பாண்டிய நாட்டில் சோழர் குடியான அகமுடையார்கள் ———————————–…

Spread the love

First
பாண்டிய நாட்டில் சோழர் குடியான அகமுடையார்கள்
———————————————-
கமுதி அருகில் வீரசோழன் என்ற ஊர் உள்ளது. இங்கு சோழர்களின் அரண்மனை இருந்துள்ளது சோழர்கள் பாண்டிய நாட்டை வென்று சோழ பாண்டியர் என்ற பெயரில் ஆண்டு வந்தனர். .பாண்டிய நாட்டை சில காலம் சோழர்கள் ஆண்ட போது இவ்வூரில் சோழர்களும் அவர்குடியினரும் அரண்மனை அமைத்து தங்கியிருந்துள்ளனர்.
நூல்: விருதுநகர் மாவட்ட வரலாறு பக்கம் 119-தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு .பார்க்க : படம் 1

பாண்டியர்களை ஒடுக்க சோழர்களால் அனுப்பபட்ட வாணாதிராயர் வழிவந்த அகமுடையார்கள் இன்று இராமநாதபுரம்,சிவகங்கை,மானமதுரை போன்ற இடங்களில் நிலைகொண்டுள்ளனர்.

அவ்வாறு வீரசோழன் (வீரசோழம்) என்றழைக்கப்படும் ஊரில் அன்று முதல் இன்று வரை சோழ அரசின் குடியினராக வந்தவர்கள் அகமுடையார்கள்.
இன்றும் இங்குள்ளவர்களில் முஸ்லீம்களை அடுத்து பெரும்பான்மையானோர் அகமுடையார்களே! என்னுடைய சிறுவயதில் அவ்வுருக்கு சென்றுள்ளேன் ஊர் முழுக்க எனது உறவினர்கள் இருந்தார்கள்.இதுமட்டுமல்ல இவ்வூரைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களும் அகமுடையார்களுடையதே!அகமுடையார்களே சோழர்கள் என்பதற்கான இது போல் எண்ணற்ற களச்சான்றுகள் உண்டு! ஆனால் எதையும் நம் ஆட்கள் தேடவும் இல்லை பாதுகாக்கவும் இல்லை.
இதே போல் மதுரை அருகில் உள்ளது சோழவந்தான் (சோழன் வந்தான்) இவ்வூரிலும் சோழர் தம் படை குடியுடன் தங்கியிருந்தான். இன்றும் இச்சோழவந்தான் ஊரில் பெரும்பான்மையினராகவும் ஆளும் வரக்கத்தினராகவும் அகமுடையார்களே உள்ளனர். பாண்டிய நாட்டில் சோழர் அடையாளத்தோடு எந்த ஊர் இருந்தாலும் அங்கு அகமுடையார்களே பெரும்பான்மையினர் ஆளும் மரபினராக இன்றும் உள்ளனர் .

பாண்டிய நாட்டு விருதுநகர் அருகே) சோழபுரத்தில் (அகப்பரிவாரத்தான் (அகம்படியர்) – ஆதாரம் விருதுநகர் மாவட்ட கல்வெட்டுக்கள் தொகுதி 2- கல்வெட்டு எண்: 324/2005 -தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு .பார்க்க :: படம் 2,3

ஆராய்வதற்கு நிறைய இருக்கு . தொடர்ந்து வரும்!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo