அகமுடையார் சமுதாய வண்ணம், சின்னம் (வரலாற்றின் அடிப்படையில்)
———————
வண்ணங்கள்: கறுப்பு,சிவப்பு,மஞ்சள்
சின்னம்: காளை(நந்தி),புலிக்கொடி, கருடன், வில்
சுருக்கமான விளக்கம்
நிறங்கள்: கருப்பு ( அசுரர்களை குறிக்கும் இருள் ) ஆரம்ப கால வாணர் பயன்படுத்திய நிறம் ( கி.மு 5ம் நூற்றாண்டு மற்றும் அதற்கும் முன்னர்) . இருளாயி,இராக்காயி, இருளான்டி,முத்திருளான்டி, கருப்பணன்,கருப்பன் போன்றவர்கள் இவர்கள் தொடர்பானவர்கள்
சிவப்பு: உறவுகளை (அங்கத்தவர்) ,தியாகத்தை குறிப்பது கொற்றவை போர் தெய்வமும் வடக்குவாய் செல்வி, அங்காளம்மன்,அங்காள பரமேஸ்வரி போன்ற தெய்வங்கள்.
மஞ்சள் நிறம்- எதிர்ப்பு மற்றும் புனிதத்தன்மையை குறிப்பது.
சிவப்பு மஞ்சள் சேர்ந்த நிறம்: கி.மு 5ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு பின்னர் சோழர் மற்றும் வாணர் ,கண்டி ,கம்பளை இன்றும் உள்ள வாணர் வழிவந்தகாக கூறும் தாய்லாந்து அரசர்கள் இன்றும் பயன்படுத்தும் நிறம் .
நந்தி அல்லது காளை : வாணர்களின் ஆரம்ப கால கொடி. பரமேஸ்வரனுக்கு (சிவனுக்கு ) பாதுகாவல் புரிந்த மகாபலி வம்சத்தில் வந்ததாக கூறிக்கொண்ட வாணர் அரசர்கள் , நந்தி தேவரையும் தங்கள் புராண முன்னோராக கொண்டனர். கி.மு காலத்திலேயே வாணர்கள் இச்சின்னத்தை பயன்படுத்தியுள்ளனர். வாணர்களின் இக்கொடியையே பல்லவர்கள் தங்கள் கொடியாக பின்னாளில் பயன்படுத்தினர். வாணர்களின் நந்தி அடையாளம் காரணமாகவே வாணர்களின் கொடியில் காளை சின்னமும், கர்நாடக பகுதிகளில் வாணர்களின் தலைநகரத்திற்கு நந்திபுரம் என்று பெயர் விளங்கியது.
மற்ற சின்னங்கள் மற்றும் விடயங்கள் பற்றி வேறு பதிவுகளில் விரிவாக விளக்குகின்றோம். இதுபற்றிய ஆதாரங்களை வேறு காணொளியில் விரிவாக விளக்குகின்றோம்.
ஆகவே அகமுடையார் அமைப்புகள், சங்கங்கள் தங்கள் கொடி அல்லது லோகோ நிறம் உருவாக்கும் போது சிவப்பு ,மஞ்சள் நிறங்களை பயன்படுத்துங்கள் மேலும் ஓர் வண்ணம் தேவைப்பட்டால் கருப்பு நிறத்தை பயன்படுத்தலாம்.
1-நந்தி கொடி ( உதாரணம் மட்டுமே ) அகம்படியர் குல வாணர்
2- சோழர் கொடி ( சிவப்பு,மஞ்சள் வர்ணம்) அகம்படியர் குல சோழர்
3- கண்டி ராஜ்ஜியம் ( சிவப்பு,மஞ்சள் வர்ணம்) அகம்படியர்கள் உருவாக்கிய கண்டி சாம்ராஜ்ஜிய கொடி (இந்த நிறமே இன்று இலங்கையின் கொடியில் இடம் பெற்றுள்ளது)
4- கம்பளை ராஜ்ஜியம் ( சிவப்பு,மஞ்சள் வர்ணம்) அகம்படியர்கள் உருவாக்கிய கண்டி சாம்ராஜ்ஜிய கொடி
5- வாணர் வழிவந்ததாக கூறும் தாய்லாந்து அரசர்கள் இன்றும் பயன்படுத்தும் (சிவப்பு,மஞ்சள் கொடி)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்