ஓணம் எனும் தமிழர் விழா- தமிழ்நாட்டு அடையாளங்கள் -காஞ்சிபுரம் ஓணேஸ்வரர் திருக்கோவ…

Spread the love

First
ஓணம் எனும் தமிழர் விழா- தமிழ்நாட்டு அடையாளங்கள் -காஞ்சிபுரம் ஓணேஸ்வரர் திருக்கோவில்- திருஓணகாந்தன்தளி
———————————————————————————————
ஓணம் என்னவோ மலையாளிகளின் பண்டிகை எனவும் கேரளாவில் மட்டுமே இது கொண்டாடப்பட்டதாகவும் தமிழருக்கும் ஓணத்திற்கும் தொடர்பிலை என்று நினைத்தால் அது சரியல்ல.
மதுரைக் காஞ்சி எனும் சங்க நூலில் பாண்டிய மன்னன் திருவோணத் திருநாளை கொண்டாடியதை ஏற்கனவே பார்த்தோம் . நூல் தரவுகள் மட்டுமல்ல களத்தரவுகளும் ஓணம் என்பது தமிழர் பண்டிகை என்பதைக் காட்டி நிற்கிறது.

இன்று காலையில் என்னுடைய பதிவில் வாணர் மரபை உருவாக்கிய அகம்படி மாபலி வாணாசூரன் எனும் அசுரகுல சத்திரியன் பற்றி பார்த்தோம். அதற்கும் முன்னர் சில நாட்கள் முன்பான பதிவில் அகம்படி மாபலிச் சக்கரவர்த்தியின் நினைவாகவே கேரளத்தில் திருவோணம் கொண்டாடப்படுவதையும் பார்த்தோம். இப்பதிவில் திருவோணம் தமிழர் பண்டிகைக்கான களத்தரவு ஒன்றினைக் காண்போம்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரில் திருஓணகாந்தன்தளி எனும் சிவத்தலம் அமைந்துள்ளது.பழமையான இத்திருத்தலத்தில் அகம்படி மாவலி வாணாசுரன் எனும் அசுர குல சக்கரவர்த்தியின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் சிவபெருமானை வழிபட்டு வீடுபேறு பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

ஓணன், காந்தன் எனும் இரு தளபதிகளின் பெயரைக் குறிப்பிட்டே இக்கோவிலுக்கு ஓணகாந்தன் தளி எனும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கோவில் இறைவனுக்கு இத்தளபதிகளின் பெயர்களான ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் எனும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

இப்புராணக் கருத்திலிருந்தும் இக்காஞ்சிபுரம் கோவிலின் மூலமும் விளங்கிக் கொள்ளக்கூடிய செய்தி ஒன்று தான் அது, ஓணம் என்பது தமிழகத்தில் நடைபெற்ற ஓர் நிகழ்வு அதன் எச்சமாகவே இந்த அடையாளங்கள் கேரளாவில் இருந்து வெகு தொலைவில் உள்ள வடதமிழகத்தில் இன்றும் நிலைகொண்டுள்ளது என்பதனை அறிய முடியும்.

ஆராய்வதற்கு நிறைய உண்டு! ஆனால் இப்போது நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய இன்னொரு செய்தி….

மேலும் வாணர்களாகிய அகம்படி வாணாசுரனுக்கும் திருவோணத் திருநாளுக்கும் உள்ள தொடர்பு விளங்குகின்றதா? திருவோணம் என்பது பழந்தமிழ்குடியாம் அகமுடையார் பேரினத்தாரின் பண்டிகை என்பதும் ஆகவே இது முழு தமிழர் பண்டிகை என்பதும் விளங்குகின்றதா?

புகைப்படம்: காஞ்சிபுரம் ஓணேஸ்வரர் திருக்கோவில்

அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து அகமுடையார் பற்றிய செய்திகளை உடன் பெறுங்கள்!
https://www.facebook.com/agamudayarotrumai

தேவார மூவரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலம் குறித்து பதிகம் ஒன்றைப் பாடியுள்ளார் வ அப்பதிகப் பாடல்கள் மற்றும் கோவில் பற்றிய மேலதிக விவரங்களுக்கு – http://www.shivatemples.com/tnaadut/tnt03.php




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo