வார்த்தை விளையாட்டும்,வரலாற்று திருட்டும் -அகம்படியரான பச்சையப்ப முதலியார் —-…

Spread the love

First
வார்த்தை விளையாட்டும்,வரலாற்று திருட்டும் -அகம்படியரான பச்சையப்ப முதலியார்
—————————————–
புகழ்பெற்ற வள்ளலான பச்சையப்ப முதலியார் அவர்கள் அகமுடையார் சாதியை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அடுத்தவர் புகழை களவாடி அதில் பெருமிதம் கொள்ள நினைக்கும் சில வெள்ளாளர்கள் முகநூல் மற்றும் யூட்டிப்பில் பச்சையப்ப முதலியார் ,வெள்ளாளர் என்று கூசாமல் புளுகி வந்தனர்.

இது குறித்து அறிந்த நாம் காலங்களில் பச்சயப்ப முதலியார் அகமுடையார் என்பதற்கு ஏற்கனவே பல்வேறு ஆதாரங்களை வழங்கியிருந்தோம்.

ஆனால் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லை என்பதைப்போல அவமானப்பட்டாலும் சில வெட்கங்கெட்ட சில வெள்ளாளர்கள் புதிதாக ஓர் தந்திர வேலையை ஆரம்பித்தனர்.

அதாவது தென் மாவட்டத்தில் இருப்பது அகம்படியராம், வடமாவட்டத்தில் இருப்பவர்கள் அகமுடையாராம். பச்சையப்ப முதலியார் வடமாவட்டம் என்பதால் பச்சயப்ப முதலியார் அகமுடையாராம், அவர்களுக்கும் தென் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கும் சம்பந்தம் இல்லையாம்?

குள்ளநரிகளின் கோல்மூட்டி தந்திரத்தை பார்த்தீர்களா? சரி நாம் (அகமுடையார்) ஒற்றுமையாக இருந்தால் குள்ளநரிகள் சிங்கங்களை எதிர்க்க துணியுமா?

சரி விசயத்திற்கு வருவோம்.
பச்சையப்ப முதலியார் அகமுடையார் என்று சொல்லி வெள்ளாளருடன் இழுக்க நினைக்கும் கோமாளிகளுக்கு பச்சயப்ப முதலியார் அகம்படியர் சாதியை சேர்ந்தவர் என்பதை குறிக்கும் ஆவணத்தையும் இப்பதிவில் இணைக்கிறோம்.

பார்க்க : இணைப்பு 1 தமிழ் பொழில் இதழ் ,வருடம் 1928-1929 ,பக்கம் 57

இதில் பச்சையப்ப முதலியார் “காஞ்சிபுரத்திலிருந்த அகம்படியர் வகுப்பினராகிய விசுவநாத முதலியார் -பூச்சியம்மாள் ” தம்பதியினருக்கு பிறந்தவர் என்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

ஆகவே இனிமேலேனும் வார்த்தை விளையாட்டையோ,வரலாற்று திருட்டையோ செய்யாமல் திருந்தி வாழப்பாருங்கள்!

ஏனென்றால் இது போன்று மாற்று சாதியை சேர்ந்தவரை தன் சாதி என சொல்லி வெற்று விளம்பரம் தேடுவது, தகப்பன் பெயரையே மாற்றுவது போன்று ஈனத்தனமானது.

இது போன்ற ஈனர்களை கண்ணுறும்போது வார்த்தைகள் எல்லை மீற துடிக்கின்றது.ஆனால்
பொதுவெளியில் இந்த ஈனர்களை திட்டி நாம் தரம் தாழ்ந்துவிடக்கூடாது என்பதால் விடுகிறோம்.

இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் திருத்திக்கொள்ளவேண்டும்.

நன்றி:
அகமுடையார் அரண் நிறுவனர்
திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் , தமிழ் பொழில் இதழில் செய்தி பற்றி நமக்கு தெரிவித்தமைக்காக

மேலும் சில விளக்கம்
————————
200-300 வருடங்களுக்கு முன்பு அகமுடையான் என்றால் கணவன் என்றும் அகமுடையாள் என்றால் மனைவி என்றும் தான் கல்வெட்டு, செப்பேடு போன்ற ஆவணங்களில் பதியப்பட்டுள்ளதே தவிர 200-300 வருடங்களுக்கு முன்பான எந்த ஆவணங்களிலும் அகமுடையார் என்பது சாதியாக பதிவு செய்யப்படவில்லை.

5000 வருடங்கள் முன்பிருந்து ,கி.பி 10ம் நூற்றாண்டு வரை ஒரே பொருள் தரும் ஆனால் பல்வேறு பெயர்களான உள்மனையார்,மனைப்பெருஞ்சனம்,கோயிற்றமர்,மனைமகன், அகத்தார்,அகம்படியர் என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இந்த இனம்.

கி.பி 10ம் நூற்றாண்டு தொடங்கி ,300 வருடங்களுக்கு முன்பு வரை தென் தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் அகம்படியர் என்ற ஒற்றை பெயரில் அடையாளப்படுத்த துவங்கியது.

பின் வந்த ஆவணங்களில் அகம்படியர் என்பது அகமுடியர் ,அகம் முடியர் என்று திரிவடைந்தது.

இன்றிலிருந்து சுமார் 300 வருடங்கள் முன்பு தான் “அகமுடியர்” என்ற பெயர் ” அகமுடையர்” என்றும் பின்னாளில் இது அகமுடையார் என்றும் மாற்றம் அடைந்தது.

ஆகவே உலகம் முழுதும் அகம்படியர் என்று அழைக்கப்பட்ட இனம் தான் இன்று “அகமுடையார்” என்று உலகம் முழுதும் ஒரே பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒர் செய்தி
————-
மேலும் அகம்படியருக்கு உடையார் பட்டமானது கி.பி 8ம் நூற்றாண்டு பல்லவ மன்னன் தண்டிவர்மன் கல்வெட்டில் காணப்படுவதால் கி.பி 8ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னரே உடையார் பட்டம் அகம்படியர்களால் பயன்படுத்தப்பட்டது தெரிகின்றது.

ஆகவே அகம்படியருக்கு ,அகமுடையார் என்ற பெயர் வெறும் பெயர் திரிவாக வந்தாலும் உடையார் என்ற பட்டம் சில சாதிகளுக்கு புதிதாக வழங்கும் பெயர் போல் சம்பந்தமில்லாமல் இணைக்கப்படவில்லை. வரலாற்று அடையாளத்தோடு தான் இப்பெயர் இன்றும் வழங்கி வருகின்றது.

இப்பெயர் குறித்த விரிவான கட்டுரை பின்னாளில் வெளியாகும்

பச்சயப்ப முதலியார் அகமுடையார் என்பதற்கு ஏற்கனவே அளித்த ஆதாரங்கள் பல
————————
ஆதாரம் 1 (இணைப்பு 3) பச்சையப்ப முதலியார் சரித்திரம் , ஆசிரியர்: சீனிவாசபிள்ளை , தமிழாக்கத்துடன் வெளியான வருடம்: 1911
ஆதாரம் 2 இணைப்பு 4) : திராவிடன் இதழ்
ஆதாரம் 3 இணைப்பு 5) : அபிதான சிந்தாமணி பக்கம் 1005 ,ஆசிரியர் : சிங்காரவேலு முதலியார் ,வெளியான வருடம்: 1934
ஆதாரம் 4 இணைப்பு 6) : ஆங்கிலேயர் வெளியிட்ட உத்தமர்கள் சரித்திரம் நூல் பக்கம் எண் 22 , வெளியான வருடம்: 1926
ஆதாரம் 5 இணைப்பு 7) : நூல் : வள்ளல் பச்சையப்பர் , ஆசிரியர் : பக்தவச்சலம்







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo