அகம்படி வீரசோழ அனங்க கூற்றன் ——————————– கொங்குப் பகுதியான …

Spread the love

First
அகம்படி வீரசோழ அனங்க கூற்றன்
——————————–
கொங்குப் பகுதியான உடுமலைப்பேட்டைக்கு அருகில் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயிலாகும்.இக்கோவிலின்
இக்கோயிலில் கண்டறியப்பட்ட கொங்கு சோழ அரசரான மூன்றாம் வீர சோழன் (கி.பி.1187) காலத்திய கல்வெட்டுச் செய்தியில், நந்தி மண்டபக் கட்டுமானத்தில் பங்கு பெற்றோர் பட்டியலில் அகம்படி இனத்தவன் பெயர் ஒன்றும் காணப்படுகிறது.

இக்கல்வெட்டுச் செய்தியில் “அகம்படி வீரசோழ அனங்க கூற்றன் இட்ட தூண்” எனும் வரிகள் காணப்படுகிறது. இவனோடு சேர்ந்து மன்றாடி பிரிவைச் சேர்ந்தவர்களும் நந்தி மண்டபக் கட்டுமானத்திற்கு தானம் அளித்துள்ளனர்.

கொங்குப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் கிடைத்த கல்வெட்டுச் செய்திகளில் பல்வேறு நபர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட அகம்படி இனத்தைச் சேர்ந்தவனே “வீரசோழ” என்ற அடைமொழியுடன் காணப்படுகிறான்.

இருங்கோவேள் என்பவர்கள் இருக்குவேளிர் மரபில் வந்தவர்கள் இருங்கோளன் என்ற பட்டத்தைச் சூடியிருந்தனர் என்பதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
வேளிர் மரபில் வந்தவர்களே கொங்குச் சோழர்களாக கொங்கு பகுதியை ஆண்டதாக தரவுகளும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஓர் அகம்படியர் ஒருவர் இருங்கோளர் பட்டத்தில் உள்ளதை சென்ற பதிவுகளில் பார்த்தோம்! அதே போல் இங்கு ஒரு அகம்படி இனத்தைச் சேர்ந்தவர் வீரசோழன் என்ற முன்னோட்டோடு குறிக்கப்படுகிறார் என்பதைப் பொருத்திப் பார்க்கும் போது கொங்குச் சோழர் ஆய்வுக்கான களம் தெரிகிறது.

வேளிர் மரபு குறித்தும் ,கொங்குச் சோழர் குறித்தும் புதிய பார்வை ஆதாரங்களோடு விரைவில் வெளிவரும்!

படம் 1 : அகம்படி வீரசோழ அனங்க கூற்றன் இட்ட தூண் -கல்வெட்டுச் செய்தி
படம் 2: முழுக் கல்வெட்டு-கல்வெட்டு பிரதி
படம் 3: கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில்
படம் 4: அமராவதி ஆறு
படம் 5: இக்கோவிலில் கிடைத்த கல்வெட்டுச் செய்தியில் காணப்படும் நபர்களின் பெயர்கள் முழுவதும்

நன்றி: வரலாறு.காம்- http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1272







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo