First
தென் மாவட்டம் ,வடமாவட்ட அகமுடையார் இருவரும் ஒருவரே மற்றொருமொரு கல்வெட்டு சான்று திருநாகீஸ்வரமுடையார் கோவில் கல்வெட்டு
——————————————————-
இன்றைய விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் வட்டத்தை சேர்ந்த தேவனூர் திருநாகீஸ்வரமுடையார் கோவிலில் கிடைத்த
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கி.பி 1290ம் ஆண்டு காலத்திய கல்வெட்டு செய்தி பற்றி இன்று காணப்போகிறோம்.
குறிப்பிட்ட 1290ம் ஆண்டின் போது சோழமண்டலத்து பல்குன்ற கோட்டத்து அண்ணமங்கல பற்று ( தற்போதைய செஞ்சி அடுத்துள்ள அண்ணமங்கலம் ) நாடவரும்(நாட்டவர் எனும் ஊர் தலைவர்களும் ) அகம்படியாரும், அகம்படி முதலிகளும், கைகோள முதலிகளும் ,பள் நாட்டவர்(பள்ளி நாட்டவரும்) , பள் முதலிகளும்(பள்ளி முதலிகளும்) சித்திர மேழி தேசி நாயகன் புளி அடியில் நிறைவாக கூடி திருநாகீஸ்வரமுடையார் கோவில் திருப்பணி நிமந்தத்திற்கு நிலதானம் வழங்கி அதன் நில எல்லைகளை குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தறி இறை(தறி நெய்வோரிடமிருந்து அதாவது கைகோள முதலியார் மூலம் ) பெறப்படும் வரி மூலமாகவும், வாணியரிடமிருந்து வசூலிக்கப்படும் செக்கு கடமை தறி இறை( செக்கு வரி),தட்டார் பாட்டம் ( தட்டார் எனும் ஆசாரிகளிடமிருந்து பெறப்படும் வரி) இனவரி (குறிப்பிட்ட சாதியினர் மூலம் பெறப்படும் வரி) , ஏரி மீன் பாட்டம்(ஏரி குத்தகைக்கு விடுவதால் கிடைக்கும் வரி) போன்ற பல்வேறு வரிவாய்களை மேலே குறிப்பிட்ட கோவில் திருப்பணிக்கும் ,பூசை நடைபெறுவதற்கும் வழங்கி இது சந்திர சூரியர் உள்ளவரை நடக்க வேண்டுமென கல்வெட்டி கொடுத்துள்ளனர்.
மேலதிக செய்தி
————-
கல்வெட்டில் நமக்கு தேவையான செய்தி பற்றி இனிமேல் தான் பேசப்போகிறோம் .
தென் மாவட்டத்தில் இருப்பவர்கள் அகம்படியர் என்றும் வடமாவட்டத்தில் இருப்பவர்கள் அகமுடையார் என்றும் இருவருக்கும் தொடர்பு இல்லை என்று அகமுடையார் சாதிக்கு சம்பந்தமில்லாத விசமிகள் சிலர் பொய்யுரை பரப்புரை செய்கிறார்களே அவர்களுக்கு பதிலிளிக்கும் விதமாக 20க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் பல கிடைத்துள்ளன . அதில் சிலவற்றை நாம் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.
இதே செய்தியை விசமிகளின் காதில் அறையும் படியாக அறிவிக்கும் மற்றொருமொரு கல்வெட்டு இதுவாகும்.
ஆம் இந்த கல்வெட்டில் 3 விதமான சாதிகள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன.
முதலில் அகம்படியாரும்,அகம்படி முதலிகள் என்பவர்களும் கைகோள முதலிகள் என்பவரும் பள் நாட்டவர் ,பள்ளி முதலிகள் என்பனவான மூன்று சாதியினர் குறிப்பிடப்படுகின்றன..
இதில் பள் நாட்டவர்(பள்ளி நாட்டவர் ) என்பதில் பள்ளி என்பதான இன்றைய வன்னியர் சாதியை சேர்ந்த தலைவர்கள் என்பதும் அதற்கு அடுத்து வரும் பள்ளி முதலி என்பவர்கள் பள்ளி எனும் வன்னியர் சாதியை சேர்ந்த வன்னியர் சாதியில் முதலியார் அல்லது தலைவர்கள் ஆவர் .
இதைப்போலவே அகம்படியர் என்பவர்களும் இவர்களில் அகம்படி முதலி எனும் தலைவர்களாக விளங்கியவர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
சில விசமிகள் வட தமிழகத்தில் வந்து தென் மாவட்டத்தில் இருப்பவர்கள் அகம்படியர் ,, வடதமிழகத்தில் இருப்பவர்கள் அகம்படியர்கள் இல்லை என்ற விசமப்பிரச்சாரத்தை பொய்யாக்கும் வகையில்
வடதமிழக பகுதியான செஞ்சி பகுதியில் அகம்படியர் என்ற பெயரில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டும் இது போல் கிடைத்துள்ள 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் நிரூபிக்கின்றன.
இதே விசமிகள் தென் மாவட்டத்தில் வரும் போது தென் மாவட்டத்தில் இருப்பவர்கள் அகம்படியர்கள் , வடமாவட்டத்தில் இருப்பவர்கள் அகமுடைய முதலியார்கள் இவர்கள் இருவருக்கும் சம்பந்தமில்லை என்றும் விசமம் செய்வார்கள்.
இதையும் முறியடிக்கும் வகையில் அகம்படி ,அகம்படிய முதலி என்ற பெயரில் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இதே கருத்தை இக்கல்வெட்டும் நிரூப்பிக்கின்றது.
இக்கல்வெட்டு செய்தியிலும் அகம்படி முதலிகளும் என்ற வரிகள் அகம்படியருக்கு முதலி பட்டம் இருந்ததை உறுதி செய்வதோடு, ஓரே கல்வெட்டில் அகம்படியாரும் ,அகம்படி முதலிகளும் என்ற வரிகள் அடுத்தடுத்து வந்து தென் மாவட்டம்,வட மாவட்டம் என எல்லா பகுதிகளிலும் அகம்படியர் என்ற ஒரே சாதி இருந்ததை உறுதி செய்கின்றது..
மேலும் அதிக செய்திகள்
————————
கல்வெட்டில் சாதிகளை கவனித்தால்(பார்க்க கல்வெட்டு வரி 4,5) அதில் முதலில் அகம்படியர் சாதி முதலாவதாகவும் அடுத்து கைகோளர் எனும் செங்குந்தர் சாதி அதற்கு அடுத்ததாகவும் , வன்னியர் சாதியினர் பின்னரும் குறிப்பிடப்படுகின்றனர் . இது அந்நாளில் நிலவிய சாதி படிநிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
கல்வெட்டு வரிகள் 16லும் இந்த படிநிலை மீண்டும் ஒரு முறை தெளிவாக கூறப்படுகின்றது. இதே படிநிலை தொடர்ந்துள்ளது இது போல மற்றுமுள்ள பல்வேறு கல்வெட்டு செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இதை அகம்படியர் என்பதோடு பள்ளி வேளான் என்று வரும் கல்வெட்டுக்கள் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள கல்வெட்டு செய்திகளை பார்த்தால் அறிந்து கொள்ளமுடியும்.
வேளாளர் மற்றும் வணிக தலைவர்களின் அமைப்பாகிய சித்திரமேழி எனும் அமைப்பில் அகம்படியர், கைகோளர் மற்றும் வன்னியர்கள் இருந்ததை கல்வெட்டின் 5ம் வரிகள் (சித்திரமேழி தேசி நாயகன் பறியன் புளி அடியில் கூடி) எனும் வரிகளும் நாட்டவர் என்ற வரிகளும் நிரூபிக்கின்றன.
நிறைவாக ஒன்று
—————–
தென் மாவட்டம் வேறு ,,வட மாவட்டம் வேறு என்று பேசும் இந்த விசமிகள் பற்றி நம் முன்னோர்களுக்கு தெரிந்திருக்குமோ என்னவோ ,அதனால் தான் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பே அகம்படியர் என்றும் அகம்படி முதலிகள் என்றும் தெளிவாக ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத கல்வெட்டில் பதிவு செய்து நம் தலைமுறையினருக்கு பொக்கிசமாக கொடுத்து சென்றுள்ளனர்.
புரிந்து கொண்டு அகமுடையார்கள் ஒற்றுமையாக செயல்படுவதே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.
குறிப்பிட்ட இந்த கல்வெட்டு குறிப்பு மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் உள்ள தகவலை அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார் அவர்கள் நமக்கு தெரிவித்தார்கள் ஆனால் கல்வெட்டின் முழுவரிகள் கிடைக்காமல் இருந்தது.
பின்னர் தமிழக தொல்லியல் அலுவலர்களின் இதழான ஆவணம் இதழ் 28ல் இக்கல்வெட்டின் முழுவரிகள் கிடைத்ததன் மூலம் இக்கல்வெட்டில் உள்ள செய்தி நமக்கு முழுமையாக வெளிப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பற்றி நமக்கு தகவல் தெரிவித்த பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு மிக்க நன்றி.
அதாவது இங்கே இனக்குழுவாக அகம்படியர்,கைகோளர் ,பள்ளி இனத்தவர் குறிப்பிடப்பட்டுள்ளதால்
கல்வெட்டு செய்தியின் மூலவரிகளை இப்ப்பதிவின் இணைப்பு 1,2,3,4 காணலாம்.
ஆதாரம்: ஆவணம் இதழ் 28,வருடம் 2017, பக்கங்கள் 65,66
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்