பாம்பன் சுவாமிகள் எனும் குமரகுருதாச சுவாமிகள் அகம்படியரே ———————–…

Spread the love

First
பாம்பன் சுவாமிகள் எனும் குமரகுருதாச சுவாமிகள் அகம்படியரே
—————————————————-
குமரகுருதாச சுவாமிகள் எனும் பாம்பன் சுவாமிகள் இராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் எனும் ஊரில் அகம்படியராகிய சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்.

பிறந்த போது பாம்பன் சுவாமிகளுக்கு இவர்கள் தாய் தந்தை வைத்த பெயர் அப்பாவு என்பதாகும் பின்னாளில் இவர் குமரகுருதாச சுவாமிகள் என்றும் இவர் பிறந்த ஊரான பாம்பன் என்பதை வைத்து பாம்பன் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.

அகம்படியர் குடியில் பிறந்த இவரை இவருடைய தந்தையின் பெயருக்கு பின்னால் உள்ள பிள்ளை பட்டத்தை காட்டி வெள்ளாளர் சிலர் பாம்பன் சுவாமிகளை வெள்ளாளர் அல்லது பிள்ளைமார் என்று இணையத்தில் சிலர் தவறாக பொய் பிரச்சாரம் செய்தி வருவதாக அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் நமக்கு தெரிவித்தார்கள்.

பாம்பன் சுவாமிகளின் வழியினர் தற்போதும் மதுரை,இராமநாதபுரம் பகுதிகளில் அகம்படியர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையிலும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பாம்பன் சுவாமிகளை வெள்ளாளர் என சிலர் பொய்யாக பேசி வெற்று பெருமைகளை கைகொள்ள நினைக்கின்றனர்.

பாம்பன் சுவாமிகள் வாரிசுகளே பாம்பன் சுவாமிகள் அகம்படியர் என்பதற்கு நிகழ்கால சாட்சியாக இருக்கிறார்கள் என்றாலும் . பாம்பன் சுவாமிகள் தானே எழுதி 1894ம் வருடம் வெளியிட்ட சிவஞான தீபம் எனும் நூலில் முன்னுரையில் பாம்பன் சுவாமிகள் பற்ற்றி சாத்து கவிககளை பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

இதில் அப்பாவு எனும் இயர்பெயர் கொண்ட குமரகுருதாச சுவாமிகள் எனும் பாம்பன் சுவாமிகளை அகம்படியர் ,அகம்படிய குல திலகன் என்றும் அகம்படியரான சாத்தப்ப என்பவருக்கு பிறந்தவர் என்பதையும் தெளிவாக சொல்லியுள்ள சான்றுகளையும் இப்பதிவில் இணைத்துள்ளோம்.

இனியாவது பாம்பன் சுவாமிகளை வெள்ளாளர் என்று தெரியாமல் தவறாக பதிவிடுவதையோ அல்லது தெரிந்தே போலி பெருமைக்காக பொய் பிரச்சாரம் செய்வதையோ சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த நூலில் உள்ள குறிப்பிட்ட பக்கங்களை இப்பதிவில் இணைத்துள்ளோம்.

குறிப்பிட்ட இந்த நூல் தமிழக அரசின் இணைய பல்கலைகழக வெப்சைட்டில் பார்வைக்கு உள்ளது.
இந்த நூலை முழுவதுமாக படிக்க விரும்புவர்கள் அல்லது இந்த நூலில் இப்பக்கங்கள் உண்மையிலேயே உள்ளதா என அறிய விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்

www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/history/chivanyaanatiipam.pdf

குறிப்பு:
இறைச்சித்தரான பாம்பன் சுவாமிகளை
நாம் சாதி அடையாளத்திற்குள் அடைக்க விரும்பவில்லை.ஆனால் அவர் பிறந்த சாதியை தவறாக கூறி பாம்பன் சுவாமிகள் வரலாற்றை தவறாக சித்தரிக்க முற்படும் போது அதை விளக்கி எல்லோருக்கும் உண்மையை அறிவிக்க வேண்டிய கட்டாயமும் ,கடமையும் நமக்குள்ளது என்பதால் இதைப்பதிவிடுகின்றோம்.

இனி எவரேனும் பாம்பன் சுவாமிகளை வெள்ளாளர் என்றோ ,பிள்ளைமார் என்றோ எழுதினால் இந்த ஆதாரங்களை அவர்களுக்கு அனுப்புங்கள்! மிக்க நன்றி!

குறிப்பு:
இது போல் அகம்படிய குல தலைவர்களை பலர் போலி பெருமைக்காக தங்கள் சாதி என பல்வேறு சமூகத்தவர்கள் எழுதி வருகிறார்கள். இந்த அகமுடையார் தலைவர்களை தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டி அகம்படியர் சமுதாயம் என்று பொதுவெளியில் நிறுவுவோம்.







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo