செவலப்புரை அகம்படி வேளான் கல்வெட்டு ————————————— வேளா…

Spread the love

First
செவலப்புரை அகம்படி வேளான் கல்வெட்டு
—————————————
வேளாண்மையை தொழிலாக கொண்டவர்கள் ஆயிரம் ஆண்டுக்களுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களில் வேளான்,வேளார் என்று அழைக்கப்பட்டுள்ளனர். போர் தொழிலைக் கொண்ட அகமுடையார்கள் போர்களில் வீரபோகம் பெற்று நில உடமையாளர்களாக மாறி பின் அகம்படியார்களில் பலர் வேளான் தொழிலுக்கு மாறி உள்ளனர்.
இப்படி மாறிய அகம்படி இனத்து வேளாளார்கள் ஆயிரக்கணக்கான முன்பான பல்வேறு கல்வெட்டுக்களில் அகம்படி வேளான்,அகம்படி வேளார் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நிறைய கல்வெட்டுக்களை நாம் ஏற்கனவே நமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம். இதில் புதிய ஓர் கல்வெட்டுச் செய்தி இணையத்தில் தேடிய போது காணக் கிடைத்தது.

குறிப்பிட்ட இந்த கல்ல்வெட்டு செஞ்சி அருகில் உள்ள செவலப்புரை என்ற கிராமத்தில் கண்டிபுடிக்கப்பட்டுள்ளது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1312-ல் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டுச் செய்தியில் “அகம்படி வேளான்” என்ற அகம்படிய இனத்தைச் சேர்ர்ந்தவரும் காட்டுப்பள்ளி வேளான் எனும் பள்ளி(இன்றைய வன்னியர்) இனத்தைச் சேர்ந்தவர்களும் வேளாளர்களாக(நிலக்கிழார்களாக) அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து சோழ பிரமராயன் (பிராமராயன் என்போர் பிராமணர் இனத்தவரைக் குறிக்கும்) . இந்த மூன்று பேரும் இணைந்து கோயிலுக்கு தானம் வழங்கியுள்ளதில் கையொப்பமிட்டுள்ளனர் .

ஆயிரக்கணக்கான முன்பான கல்வெட்டுக்களில் வேளான்,வேளார் என்ற சொற்களே பயன்பட்டுள்ளன.
புகழ்பெற்ற கருணாகர தொண்டைமான் என்பவர் வண்டாழஞ்சேரியுடையான் வேளான் கருணாகரனார் ஆன தொண்டைமானார் என்றும்
புகழ்பெற்ற இருக்குவேளிர் வம்சத்தைச் சேர்ந்த அனைவரும் சிறிய வேளான்,சிறைய வேளார் என்று வேளான்.வேளார் ஏன்ற அடைமொழியுடனேயே அழைக்கப்பட்டுள்ளனர்.

இது போன்று ஒன்றல்ல,இரண்டல்ல ,ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள் வேளான்,வேளார் என்றே உள்ளன!

இதுபற்றி மற்றொரு சந்தர்பத்தில் விரிவாக பேசுவோம்!
இப்போது குறிப்பிட்ட இந்த கல்வெட்டுச் செய்தியைப் பற்றி அறிய இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.

இந்தக் கல்வெட்டுச் செய்தி பற்றி மற்ற செய்தி தாள்களில் வந்த செய்திகளை கீழ்கண்ட லிங்குகளை கிளிக்ச் செய்து படிக்கவும்

https://www.dinamani.com/tamilnadu/2019/aug/29/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3223260.html

https://www.vikatan.com/news/temples/new-inscriptions-found-in-sevalappurai-agastheeswarar-temple?artfrm=v3

ஏற்கனவே வெளியிட்ட வேளான் அடையாளம் கொண்ட அகம்படி இனத்தவர் கல்வெட்டுக்கள் கீழே

வெண்பாக்கமுடையார் அகம்படி வெளார்(வேளார்)
https://www.facebook.com/agamudayarotrumai/photos/a.919462468087144/1537970606236324/?type=3&__xts__%5B0%5D=68.ARDlV07fFOewm_CDxDSrImorqvXMGLOZ9i4mBRazg19YsToN1oMJ_-Ib0wb4ADm27F701mw2GUNkhi0r55B3JxCEYR4ODKiMf9WTBmTbTe71K47v0u3EKZm2oV7D3k0u7ZCj0jbP29aSaFvl2Gbd1vhxrC-P53_bCYt6q15EMul56Kw7qnaeb08AD56uD_vh9o4be-grCZHh5aQmN_6leoaIxFtb4mRUzwJ-5mJ9e5Z1fVDyTdyh1iPD2DhW6hRom6-0o0Wv3qFEPTX6Pfo7R0Wq5Z2-4XWBkNjI4j55SCIvKuKwkOfqFjTTqcadhDuDaGIX9E1ExEXSRvZl1P5Vd1j40mdEcyQfX7lHxFp0k1EttObU97IXNIx1VFzYze7BTfCiN4bBQYoq_X8VC3sfv4PKq3OfH3mm3Y8Oo8Xj_ZJo_8aScfHg9XF8NXc4ezpB3TFIlVIke1uxjl_Gw0ck8syUr977uL6xuU8aI4Yau3_0CjQRF-fVsA&__tn__=H-R

அகம்படி முதலிகளில் பிரங்குடையான் ஆளும்பிரான் பெரியநான மலையாள்வி வேளானும்
புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் (பார்க்க புகைப்படம் 2)

இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன! வேலைபளுவினால் பல செய்திகளை எழுதிட இயலவில்லை.ஆனால் தேவைப்பட்டால் மீண்டும் வருவோம் ! தொடர்ந்து பயணிப்போம்! அகமுடையார் உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo