First
இம்முறை குருபூஜைக்கு இராமநாதபுரத்திலிருந்து அகமுடையார் உறவுகள் 100 வண்டிகளில் காளையார்கோவிலுக்கு வருகிறார்கள்.அவர்களை வருக,வருகவென வரவேற்கின்றோம்!
இதே போல் பல்வேறு ஊரிலிருந்தும் அகமுடையார் உறவுகள் திரளாக கலந்து கொண்டு இம்முறை குருபூஜை நிகழ்வை சிறப்பாக நடத்தித் தர வேண்டுகின்றோம்!
தென் தமிழகம் ,வடதமிழகம் என தமிழ்நாடு முழுவதும் மருதுபாண்டியர் குருபூஜை இம்முறை சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வை பெரும் செலவிலும் பெரும் முயற்சியிலும் நடத்தும் அகமுடையார் உறவுகள் அதனை தக்கமுறையில் ஆவணப்படுத்துங்கள்! புகைப்படங்கள் எடுப்பதோடு மட்டுமல்லாமல் வீடியோ பதிவும் செய்யுங்கள். ஊடகத்துறையினருக்கு அழைப்பு விடுங்கள்.அடுத்த நாள் செய்தித்தாள்களில் குருபூஜை நிகழ்வை பெருமளவு இடம்பெறச் செய்ய ஏற்புடைய காரியங்களை செயல்படுத்துங்கள்!
இவற்றை அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு அனுப்பினால் அனுப்பியவர் பெயர் ஊர் போன்ற தகவல்களுடன் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்திலும் யூடிப் சேனலிலும் அப்டோட் செய்யப்பட்டு உலகம் முழுதும் உள்ள இலட்சகணக்கான அகமுடையார் உறவுகள் அதனை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
எதற்கும் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து வையுங்கள்! பின் தகவல்களை அனுப்ப இது எளிதாக உதவும்!
https://www.facebook.com/agamudayarotrumai
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்