First
அகமுடையார் குலத்தோன்றல்,
முன்னாள் சபாநாயகர்,
முன்னாள் தமிழக அமைச்சர்
வீரமிகு கா. இராசாராம் Ex.MP., Ex.MLA., அவர்களின் தந்தையாரும்,
நீதிக் கட்சியின் முதன்மை தலைவர்களில் ஒருவருமான, சேலம் பெ. கஸ்தூரி பிள்ளை அவர்கள் எழுதிய,
“என் வாழ்க்கைக் கதை” என்னும் நூல் கூறும்
அகமுடையார் வரலாறு,
முதல் அத்தியாயம்,
எனது முன்னோர்கள் வாழ்க்கை
வரலாறு,
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு எனது முன்னோர்கள் காடுவெட்டி நாயக்கர், கஸ்தூரி நாயக்கர் என்னும் பெயர் பூண்ட இரு சகோதரர்கள் மதுரையை ஆண்ட நாயக்கர்களிடத்தில் (மன்னர்கள்) பட்டாளத்தில் ‘நாயக்கர்’ என்ற பட்டத்தை வகித்து சேவை செய்து வந்தார்கள்.
அவர்களுக்கு ஒரு அழகான பெண் இருந்ததாம். நாயக்க மன்னரைச் சேர்ந்த இளவரசன் ஒருவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்டானாம்.
அப்போது சாதி பாகுபாடு அதிகமாக இருந்ததால்; “அகம்படியர்” குலத்தில் பிறந்த பெண்ணை, நாயக்கர் வம்சத்தில் பிறந்த இளைஞனுக்கு, அவன் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் திருமணம் செய்து கொடுக்க விருப்பப்படவில்லை. அவன் கொடுத்தனுப்பிய சீர்வரிசைகளை யெல்லாம் ஒரு நாய்க்குப் பூட்டி, நடுவீட்டில் கட்டி விட்டு, தங்கள் குலதெய்வமாகிய “அங்காளம்மன்”, *புதுகுலத்தம்மன்” ஆகிய இரு சிலைகளையும் எடுத்துக் கொண்டு மதுரையிலிருந்து திண்டுக்கல் மார்க்கமாக கரூர் வந்து புகளூரில் காவேரி நதியைத் தாண்டி தங்கள் குடும்பம் உறவினர் சகிதமாக மரோபாளையத்தில் வந்து குடியேறியவர்கள் ஆவார்கள்.
மரோபாளையம் அப்பொழுது செழிப்பான இடமாக இருந்ததாம். அங்கிருந்து பல ஊர்களுக்கு அதாவது சூலூர், ஈரோடு அக்ரஹாரம், கோயம்புத்தூர், ஊராட்சி கோட்டை, சேலம், வேலூர், சென்னை முதலிய ஊர்களுக்கு பிழைப்பின் காரணமாக சென்றிருக்கிறார்கள். இன்னும் இந்த ஊர்களில் கொள்வினை, கொடுப்பினை அதாவது திருமணத் தொடர்பு நடந்து வருகிறது.
என்னுடைய முன்னோர்கள் சேலத்திலிருந்தும், சேந்தமங்கலம், அதன் அருகிலிருக்கும் காயாட்டி தெரு முதலிய இடங்களில் குடியேறி இருக்கிறார்கள். காயாட்டி தெரு என்ற ஊரில் காடுவெட்டி நாயக்கர், கஸ்தூரி நாயக்கர் ஆகிய இரு சகோதரர்களும் ஊருக்கு வெளியில் இரு மங்கிலும் சுங்க சாவடிகள் ஏற்படுத்தி வழிப்போக்கர்கள் ஒவ்வொருவரும் காலணா (மூன்று பைசா) வரி செலுத்தி இருக்கிறார்கள். இரு சகோதரர்களுக்கும் வழிபோக்கர்கள் அரை அணா வரி கொடுத்து வந்திருக்கிறார்கள்.
நான் சிறுவனாக இருந்த பொழுது நான் சேந்தமங்கலம் சென்றால் இந்த சுங்கச் சாவடி இரண்டையும் எனது தந்தையார் இடிந்த நிலையில் இருப்பதை காண்பித்திருக்கிறார்கள்.
எனது முப்பாட்டனார் அரசப்ப பிள்ளை சேலத்தில் குடியேறி இருக்கிறார்கள். காரை கிணற்று தெருவிற்கு “அகம்படியர் தெரு” என்று இருந்ததாம். பின்பு அது கவரைத் தெரு என்று நாளடைவில் ஏற்பட்டிருக்கிறது. எனது முப்பாட்டனார் அரசப்ப பிள்ளைக்கு இருகுமாரர்கள். மதுரை பிள்ளை, கஸ்தூரி பிள்ளை ஆகிய இருவரும் கொத்தனார் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் பேளுக்குறிச்சி மிட்டாதார் சு.பழனிவேல் கவுண்டர் தனக்கு ஒரு மெத்தை வீடு கட்டித் தரும்படி இந்த இரு சகோதரர்களும் நிரந்தரமாக பேளுக்குறிச்சியில் குடியேறி இருக்கிறார்கள். இரு சகோதரர்களும் நிலபுலன்கள் வாங்கி பெரிய வீடுகள் கட்டிக் கொண்டு பெரிய பணக்காரர்களாகி யிருக்கிறார்கள்.
சான்றாக நூல்,
என் வாழ்க்கைக் கதை,
சேலம் பெ.கஸ்தூரி,
சிந்தனையாளர் பதிப்பகம், சென்னை,
பதிப்பு : டிசம்பர் 1987,
பக்கம் : 1 – 2,
இந்த நூல் 263 பக்கங்களை உள்ளடக்கியது. இதில் அகமுடையார் வரலாற்றை பதியும்
1 – 2 பக்கங்களை மட்டுமே இதில் பதிவு செய்துள்ளேன். காரணம்,
முன்னாள் அமைச்சர்
கா.இராசாராம் Ex.MP., Ex. MLA., அவர்கள் “அகமுடையார் சாதி”யை சார்ந்தவர் என்ற செய்தி இந்த நூலின் பக்கத்தில் அவரின் தந்தை கஸ்தூரி பிள்ளை அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் பூர்வீகம் ‘மதுரை’ என்பதும் விரிவாக கூறப்பட்டுள்ளது. எனவே ‘பிள்ளை’ பட்டத்தை வைத்து அவரை பிள்ளைமார் என தவறாக கருதும் சிலரின் அறியாமையை இந்நூல் தெளிய வைக்கும் மருந்தாகும். படித்து தெளிவடையவும்.
வரலாறு விரியும்….
————————————-
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்…
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச: 94429 38890.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்