல் குளம் (லிங்க் கீழே)
வீடியோ 2 : தஞ்சாகூரை ஆண்ட தஞ்சை வாணன் எனும் வாணாதிராயன் சிறு வரலாறு(லிங்க் கீழே)
https://www.youtube.com/watch?v=xzODtAaMvTo
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்