First
ஒரே குறிப்பில் இரு வரலாற்று உண்மைகள்!
——————————————-
இக்குறிப்பு கோனார் சமுதாயத்தைச் சமுதாயத்தைச் சேர்ந்த “இந்தியாவில் யாதவர் குலங்கள் எனும் நூலில் ” இருந்து எடுக்கப்பட்டது.
இந்நூலில் மணியக்காரர் பட்டத்தை பயன்படுத்தும் சமூகங்களை நூல் ஆசிரியர் பட்டியல் இடும் போது அகம்படியார் சாதியில் பரிவாரத்தார் எனும் பிரிவினர் மணியக்கார் பட்டத்தைப் பயன்படுத்துவதை குறிப்பிட்டுள்ளார்( பார்க்க : புகைப்படம் 1 )
இச்செய்தியின் மூலம் இரு வரலாற்று உண்மைகள் மீண்டும் நிறுவப் பெறுகின்றது
முதலாவதாக மற்ற பட்டங்களைப் போலவே மணியக்காரர் என்ற பட்டமும் அகமுடையார் சாதியினருக்கு உண்டு!
இரண்டாவதாக அகம்படியார் என்பவர்களே பரிவாரத்தார் என்ற செய்தியையும் உறுதிப்படுத்துகிறார்.
நாம் என்னதான் ஆதாரத்தோடு சொன்னாலும் மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த சிலருக்கு நாம் சொல்வது உண்மை தானா என்று சந்தேகம் எழுவதுண்டு! ஏனென்றால் சொந்த சாதியை உயர்வாகப் பேச வரலாற்றை தங்களுக்குச் சாதகமாக எழுதி வரும் நிலையில் இந்த சந்தேகம் கூட நியாயமாகத் தான்படுகிறது. ஆகவே தான் நம்மைப் பற்றி மற்ற சமுதாய நூல்களில் உள்ள குறிப்புகளையும் எடுத்து வெளியிட்டு வருகிறோம்( இதற்கு முதலில் மற்ற சமுதாயப் புத்தகங்களையும் நாம் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்)
நம்முடைய வரலாற்றையே( நாம் யார் என்பதை) வேறு சமுதாயத்தினர் தான் மிகச் சரியாக புரிந்து எழுதியுள்ளனர் .இதை நினைச்சு மகிழ்ச்சி அடைவதா,நம் ஆட்களின் வரலாற்று ஆர்வமின்மையை நினைத்து கோபம் கொள்வதா! ஒன்னும் புரியல!
இந்நூல் குறிப்பை நமக்களித்து உதவிய அகமுடையார் அரண் இயக்க நிறுவனர் திரு.பாலமுருகன் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!
இதே போல் தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள Pandian Townships எனும் நூலில் பக்கம் எண் 191 ல் (பார்க்க புகைப்படம் எண் : 3) அகப்பரிவாரத்தார் ஆகிய அகம்படியினர் மன்னர் படைவீடு பகுதியில் சேனாபதி ஆழ்வாரின் சிலையை நிறுவிய செய்தியை கல்வெட்டுச் செய்தி மூலம் உறுதி செய்கிறார்கள்
கூடுதல் செய்திகள்
அகம்படியினரைக் கொண்ட படையே சோழர்களின் பரிவாரப் படையாகவும் (பிரத்யேகப் படை) இருப்பதைக் கண்டோம்! இதனை மேலும் உறுதி செய்யும் சான்றாக கல்வெட்டு வரிகள் கிடைக்கின்றன.
“மூலப்பரிவார விட்டேறு ஆகிய ஜனனாத தெரிந்த பரிவாரத்தார்” என்று பரிவாரத்தார் படையானது மூலப்படை எனக் குறிக்கப்படுகிறது.
(S.I.I.Vol II.Part V – Introduction Page 9.)
மூலம், பலம் என்ற இரண்டு சொற்களுக்கும் வேர் என்ற பொருளும் உண்டு என்பது இங்கே நினைக்கத் தக்கது.
ஆதிதொட்டு வருதல், மூலம் ஆகி வேராகியிருத்தல், முதலான பண்புகளை உடையது மூலப்படை என்பது புலப்படுகிறது. வேரே அழிந்ததென்றால் பின் வாழ்வு இல்லை என்பது தெளிவு.
இத்தொல்படை குறித்து வள்ளுவர் தன் குறளில்
“உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண், தொலைவுஇடத்துத்
தொல்படைக்கு அல்லால், அரிது” (குறள் – 762)
பொருள்: .தான் சிறியபடையாய் போருக்குச்சென்று அழிவு வந்தாலும்,தனக்கு
வரும் வீரமரணத்திற்கு அஞ்சாத வலிமை, வாழையடி வாழையாக
வரும் தொல்படைக்கு அன்றி பிறபடைக்கு இல்லை.
என்று தொல்படையின் வீரத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார்.
இந்த மூலப்படை அரசரின் சொந்த உறவினர்களைக் கொண்டே அமைக்கபபடுவதால் இப்படையினர் அரசனுக்கு மிகுந்த விசுவாசமாகவும் அரசரின் நலனில் பெரும்அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.
அகம்படியினரைக் கொண்ட படையே சோழர்களின் பரிவாரப் படையாகவும் (பிரத்யேகப் படை) இருப்பதைக் கண்டோம்! இதனை மேலும் உறுதி செய்யும் சான்றாக கல்வெட்டு வரிகள் கிடைக்கின்றன.
“மூலப்பரிவார விட்டேறு ஆகிய ஜனனாத தெரிந்த பரிவாரத்தார்” என்று பரிவாரத்தார் படையானது மூலப்படை எனக் குறிக்கப்படுகிறது.
(S.I.I.Vol II.Part V – Introduction Page 9.)
அகம்படியினரே சோழர் படையில் பரிவாரத்தார்களாக இருந்தார்கள் என்பதும் அதனாலேயே அவர்கள் பெயர் அகம்படியினர் என்று அழைக்கப்பட்டதும் அகம்படியர் என்ற வார்த்தை எத்தகைய உயர்வானது என்பதும் புரியும்
.
மேலும் படிக்க
சோழர்களின் மூலப்படையான அகம்படி பரிவாரத்தார்- http://www.cholar.in/agambadi-niyayam-chozar-military-regiment/
இலங்கையில் மூலப்படை பரிவாரத்தாராக அகமுடையார்- http://www.agamudayarotrumai.com/4084
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்