-இருளாயி-சூராயி அம்மந்அகமுடையார் குலதெய்வங்களும் அசுர சம்பந்தமும் ————–…

Spread the love

First
-இருளாயி-சூராயி அம்மந்அகமுடையார் குலதெய்வங்களும் அசுர சம்பந்தமும்
——————————————-
ராக்காயி என்பது ராட்சதர் என்பதன் பெண் வடிவம் என்பதையும் அசுர வழிவந்த பெண் தெய்வம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்!

அகமுடையார்கள் அகம்படி மகாபலி வழிவந்த அசுர சத்திரியர்கள் என்பதை தொடர்ந்து குலதெய்வ வணக்க வழிபாடுகள் நமக்கு உணர்த்தி வருகின்றன.
ராக்காயி போல் அகமுடையார்களில் தென்மாவட்டத்தில் இருப்போருக்கு இருக்கும் மற்ற பெரும்பான்மையான குலதெய்வங்களும் இந்த உண்மையை காட்டி நிற்கும் சாட்சிகளாக இன்றும் இருக்கின்றன. அவற்ற்றில் இருளாயி,சூராயி போன்ற தெய்வங்கள் குறிப்பிடத்தக்கன

இருளாயி- இருளாயி என்பது இருள் என்ற பொருளில் இருந்து உருவானது.இருளுக்கான தெய்வமே இருளாயி ஆகும்! ஆரியர்கள் இந்நாட்டில் புகுந்த போது இந்த நாட்டின் பூர்வகுடிகளாக இருப்பவர்களைக் கண்டு தங்களின் நிறத்தோடு ஒப்பிட்டு அவர்கள் கரியநிறத்தினர் என்று எழுதி வைத்தனர்.கருமை நிறம் கொண்ட அசுரர்கள் என்றும் இருட்டைப் போல் அவர்கள் விளங்கினர் என்றும் புராணங்களில் எழுதி வைத்தனர்.

ராக்ஷசி என்னும் சொல்லில் ரா என்பது இரா (இரவு) – இருட்டு என இருக்கக் கூடும். ராத்ரி என்ற வடசொல்லில் இரா (இரவு) உள்ளது. இருள் போன்று விளங்குபவன் ராட்சசன் என்றும் இருள் போன்று விளங்கும் பெண் ராட்சசியாகவும் மாறியது. ராக்காயி என்பது ராட்சசி என்பதில் இருந்து தோன்றியது போலவே இருள் எனும் வேர் சொல்லில் இருந்து தோன்றியதே இருளாயி என்ற பெயருமாகும்.

இருளாயி என்பது இருள் போன்று விளங்கிய அசுரர் வழியினரின் தெய்வமாக விளங்கியதில் ஆச்சர்யமில்லை.

அதே போல் அடுத்த தெய்வமான
சூராயி- இத்தெய்வத்தின் பெயரும் இதையே உணர்த்துகிறது. சூராயி என்பது சூலம் அல்லது சூரன் என்பதை வேர் சொல்லாக கொண்டு உருவானது.இரண்டுமே அசுர தொடர்புடையதாகும்!

இவ்வாறு பல்வேறு எச்சங்களும் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை காட்டி நிற்கும் சாட்சிகளாக இருக்கின்றன.ஆராய்வதற்கு நிறைய உண்டு!

அகம்படி மகாபலி வழிவந்த அசுரன்டா!

படிக்காதவர்கள் பார்க்க:
http://agamudayarotrumai.com/tweets/44/ ராக்காச்சி அல்லது ராக்காயி அம்மன்- வாணர் குல அசுரர்களின் வழிவந்த பெண் தெய்வம்
http://agamudayarotrumai.com/tweets/59/ வாணாசுரன்-வாணர் குல அகம்படியர்களின் முன்னோன்
http://agamudayarotrumai.com/tweets/53/ ஓணம் எனும் தமிழர் விழா- தமிழ்நாட்டு அடையாளங்கள் -காஞ்சிபுரம் ஓணேஸ்வரர் திருக்கோவில்- திருஓணகாந்தன்தளி




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo