First
பச்சையப்ப முதலியார் -அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் சான்று 3
———————————————————–
வள்ளல் பச்சையப்ப முதலியார் அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் என்பதற்கு இன்றும் வாழும் சாட்சிகளாக உறவினர்கள் இருக்கின்ற போதும் துணிந்து அவரை தங்கள் இனத்தவர் என்று மாற்று சாதியினர் கூறி வந்துள்ளனர்.
வள்ளல் பச்சையப்ப முதலியார் அகமுடையார் இனத்தவர் என்பதற்கு முதல் ஆதாரமாக 200 வருடங்களுக்கு முன்பு 1800களின் ஆரம்பித்தில் சீனிவாச பிள்ளை எழுதி வெளியிட்ட பச்சையப்ப முதலியார் சரித்திரம் நூல் குறிப்பை ஆதாரமாக காட்டியிருந்தோம்.
பின்னர் இரண்டாவது ஆதாரமாக 1930-40 களின் காலத்தில் திராவிடன் இதழில் திராவிட பித்தன் என்பவர் எழுதிய பச்சையப்பர் குறித்த கட்டுரை ஆதாரத்தை வெளியிட்டோம்.
தற்போது மூன்றாவது ஆதாரத்தையும் வெளியிடுகின்றோம்.
அதாவது ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியாற்றினார் இவர் வாழ்ந்த காலத்தில் திரட்டிய செய்திகளை கொண்டு அபிதான சிந்தாமணி என்ற பெயர் இலக்கியக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார்.
இது இவருடைய வாழ்நாளின் பின்னாளில் சரியாக சொன்னால் இவர் இறந்து ஒருவருடம் கழித்து 1932ம் வருடம் இவரின் புதல்வர் சிவப்பிரகாச முதலியாரால் வெளியிடப்பட்டது.
இந்நூலிலும் பச்சையப்ப முதலியார் அகமுடைய வேளாளர் இனத்தவர் என்று தெளிவாக எழுதியுள்ள சான்றை இப்பதிவில் இணைத்துள்ளோம்.
நம்மவர்களை மாற்று இனத்தவர்கள் தங்கள் இனத்தவர் என்று தொடர்ந்து பொய்யாக ஏமாற்றும் போக்கு எப்படி வளர்ந்தது? அது பட்டங்களை சாதியாக கருதி சொந்த சாதிக்காரர்களையே தங்கள் சாதி இல்லையென்றும் வேறு சாதிக்காரன் வைத்திருக்கும் பட்டத்தை வைத்து தம் சாதி தான் என்று நினைக்கும் நம்மவர்களின் அறியாமையாலும் வரலாற்று அக்கறையின்மையாலுமே நடக்கின்றது!
பட்டங்கள் வேறுபட்டாலும் சாதி ஒன்று! பட்டங்கள் ஒன்றாக இருந்தாலும் வேற்று சாதி, வேற்று சாதி தான்! இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் எல்லாம் சரியாகும்!
வெட்கமே இல்லாமல் துணிந்து பொய் பேசும் கூட்டமே இனியாவது திருந்திக்கொள்ளுங்கள்! ஏனென்றால் பொய் என்றும் நீடிக்காது! உண்மை என்றும் பொய்யாகாது!
வாய்மையே வெல்லும்!
குறிப்பு:
இப்பதிவின் முதல் புகைப்படம் புதிய நூல் ஆதாரம் ஆகும்.
2வது,3வது படங்கள் பழைய நூல் ,கட்டுரை ஆதாரங்கள்!
ஆதாரம்
சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி பக்கம் எண் 1006.
இந்நூலை இணையத்தில் படிக்க விரும்புவோர் அல்லது ஆதாரத்தை சரிபார்த்துக்கொள்ள விரும்புவோருக்கான லிங்க் https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM9jupy.TVA_BOK_0009120/page/1005/mode/2up?q=%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்