First
அரச நாராயண பல்லவரையன் கல்வெட்டும் கல்வெட்டுக்களின் வழியே வரலாறு தேடல் அவசியமும்
——————————————–
இன்று ஓர் புதிய கல்வெட்டு செய்தியை பார்க்கப்போகின்றோம். ஆனால் அதற்கு முன்னால் வரலாறு தேடலின் அவசியத்தையும் பார்க்கப்போகின்றோம்!
கல்வெட்டு வழியாக வரலாற்று தேடலின் அவசியம்
—————————————-
கல்வெட்டு வழியாக வரலாற்று தேடலின் அவசியம் குறித்து பல மணி நேரங்கள் விளக்கமுடியும் இருப்பினும் காலத்தின் அருமை கருதி சுருக்கமாகவே இங்கு எழுதுகின்றோம்.
சிந்துவெளி காலத்தில் இருந்தே தொடங்கி 4000-5000 வருடங்களாக அகம்படி எனும் அரசமரபாகவும் 2000 வருடங்களாக சாதியாக பரிணமித்து
இன்று தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 15 சதவீதம் முதல் 20 சதவீதமாக உள்ள அகமுடையார் பேரினம் இன்றுவரை கலை,இலக்கியம்,ஆன்மீகம்,அரசியல் ,பொருளாதாரம், நாடு பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த சமூகங்களில் 30% க்கும் மேலான பங்களிப்பை செய்துள்ளது.
இச்சமுதாயத்தில் சோழநாடு , பாண்டியநாடு ,சேரநாடு,தொண்டைமண்டலம் இன்றைய கர்நாடகம் எனும் 5 பெரும் நாடுகளை, சேர,சோழ ,பாண்டிய அரசர்களுக்கு முன்பே ஆண்ட மாவலி போன்ற பெரும் சக்கரவர்த்திகளும் , சோழர்,வாணர்,வாணாதிராயர், கட்டியர், பல்லவராயர்கள்(தொண்டை மண்டல,சோழ தேச,பாண்டிய, பல்லவராயர்கள்) , அறந்தாங்கி தொண்டைமான்கள் , தமிழ் கங்கர்கள் மற்றும் பல குறுநில அரசமரபினரும் தொடர்ந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்.
ஆயினும் அகமுடையார் சமுதாயத்தினருக்கு வரலாற்றின் மீது இருந்த அக்கறையின்மையின் காரணமாக பல்வேறு சமுதாயத்தினரும் அகமுடையார் சாதியை சேர்ந்த மேற்சொன்ன வரலாற்று நாயகர்களை தங்களவர் போல் சொந்தம் கொண்டாடி வந்துள்ளனர்.
சொந்த சாதியினரான அகமுடையார்களுக்கே தங்கள் சாதி வரலாறு மீது அக்கறையின்மை ஒருபுறம் இருந்தாலும் மாற்று சாதியினரும் நமது முந்தைய வரலாறு மீண்டெழுவதை விரும்பாமலே இருந்துள்ளனர் என்பதோடு இந்த உண்மைகளை புறந்தள்ள ஆரம்பத்தில் இருந்தே பல வேலைகளை செய்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக நம்மோடு இணைந்து வாழ்ந்துவரும் சில மாற்று சமுதாயத்தினர் அகமுடையார் வரலாற்றை சேதுபதிகள் காலத்திற்கு முன் அதாவது 300 -400 வருடங்களுக்கு முன்பாக நகர்த்தி செல்ல விரும்பவில்லை என்பதே உண்மை!
அவ்வாறு 300 வருடங்களுக்கு மேல் நகர்த்தி சென்று விட்டால் இந்த சமுதாயத்தில் எவ்வளவோ பேரரசர்கள்,சிற்றரசர்கள், தனிப்பட்ட வரலாற்று நாயகர்கள் பலர் இருந்துள்ளனர் என்ற செய்தியெல்லாம் வெளிவரும் என்பதோடு தங்களுக்கும் அகமுடையார் சமுதாயத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது வெளிப்படும் என்பதால் மாற்று சாதியினரும், மாற்று சாதியினரோடு சேர்ந்து சொந்த சாதிக்கே துரோகம் செய்யும் சிலர் செய்யும் உள்ளடி வேலைகளே காரணமாகும்.
இவர்கள் தொடர்ந்து அகமுடையார் என்பது தனி சாதி அல்ல என்பது போலவும், அது தங்களிடம் இருந்து தான் உருவானது என்பது போலவும் சொல்லிவந்தனர். அதற்கு அவர்கள் கூறிய இமாலய பொய்தான் 300 – 400 வருடங்களுக்கு முன் அகமுடையார்களுக்கு வரலாறு இல்லை என்பது.
இதற்காகவே மாற்று சாதியினர் நம் வரலாற்றை அவர்களோடே இணைத்து ஏதோ அவர்களால் தான் நமக்கு வரலாறு கிடைத்தது போலவும்,
300 வருடங்களுக்கு முன்பு நாம் வரலாற்றிலேயே இல்லை என்பது போலவும் இவர்களிடமிருந்து தான் அகமுடையார்கள் உருவானதாகவும் வாய் கூசாமல் பொது இடங்கள் பலவற்றில் பேசியும் முகநூல்களில் தொடர்ந்து எழுதியும் வந்துள்ளனர்.
ஆனால் கெட்டுக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல் கல்வெட்டு வழியாக நாம் வரலாற்றை வெளிப்படுத்த ஆரம்பித்த பின்பு சூரியனை கண்ட பனியினை போல் உண்மை வெளிப்பட்ட தொடங்கியது.
ஆம் முதல் கல்வெட்டு செய்தி வெளியிட்ட போது அகமுடையார் சமுதாய வரலாறு 14ம் நூற்றாண்டு (இன்றிலிருந்து 600 வருடங்கள் வரை முன்னேறியது) அப்போது அதுவரை அகமுடையார் வரலாறு 300-400 வருடங்களுக்கு முன்பு அதாவது கி.பி 16ம் நூற்றாண்டிற்கு பின்பு தான் தொடங்கியது என்று சொன்ன மாற்று சமுதாயத்தினர், 14ம் நூற்றாண்டு கல்வெட்டா? ஆம் அகமுடையார்களுக்கு 600 வருட வரலாறு இருக்கிறது .அதற்கு மேல் இருக்காது என்றார்கள்.
பின்பு 12ம் நூற்றாண்டின் அகமுடையார் கல்வெட்டை போட்டவுடன் அப்போதும் சளைக்காமல் 12ம் நூற்றாண்டா? ஒருவேளை இருக்கலாம். 12ம் நூற்றாண்டு முன் இருக்கவே இருக்காது என்றார்கள்.
ஆனால் தொடர்ந்து கடும் முயற்சி செய்து பல்வேறு கல்வெட்டுக்களை வெளியிட நமது வரலாற்று காலம் 10ம் நூற்றாண்டு, 8ம் நூற்றாண்டு, 5ம் நூற்றாண்டு என்று பின்னோக்கி சென்று ஒரு கட்டத்தில் சங்க காலத்தையும் தாண்டி அகம்படி மரபானது 4000-5000 வருடத்திய சிந்து வெளி காலத்திற்கு போய் நின்றது.
கல்வெட்டு வழி வரலாற்று மீட்பு-நீண்ட நெடிய பணி
————————————–
கல்வெட்டு வழி வரலாற்று மீட்பு என்பது நீண்ட நெடிய கடுமையான பணியாகும்.
முதலில் அகமுடையாருக்கான கல்வெட்டை தேடுவதே சிரமமான ஒன்று.
இதற்காக பல்வேறு கல்வெட்டு நூல்கள் வாங்க வேண்டும் அதுவும் ஒரே இடத்தில் கிடைத்து விடாது பல்வேறு இடங்களில் அலைந்து தேடி கல்வெட்டு நூல்களை பெற வேண்டும். குறிப்பாக அரசு வெளியிட்ட கல்வெட்டு நூல்களை வாங்க வேண்டுமென்றால் சென்னை அல்லது பெங்களூரில் உள்ள தொல்லியல் அலுவலகம் செல்ல வேண்டும் .
அப்படி வாங்கி நூல்களை சேகரிக்கும் போது தான் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் கிடைக்கும். அந்த கல்வெட்டுக்க்களில் இருந்து நமக்கான கல்வெட்டை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல.
அதாவது 1000 கல்வெட்டுக்களை தேடினால் அதில் ஒன்று தான் நம் அகமுடையார் சாதி பற்றிய கல்வெட்டு கிடைக்கும்.
அப்படியே கல்வெட்டு கிடைத்தாலும் உடனே கட்டுரையை வரைந்துவிட முடியாது. அதற்கு வருடக்கணக்கான வரலாற்று வாசிப்பு அனுபவமும் வேண்டும். அப்போது தான் கிடைத்துள்ள கல்வெட்டு செய்தியை பல்வேறு தரவுகள் மூலம் ஒப்பிட்டு பார்த்து பின் இதை நமது வரலாற்று வாசிப்ப்பு அனுபவத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து முழு செய்தியை வெளிக்கொணர முடியும்.
இவ்வாறு தேடல் செய்யும் போது நம்முடைய மற்ற வேலைகளை கவனிக்க முடியாது. குறிப்பிட்ட கல்வெட்டை தேட சில நாட்கள், அந்த கல்வெட்டு குறித்த மேலதிக தகவல்கள் சில நாட்கள் என பல நாட்கள் ஓடிவிடும். அப்படியே கருத்துக்கள் எல்லாம் கிடைத்துவிட்டாலும் கட்டுரை எழுத உட்கார்ந்தால் விரிவான ஓர் கட்டுரை எழுத ஓரு நாளின் பாதி பொழுதாவது தேவைப்படும்.
இத்தகைய நேரத்தில் நம்முடைய மற்ற வேலைகளை செய்யமுடியாது என்பதால் இது பணத்தையும் ,நேரத்தையும் உழைப்பையும் செலவளிக்கூடிய கடுமையான பணி.
அதனால் தான் அகமுடையார் ஒற்றுமை தளத்தால் முன்பு போல் வரலாற்று கட்டுரைகளை தீவிரமாக தேடி தொடர்ந்து வெளியிட முடியவில்லை
இப்படியான இக்கட்டான நேரத்தில் தான் நாம் கல்வெட்டு செய்திகளை ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட திரு சோ.பாலமுருகன் அகமுடையார் பல்வேறு இடங்களுக்கு சென்று பல கல்வெட்டு நூல்களை வாங்கி, அதில் நம்மை பற்றிய செய்திகளை சேகரித்து நம் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றார்.
ஆம்! அகமுடையார் ஒற்றுமை தளத்தின் மூலமாக கல்வெட்டு செய்திகளை விரிவான கட்டுரைகளாக நாம் வெளிட்டாலும் சென்ற காலங்களில் நூல்கள் வாங்குவதற்கு பல்வேறு நல்ல உள்ளங்கள் நமது முயற்சிக்கு பெரும் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நாமும் நமது அகமுடையார் உறவுகளும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.
அதே போல் வரலாறு குறித்து பல்வேறு தரவுகளை அன்று முதல் இன்றுவரை வழங்கி வரக்கூடிய அகமுடையார் அரண் இயக்கத்தின் திரு சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு இங்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
அகமுடையார் வரலாற்றை தேடுவதிலும், பட்டங்களில் வேறுபட்டாலும் சாதியால் அகமுடையார்கள் ஒன்றிணைய வேண்டும் என்று எந்த கைமாறும் கருதாமல் பல வருடங்களாக முழுநேரமாக இதே பணியில் செயல்பட்டு வரும் திரு சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நாமும், அகமுடையார் சமுதாயமும் கடமைப்பட்டுள்ளது என்று சொன்னால் நிச்சயம் அது மிகையல்ல.
நமக்கு தற்போது ஏற்பட்டுள்ள மற்ற வேலை பளு காரணமாகவும் ,நேரமின்மை காரணமாகவும் அகமுடையார் ஓற்றுமை தளத்தினால் முன்பு போல் வரலாற்று தேடலில் இறங்கவோ அல்லது கட்டுரைகளை அடிக்கடி வரைவதோ சிரமாக இருக்கும் இந்தவேளையில் திரு சோ.பாலமுருகன் அவர்களே நமது பதிவுகளுக்கு தேவையான ஆதாரங்கள் பலவற்றை வழங்கி வருகின்றார்.
ஆம் பல்வேறு இடங்களில் தேடி, பல கருத்துக்களை ஆராய்ந்து நமது அகமுடையார் ஒற்றுமை தளத்தின் மூலம் அகமுடையாருக்கான முதல் கல்வெட்டினை வெளிப்படுத்தியது முதல் இதுவரை 50க்கும் மேற்பட்ட அகமுடையார் கல்வெட்டுக்கள் குறித்து விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
இனிவரும் காலங்களில் இன்னும் அதிக கல்வெட்டுக்கள் வழியாக பல்வேறு வரலாற்று செய்திகளை வெளிப்படுத்த உள்ளோம்.
பலத்த இடர்பாடுகளுக்கு இடையேயும் பெருமுயற்சியால் தொடரும் வரலாற்று மீட்பு முயற்சி
———————————————————–
ஏற்கனவே சொன்னது போல அகமுடையார் கல்வெட்டு நூல்களை கர்நாடகா மாநிலம், மைசூர் மாநகரில் அமைந்துள்ள மத்திய தொல்லியல் துறை அலுவகலத்திற்கு நேரடியாக சென்று
(Archaeological Survey of India) அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை வெளியீடுகளில் ஏற்கனவே இவர் வாங்கிய நூல்கள் தொகுப்பில் விடுபட்ட 29 நூல்களை அகமுடையார் வரலாற்று ஆய்வுக்காகவும், அகமுடையார் அரண் ஆவண நூலக சேமிப்பிற்கவும் வாங்கியுள்ளார் (இது குறித்த புகைப்படங்கள் மற்றும் ரசிதுகளை இப்பதிவில் காணலாம்)
பெங்களூர் சென்று பெற்றுவந்த புதிய கல்வெட்டின் முழுவரிகள்
—————————————————-
பொதுவாக கல்வெட்டு ஆண்டறிக்கையில் கல்வெட்டு பற்றிய குறிப்புகள் மட்டுமே வெளியிடப்படும் . கல்வெட்டின் முழுவரிகள் வெளியிடப்படாது. அப்படி மத்திய கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்புகளில் உள்ள அகம்படியார் பற்றிய குறிப்புகளை கண்டறிந்தோம்.
ஆனால் வெறும் குறிப்புகளில் பெயர்கள் மட்டுமே கிடைக்கும் முழுகல்வெட்டு வரிகளை தற்போது உள்ள நிலைமையில் நாம் பெங்களூருக்கு அருகில் புறநகர் பகுதியில் உள்ள அலுவகலம் சென்று அங்கு எழுதிக்கொடுத்து பெற வேண்டும்.
அப்படி எழுதிக்கொடுத்து சில கல்வெட்டுக்களின் முழுவரிகளை திரு சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் பெற்று நம் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இக்கட்டுரையில் இனி நாம் காணப்போவது அந்த கல்வெட்டுக்களில் ஒன்று தான்.
இப்பயணத்திற்கு உதவிய பட்டுக்கோட்டை சண்முகவடிவேல் அகமுடையார் ,சென்னை சத்தியபிரகாசு அகமுடையார், தஞ்சை பார்த்திபன் அகமுடையார் உடன் இருந்தார்கள் அவர்களுக்கும் நமது நன்றிகள்!
அகம்படி கொத்து முதலிகளில்
மிண்டன் பெரியான
அரசநாராயண பல்லவரையன் கல்வெடு
——————————————–
கல்வெட்டு சுருக்கம்::
ஆதாரம் : கல்வெட்டு ஆண்டற்றிக்கை 479 , வருடம் 1921.
வீர ராஜேந்திர சோழனின் 5ம் ஆட்சியாண்டில் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டு திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவற்கு பாலாடி அருள் உடையார் காடவராயர் அகம்படி கொத்து முதலிகளில் சேந்தமங்கலத்திலிருக்கும் மிண்டன் பெரியான
அரசநாராயண பல்லவரையன் சந்திராத்தவரை குறிப்பிட்ட நாழி பால் அளக்க சீராள கோன் என்பவனுக்கு எட்டு பசுக்களை வழங்கியுள்ளான்.
கல்வெட்டின் விரிவான விளக்கம்
வீர ராஜேந்திர சோழனின் ஆட்சியாண்டு கி.பி. 1178 தொடங்குவதாலும் கல்வெட்டில் கல்வெட்டின் காலம் வீர ராஜேந்திர சோழனின் ஆட்சியாண்டில் இருந்து 3 வது வருடம் என்பதால் இக்கல்வ்ட்ட்டின் காலம் கி.பி 1181 அல்லது கி.பி 12ம் நூற்றாண்டு எனலாம்.
கல்வெட்டில் வீர ராஜேந்திர சோழனின் பெயருக்கு பின்னால் காடவராயர் பெயர் வருவதால் வீர ராஜேந்திர சோழனுக்கு அடங்கிய சிற்றசராக காடவராயர் இருந்திருக்க வேண்டும் .
இந்த கல்வெட்டில் வரும் கல்வெட்டு வரி எண் 3 தான் முக்கியமானது இதுவே அகம்படி இனத்தை சேர்ந்த நாம் தேடிவந்தவரை குறிப்பிடுகிறது.
அதாவது அகம்படி கொத்து முதலிகளில் சேந்தமங்கலத்திலிருக்கும் மிண்டன் பெரியாநான அரசநாராயண பல்லவரையன் என்ற வரிகள் வருகின்றது.
குறிப்பிட்ட அகம்படி என்ற வரிகள் மூலம் இவன் அகம்படி இனத்தவன் என்பதும் கொத்து முதலி என்பதன் மூலம் இவன் கொத்து எனும் கோட்டை கொத்தளங்களை பாதுகாவல் செய்யும் வீரர்களின் முதலி (தலைவன்) என்பதும் தெரியவருகின்றது.
மேலும் இவன் சேந்தமங்கலம் எனும் பகுதியில் வாழ்ந்து வந்தான் என்று தெரிகிறது. சேந்தமங்கலம் என்பது காடவராயர் அரசர்கள் தலைநகரங்களில் ஓன்று இன்பதால் இவன் இங்கு வந்து காடவராயர் கீழ் பணி செய்துள்ளான்.அதே நேரம் இன்றைய திருக்கோயிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூரில் உள்ள கோவில் இறைவனுக்கு தானமளித்தன் காரணம் இவன் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவனாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட இந்த பகுதி அகம்படி முதலியார்கள் இன்றும் நிறைந்து வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
சரி அடுத்த வரிகளை காண்போம்.
மேலும் மிண்டன் என்பதால் இவன் உறுதியானவன் ,வலிமையானவன் என்ற அடைமொழி அல்லது புகழ்பெயர் கொண்டிருந்தான் என்பதும் பெரியானான என்பது உயர்ந்தவன் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
அடுத்து வரும் அரச நாராயண பல்லவரையன் என்ற வரிகள் என்பதன் மூலம் இவன் அரச அல்லது அரசு பல்லவரையன் என்று அழைக்கப்பட்டான் என்பதும் தெரியவருகின்றது.
புதுக்கோட்டை ,அறந்தாங்கி பகுதியில் ஆட்சி செய்த அறந்தாங்கி தொண்டைமான்கள் , பல்லவராயர்கள் அரசு பல்லவராயர் என்றும் அரசு தொண்டைமான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தங்களை அகம்படியினர் என்றும் அகம்படி வேளாளர் என்றும் தங்களை அழைத்துள்ளனர். மேலும் அகம்படியினரின் பிள்ளை பட்டத்துடன் பிள்ளை பல்லவராயர் என்றும் அழைத்துள்ளனர். இதனால் நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் இப்பதிவில் வரும் குறிப்பிட்ட இந்த அரச நாராயண பல்லவராயன் என்பவன் கி.பி 1181 அல்லது கி.பி 12ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவன் என்பதால் கி.பி 13 மற்றும் அதற்கு பின்பான நூற்றாண்டுகளில் அறந்தாங்கி ,புதுக்கோட்டை பகுதியில் அரசு பல்லவராயர் ,அரசு தொண்டைமான் என்று வழங்கிவரும் வழியினரின் முன்னோனாக இருக்க வேண்டும். இதை பற்றி இன்னொரு நாள் விரிவாக காண்போம்.
ஆகவே இந்த கல்வெட்டு செய்தியின் மூலம் சேந்தமங்கலத்தில் வாழ்ந்த அகம்படி இனத்தை சேர்ந்த கோட்டை தலைவன் (முதலி) திருவெணைய் நல்லூர் இறைவன் ஆட்கொண்ட தேவர் பூசைக்கு பால் அபிசேக பூசை நடைபெற 8 பசுமாடுகளை சிராளகோன் எனும் இடையனுக்கு அளித்து சந்திராத்தவர்(சந்திர சூரியர் உள்ளவரை) நித்துவமாக (தொடர்ந்து) வர தானம் அளித்துள்ளான் என்று தெரிகிறது.
பல்வேறு விசயங்கள் உள்ளன. ஆனால் அவற்றையேல்லாம் இந்த ஒரு கட்டுரையில் பேசி விட முடியாது. மேலும் பேசினாலும் எல்லோரும் இதை வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால் இதோடு நிறைவு செய்கின்றோம்.
நிறைவாக
————–
நம் வரலாறு முழுமையாக கூட மட்டுமல்ல ஓரளவிற்கு கூட வெளிவரவில்லை .அதே போல் மாற்று சாதியினர் நம் வரலாற்றை மறைக்கிறார்கள் என்று மாற்று சாதியினரை கைகாட்டும் அதே வேளையில் நமது சொந்த அகமுடையார்களிடத்திலும் பெரும் தவறு இருக்கிறது.
அகமுடையார் வரலாறு பற்றி பேசுவதற்கு ஆள் இல்லை. அகமுடையார் சமுதாய உண்மையில் முழுமையாக வரவில்லை என ஆதங்கப்படுகிற பெரும் அகமுடையார்கள் அதற்கான ஆரம்பகட்ட முன்னெடுப்புகளை கூட செய்யவில்லை என்பது தான் உண்மை!
அல்லது முயற்சி செய்கின்றவர்களையும் ஊக்கப்படுத்துவதும் இல்லை என்பதும் உண்மை!
ஆகவே இனியாவது நம் அகமுடையார் உறவுகள் அகமுடையார் வரலாற்று மீட்புக்கு தங்களான உதவியை பணியை செய்திட முன் வர வேண்டும். மாற்றத்தை விரும்பினால் நாம் முதலில் மாற வேண்டும்!
சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களை தொடர்பு கொள்ள விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் : 94429 38890.
புகைப்படங்கள் இணைப்பு
படம் 1: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளியான கல்வெட்டு குறிப்பு வருடம் 1921 கல்வெட்டு எண் 4779 .
படம் 2: இதே கல்வெட்டு குறித்து தென் இந்திய கல்வெட்டு தொகுதி 12 கல்வெட்டு பக்கம் 170
படம் 3: பெங்களூர் தொல்லியல் அலுவலகம் நேரில் சென்று பெற்ற கல்வெட்டின் முழுவரிகள்
படம் 4,5,6: பெங்களூர் தொல்லியல் அலுவலகத்திற்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள்
படம் 7-12 தொல்லியல் அலுவலகத்தில் வாங்கிய நூல்களும் ,ரசிதுகளும்.
இன்னும் அதிகமான சில கருத்துக்கள்
———————————
பல்லவராயர்களும் உண்மை வழியினரும்
———————————–
இன்று பல்லவராயர் பட்டத்தை சிலர் உரிமை கொண்டாடுகின்றனர்.
ஆனால் அதில் சிலருக்கு ஒரு கல்வெட்டு ஆதாரம் கூட இல்லாமல் தொண்டை மண்டல பல்லவராயர்களுக்கும் , சோழ பல்லவராயர்களுக்கும் , அறந்தாங்கி பல்லவராயர்களுக்கும் பின்னால் காலத்தால் மிகவும் பிந்தி வந்த புதுக்கோட்டை கள்ளர் பல்லவராயர்களை வைத்து காலத்தால் முந்தைய அகம்படி சாதியினர் 15-20க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் தெளிவாக அழைக்கப்படக்கூடிய பல்லவராயர் வழியினரை தாங்கள் தான் என்று அப்பட்டமாக பொய் கூறிவருகின்றனர்.
ஆனால் இவர்கள் சொல்வதற்கு குறிப்பிட்ட பல்லவராயரின் சமகாலத்தில் ஒரு கல்வெட்டு ஆதாரமும் இல்லை.
ஆனால் அகமுடையார் சமுதாயத்திற்கோ குறிப்பிட்ட பல்லவராயரின் சமகாலத்தில் வெவ்வேறு கால அளவுகளில்
20க்கும் பல்லவராயர்களை அகம்படியினராக குறித்த கல்வெட்டு செய்திகள் கிடைத்துள்ளன.
இந்த கல்வெட்டு ஆதாரங்கள் செப்பேடுகள் ,வாழ்வியல்((கள) ஆதாரங்கள்ளுடன் விரைவில் கணொளி மற்றும் மின் நூல் மூலம் பொதுவெளிக்கு கொண்டு செல்ல இருக்கின்றோம். அப்போது பொதுவெளியில் உள்ளவர்களுக்கு இந்த உண்மை புரியவரும்.
திருவெண்ணைநல்லூர் கோவில்
——————————-
இக்கோவிலானது இன்றைய விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் எனும் ஊரில் உள்ள தடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில் ஆகும் .இக்கோவில் தற்போது கிருபாபுரீஸ்வரர் என்ற பெயரில் வழங்கி வருகிறது.
இந்த கோவிலை பற்றி மேலும் அறிய
http://www.shivatemples.com/nnaadut/nnt14.php
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்