First
மானமுள்ள தமிழன் ஒருத்தன் இருக்கான்டா!-தினமலர் நாளிதழுக்கு நன்றி!-
———————————————————
1801ல் திருச்சி சீரங்கத்தில் மருதுபாண்டியர் வெளியிட்ட உலகப்புகழ்பெற்ற திருச்சி சுதந்திரப் பிரகடணத்தை வைத்து அதுவே முதல் சுதந்திரப் போராட்டத்திற்கான ஒட்டுமொத்த அறைகூவல் என்று பேராசியர் ராஜைய்யன் உள்ளிட்ட பல வராலாற்றசிரியர்கள் பல நூல்கள் வழியாக வலியுறுத்தியிருந்தும் அவ்வளவு ஏன் மருதுபாண்டியர்களின் சமகாலத்தில் இந்நாட்டில் வாழ்ந்த கர்னல் வெல்ஷ் ,கோர்லே போன்ற வெள்ளையர்களே மருதுபாண்டியர்களின் வீரத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் விரிவாக தங்கள் நூல்களிலும் ராணுவக் குறிப்புகளிலும் எழுதியிருக்க,
இத்தனை நாள் தமிழ் நாட்டு ஊடகங்கள் அதை வெளிப்படுத்தாமல் வாய் மூடி மெளனியாக இருந்து வந்தன.
இத்தகைய வேளையில் முதல் சுதந்திரப் போரை முறையாக துவங்கியது மருதுபாண்டியர் என்ற உண்மையை தினமலர் நாளிதழ் தனது “100 நாள் வேலைத் திட்டம்” என்ற இன்றைய தலையங்கத்தில் குறிப்பிட்டு வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது!தலையங்க கட்டுரையில் வெளிவந்துள்ளதால் தினமலரின் அனைத்து பதிப்புகளிலும் (எல்லா ஊர்களிலும்) இச்செய்தி போய் சேர்ந்திருக்கும்
மருதுபாண்டியரும் அவரது வாரிசுகள் அனைவரும் செய்த உயிர் தியாகத்திற்கு இப்போது தான் ஓரளவு அங்கீகாரம் தமிழ்நாட்டு ஊடங்களில் கிடைத்துள்ளதை இன்று உணர்கிறோம்!இனிமேலேனும் மற்ற பல ஊடகங்களும் இந்த உண்மையை உரக்கப்பேசட்டும்!
மருதுபாண்டியர் பற்றி தவறான தகவல் வந்த போது தினமலர் அலுவலகத்தை தொலைபேசியில் வறுத்தெடுத்த அதே உறவுகள் அதே உணர்வோடு இக்கட்டுரைக்கு நன்றி தெரிவித்து தினமலர் அலுவலகத்திற்கு தவறாமல் போன் செய்யவும்!
சென்னை அலுவலக எண்கள்
Mobile:9944309600 – 01
சென்னை தொலைபேசி :044 285 40001 – 09
Fax: 044 285 40010
தகவல் உதவி: தம்பி சந்தோஷ்
தினமலர் அலுவலகத்திற்கு போன் செய்து நன்றி தெரிவித்தவர்கள்,கமேண்டில் குறிப்பிடுக!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்