First
1939 ஆம் ஆண்டு, கோவை,
“சூலூர் அகம்படியர் வாலிபர் சங்கத்தாரால்” வெளியிடப்பட்ட,
சூலூர் சேர்மென்
“ஸ்ரீமான் S.K.கருப்பணணத் தேவர்
ஜீவிய சரித்திரம்” நூல் கூறும்….
அகமுடையார் வரலாறு
——————————————–
இரண்டாவது அத்தியாயம்.
பூர்வோத்தரம்.
சுமார் 50 வருஷங்களுக்கு முன்னே சூலூர் சிறு கிராமமாயிருந்த தென்றும், அயல் கிராமத்தாரும் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் அங்குத் தோன்றிய சில பரோபகார சீலர்களின் அரிய முயற்சியினால் இப்பொழுது ஒரு நகரத்துக்குரிய சிறப்புகள் அனைத்தும் பெற்று சிறப்புடன் செழிப்புற்று விளங்குவதாய் முதல் அத்தியாயத்தில் கூறினோம்.
அந்தப் பரோபகார சீலர்களில் நமது சரித்திர பெரியாரின் பாட்டனார்
ஸ்ரீ கருப்புத் தேவர் முக்கியமானவர். ஸ்ரீமான் கருப்பத்தேவர் “அகம்படியர்” மறபில் உதித்தவர். அகம்படியர் திராவிட மக்களில் ஒரு பிரிவார். திராவிட மண்டலத்திலே அகம்படிய மறபாரே இன்று பெருநில மன்னராயும், குறு நில மன்னராயும் நாடாண்டு வருவது வெளிப்படை, அகம்படியர் இயல்பாகவே போர் வீரர்கள் எதிரியை முறியடிப்பதும், தஞ்சமடைந் தோரைக் காப்பாற்றுவதும் அவர்களது பிறவிக்குணம். சென்னை மாகாணத்தில் இருக்கும் அகம்படியர்களை சில பிரிவாகப் பிரிக்கலாம்.
அதில் முக்கியமாக வழங்கிவரும் இராஜகுல அகம்படியர், இராசவாசல் அகம்படியர், இராஜபோஜா அகம்படியர், கோட்டைப்பற்று அகம்படியர், இரும்புத்தலை அகம்படியர், ஐவேலி நாட்டு அகம்படியர், மலைநாட்டு அகம்படியர், நாட்டுமங்கலம் அகம்படியர், துளுவன் என்பனவாகும். அதில் நாம் இங்கு குறிப்பிடுபவர்கள் இராஜகுல அகம்படியரேயாகும்.
சென்னை மாநகரில் உள்ள எல்லாக் கல்லூரியிலும் மிக்க சிறப்பு வாய்ந்து விளங்குகின்ற பச்சையப்பா கல்லூரியை அறியாதார் யாரும் இலர் எனச் சொல்லலாம். அக்கல்லூரியின் சொந்த அதிபரான “பச்சையப்பா முதலியார்” அவர்களும், இம்மறபில் தோன்றியவரே யாகும். சென்னை மாகாண அகம்படியர் சங்கத் தலைவரும், சென்னை சட்டசபை உறுப்பினரும், இம்மாகாணத்தில் பெரு நிலச்சுவான்தாரரும், சொல் வன்னமையுடன் மிகுந்த செல்வாக்குள்ள வருமான ஸ்ரீ V. நாடிமுத்து பிள்ளை M.L.A அவர்களும் இம்மறபினில் உதித்த திலகமாகும்.
அத்தகைய மாட்சிமை பொருந்திய அகம்படியர் குலத்தில் தோன்றிய நமது
ஸ்ரீ கருப்பத் தேவரும் நம் குலப் பெயருக் கேற்ப பேரும், பெருமையும் பெற்று விளங்கினார்.
கட்டாரிக் கருப்புத் தேவர் என்ற பட்டமும் அவரது குடும்பத்தாருக்கு உண்டு.
ஸ்ரீ கட்டாரிக் கருப்புத் தேவர் அவர்களுக்கு ஏக புத்திரர் ஒருவர் தான். அவர் திரு நாமம் பெரிய கருப்பத் தேவராகும். ஸ்ரீ பெரிய கருப்புத் தேவர் தான் நமது சரித்திரப் பெரியாரின் தந்தை. அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. இளையாளான பார்வதியம்மாள் ஒரே ஒரு புத்திரனை ஈன்ரெடுத்தார்கள்.
வீர நெப்போலியன் “நல்ல தாய்மார்களைப் பெறுதலை விட பிரான்ஸ் தேசத்திற்குப் பெருந்தனம் வேரொன்றும் இல்லை” என்று கூறினார். இத்தகைய தாய்மார்களைப் பற்றியே அவர் அவ்வாறு கூறியிருக்க வேண்டும். தாயின் அன்பு அற்புத ஆற்றல் வாய்ந்ததன்றே. சிறத்தை மிக்க வளர்ப்பினாலன்றோ தமிழ் நாட்டுத் தனிப் பெரும் தலைவராய் விளங்கினார் நமது சரித்திரப் பெரியார்.
ஸ்ரீ கட்டாரி பெரிய கருப்பத் தேவர்
புத்திக் கூர்மையும், திடசித்தமும், நல்லொழுக்கமும், பெருந் தன்மையும், குலத்திற்கேற்ற வீரமும் பொருந்தி இருந்தார். கிராமவாசிகளின் செல்வ வளர்ச்சிக்குக் கூட்டுறவு இயக்கத்தின் முறையே ஏற்றதெனக் கண்ட பெரிய பெரிய கருப்புத் தேவர் இளமை முதற்கொண்டே அதிக கவனம் செலுத்தினார். கூட்டுறவு முறையில் அவருக்கு அபார ஞானமும் அநுபவமும் இருப்பதை யுணர்ந்த சூலூர் கோவாப்பரேட்டிவ் சொசைட்டியார்கள் ஸ்ரீமான் தேவரை தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
அச்சொசைட்டியின் பொறுப்பை அவர் மிகவும் திறமையாக ஏற்று நடத்தி அப்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு அரிய ஊழியம் செய்து வந்தார். “மேழிச் செல்வம் கோழைப் படாது” என்ற முதுமொழிக் கிணங்க விவசாயத் தொழிலில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அத்துடன் ஜவுளி வர்த்தகமும் செய்து பொருளீட்டினார். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற முது மொழிப்படி பொது ஜன சேவையில் ஈடுபட்டு மக்களின் நன்மைக்குத்தன் இறுதி காலம்வரை உழைத்தார் அந்த உத்தமர்.
இரண்டாவது அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது.
நன்றி:
சூலூர் சேர்மென்
ஸ்ரீ மான் S.K.கருப்பண்ணத் தேவர்
ஜீவிய சரித்திரம்,
ஆசிரியர் : ஸ்ரீ S.A.மாணிக்கம்,
வெளியீடு : சூலூர் அகம்படியர் வாலிபர் சங்கம், முதற்பதிப்பு :1939.
பக்கங்கள் : 5,6,7
இந்நூல் 61 பக்கங்களை உள்ளடக்கியது.
இதிலிருந்து முதன்மையான மூன்று பக்கங்களை மட்டுமே இங்கு பதிவு செய்துள்ளேன்.
விரைவில் இந்நூல் “அகமுடையார் அரண்” சார்பாக மறுபதிப்பாக வெளிவர உள்ளது.
———————————————————-
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்…
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச: 94429 38890.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்