First
விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருடன் கடற் போரில் ஈடுபட்ட ஒரே அரசன் நம் மாமன்னர்கள் மருதுபாண்டிய மன்னர்கள்
—————————————————————————————-
கி.பி 18ம் நூற்றாண்டில் எத்தனையோ மன்னர்கள் இந்த நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் அதில் ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து துணிந்து போராடி அதில் வீரமரணமும் அடைந்தவர்கள் மிகச்சிலரே!
ஆங்கிலேயருக்கு எதிராக வளரியை ஆயுதமாக பயன்படுத்தியதையும் சரி,ஆங்கிலேயருக்கு எதிராக ராக்கெட்டை போர்களங்களில் பயன்படுத்தியது என்று பல்வேறு நுட்பங்களை போர்களத்தில் கொண்டுவந்த மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கடற்போரிலும் ஈடுபட்டனர் என்பது பல்வேறு தரப்பினரும் அறியாத செய்தி.
ஆம் ! மருதுபாண்டியர்கள ஆங்கிலேயரை எதிர்ப்பதற்கு போர்கருவிகளை கொண்டுவருவதற்கும் , போராளிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கடல் போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தில் இறுதிக் காலங்களில் மருதுபாண்டியர்களுக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கும் சன்டை நடந்துள்ளதை ஆங்கிலேயரின் ராணுவக்குறிப்புகள் பதிவு செய்துள்ளன.
ஆனால் எந்த இந்திய அரசரும் ஆங்கிலேயருக்கு எதிராக கடற்போரில் ஈடுபட்டதில்லை . அந்தப் பெருமையும் மருதுபாண்டியருக்கே உரியதாக உள்ளது.
எப்படிப் பார்த்தாலும் சிவகங்கை சீமை ஓப்பிட்டளவில் மற்ற பாளையங்களை விட சிறிய நிலப்பகுதி. மேலும் இச்சிறிய நிலப்பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்கள் மழைபொழிவு குறைவான பாசன வசதியற்ற நிலங்கள். பல்வேறு காலங்களில் பஞ்சம்,கொள்ளை நோய்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்த இப்பகுதிகளில் வருவாய் என்பதே குறைவு . இக்குறைவான வருவாயிலும் சிவகங்கை சீமையில் குளங்கள்,கண்மாய்கள் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பல்வேறு ஆலயங்களுக்கும் பல்வேறு திருப்பணிகளை செய்த மருதுபாண்டியரின் பணி அளப்பரியது.
இந்த குறைவான வருவாய் காரணமாக ஆங்கிலேயரிடம் இருந்தது போன்ற வலிமையான கடற்படை ,உறுதியான கப்பல்கள் , நவீன தொழில்நுட்பம் போன்ற இல்லாத காரணத்தால் மருதுபாண்டியர்களின் படை கடற்போரில் தோல்வியை தழுவியது என்றாலும் ஆங்கிலேயருக்கு எதிராக கடற்போரிலும் ஈடுபட்ட ஒரே மன்னர் என்ற வரலாற்றுப் பெருமையையும் மருதுபாண்டியர் தன்னகத்தே உரிமையாக்கி கொண்டுள்ளார்.
ஆனால் இந்திய அரசோ தமிழ்நாட்டில் அமைந்த கடற்படை தளத்திற்கு மருதுபாண்டியர் பெயரை வைக்காமல் ஐ என் எஸ் கட்டபொம்மன் INS kattabomman என்ற பெயரை 1990ம் ஆண்டு அமைத்தது. கட்டபொம்மன் தியாகத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும் கட்டபொம்மன் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கடற்போரில் எதிலும் ஈடுபடவில்லை ஆனால் மருதுபாண்டியரோ ஆங்கியேருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு தொண்டி துறைமுகத்தை விடுதலைப் போருக்கு பயன்படுத்தி கடற்போரில் ஈடுபட்டு பல்வேறு போராளிகள் இறந்துள்ளதை ஆங்கிலேயரே பதிவு செய்திருக்கும் போது மருதுபாண்டியர் பெயரை சூட்டாதது ஏனோ?
சரி இருக்கட்டும் இனிவரும் காலங்களில் இந்தியா தனது கடற்படையில் மருதுபாண்டியர்கள் பெயரை சேர்த்து தங்களுக்கு பெருமை சேர்த்துக் கொள்ளுமா? பார்போம்!
அதுமட்டுமா! குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐவகை நிலங்களிலும் ஈடுபட்ட ஒரே தமிழ் மன்னன் மருதுபாண்டியர் தான் இது குறித்து விரைவில் பதிவிடப்படும்!
இப்பதிவு அன்புத் தம்பி மருது GI Santhosh Maruthu அவர்களின் அன்புக்கு சமர்பிக்கப்படுகின்றது.
ஆதாரம்: நூல்: ஆங்கிலேயர்களின் குறிப்புகளைப் பின்பற்றி வந்த நூல்: மருதுபாண்டியர் வரலாறும்,வழிமுறையும். பக்க எண்கள் 155,156,157
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்