First
நாச்சியார் பட்டம் பெற்ற அகம்படி பெண்கள்
———————————–
கல்வெட்டில் அகம்படி இனத்தை சேர்ந்த ஆண்கள் எவ்வளவு முக்கியத்துவமாக குறிக்கப்படுகின்றனவோ அதைப்போலவே அகம்படி இன பெண்களும் முக்கியத்துவத்துடன் குறிக்கப்படுகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் மற்ற எந்த சாதி பெண்களை விட அகம்படி இன பெண்கள் கல்வெட்டுக்களில் தனிமனிதர்களாக நிரம்ப தானங்களை வழங்கியுள்ளதை கல்வெட்டு செய்திகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றனர்.
இதற்கு நிரம்ப உதாரணங்களை சொல்லலாம். ஆனால் இக்கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட கல்வெட்டு செய்தியை விரிவாக காண்போம்.
பெருமாள் நாச்சியார்
——————
13ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இன்றைய காஞ்சிபுரம் பகுதியில் தெலுங்கு சோழ மன்னரான கண்ட கோபாலர் என்பவரிடம் பணிபுரிந்த வங்கம்மை என்பவரின் மகளான அகம்படி பெண்டு( பெண்ணான ) பெருமா (பெருமாள்) நாச்சி என்பவர் பெருமாள் கோவிலில் திரு நந்தா (நுந்தா ) விளக்கு எரிப்பதற்காக 33 பசுக்களை தானமாக வழங்கியுள்ளார்.
ஆதாரம்: காஞ்சிபுரம் கல்வெட்டு தொகுதி ,கல்வெட்டு எண் 171,தமிழக அரசு வெளியிடு
இப்பசுக்களை பெற்றுக்கொண்ட தானத்தார்கள் இப்பசுக்களில் இருந்து கிடைக்கும் நெய் மூலம் அந்த விளக்கு கோவிலில் நிரந்தரமாக விளக்கு எரிக்க ஒப்புக்கொண்டு கல்வெட்டிக்கொடுத்துள்ளனர்.
நாச்சியார் பெயர்
வரலாற்றின் சிறுது காலம் முன்னே நாச்ச்சியார் பட்டம் கொண்ட சிலர் இன்று நாச்சியார் தங்களுக்கு மட்டும் உரியது போல் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
ஆனால் நாச்சியார்,நாச்சி போன்ற பட்டங்களை ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே அகம்படி(அகமுடையார்) இன பெண்கள் கொண்டிருந்ததை இக்கல்வெட்டு செய்தி உறுதி செய்கின்றது.
இக்கல்வெட்டு மட்டுமல்ல
மேலும் பல அகம்படி இனப்பெண்கள் நாச்சி அல்லது நாச்சியார் பட்டம் கொண்டிருந்ததை வேறு பல கல்வெட்டு செய்திகளும் உறுதி செய்கின்றனர்.
உதாரணத்திற்கு
அனுபத்தூர் அகம்படி பெண்டுகளில் களப்பாள நாச்சி மற்றும் இவரது மகள் வீரப்பெருமாள் நாச்சி
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டு தொகுதி 7,கல்வெட்டு எண் 104, மத்திய அரசு வெளியிடு
மற்றும்
அகம்படி பெண்டு- நம்பாண்டாள் (நம் ஆண்டாள்) மகள் பெரிய நாச்சி
ஆதாரம்: கல்வெட்டு ஆண்டறிக்கை , மத்திய அரசு வெளியிடு
போன்ற கல்வெட்டு செய்திகளை உதாரணமாக சொல்லலாம். இக்கல்வெட்ட்டு செய்திகள் குறித்து வரும் நாட்களில் தனிக்கட்டுரைகளில் விரிவாக காண்போம்.
சோழ அரச மகளிர் நாச்சியார் என்ற பெயரை சூடியிருந்ததை கல்வெட்டு செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன. உதாரணத்திற்கு இராஜ இராஜ சோழனின் மகளான குந்தவை நாச்சியாரை உதாரணமாக காட்டி உங்களுக்கு நினைவூட்டலாம்.
சோழர்கள் அகம்படி இனத்தவர்கள் என்பதை ஏற்கனவே ஓர் காணொளியில் விரிவாக விளக்கியிருக்கின்றோம்.பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கலாம்.
இவ்வகையிலேயே சோழர் குலத்தவரான அகம்படிய பெண்கள் வரலாற்றின் நிறைய இடங்களில் நாச்சியார் என்ற பட்டத்தை பயன்படுத்தியுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த கல்வெட்டும் கண்ட கோபாலர் என்கிற தெலுங்கு சோழரிடம் பணிபுரிந்த பெரிய நாச்சி என்பவர் குறித்த கல்வெட்டாகும்.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பெரிய நாச்சி என்பவர்
வங்கம்மை மகள் என்பதாக குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக கல்வெட்டில் ஆண் மகனை குறிப்பிடும் போது அவனுடைய பட்டத்தை
மட்டும் குறிப்பிடுவர் அதே நேரம் இன்னாருடைய மகன் இவன் என்று குறிப்பிட்டால் அவனுடைய தந்தையும் குறிப்பிட்ட பதவிக்கு ஓர் வகையில் சம்பந்தப்பட்டவர் என்பதை உணர முடியும்.
சோழர்கள் பேரரசாக உருவான காலத்தில் பல்வேறு சாதியினரும் சோழ பேரரசின் கீழ் பணிபுரிய தலைப்பட்டனர் என்றாலும் சோழ மன்னர்களின் அரச பிரநிதிகளாக இருந்தது அகம்படி இனத்தவர் மட்டும் அதன் பின் மகா சாமந்தர்களாக, தளபதிகளாக , அகம்படி நியாயம் மற்றும் அகம்படி பற்று எனும் தனி படைபற்றாக பெரும் படையாக நிரப்பியதும் , அரசரை சூழ்ந்து அவர்களது அன்றாட பணிகளை நிறைவேற்றியதும் அகம்படி இனத்தவர் என்பதை கல்வெட்டு செய்திகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
அந்த வகையில் இக்கல்வெட்டில் வங்கம்மை என்று குறிப்பிடப்படுவது இத்தெலுங்கு சோழ மன்னர்களிடம் பெருமா நாச்சியின் முன்னோர்களும் பணிபுரிந்து வந்ததை எடுத்துக்காட்டுகின்றது.
பாதுகாப்பு செய்வது முதல் அகம்படியர் கையால் சமைக்கப்பட்ட உணவருந்துவது என்பது வரை என சோழர்கள் முழுக்க நம்பியது அகம்படியர்களைத்தான்.
அக்காலத்திய வழக்கப்படி அரசர்களை பொறுத்தவரை ஒருவர் கையால் உணவருந்த வேண்டுமென்றால் அவர்கள் அரசனின் சொந்த இனத்தவராக இருக்க வேண்டும் அல்லது அந்த அரசனை விட உயர்ந்த இனத்தவராக இருக்க வேண்டும்.
எந்த அரசனும் தங்களுக்கு கீழானவர்களை அருகில் வைத்துக்கொள்வதில்லை,அவர்கள் கையால் உண்பதுமில்லை.
இதை சிறிது யோசித்துப்பார்த்தாலே நாம் புரிந்து கொள்ள முடியும்.
சோழர்களை பொறுத்தவரை அகம்படியர்கள் தன் சொந்த இனத்தவர் என்பதாலேயே அகம்படியர்களுக்கு சோழ பேரரசில் எல்லா மட்டங்களிலும் பதவி அளிக்கப்படிருந்தது என்பதோடு பெரும் எண்ணிக்கையிலும் அகம்படியர்கள் சோழ பேரரசை நிரப்பினர்.
பாண்டியர் மற்றும் அவருக்கு பின்னான குறுநில அரசர்கள் அகம்படியர்களை தங்களை விட உயர்ந்த இனம் என்று கருதியதாலேயே அகம்படியர்களை தங்களிடம் பணிக்கு அமர்த்திக்கொண்டனர்.
வடதமிழ்நாட்டிலும் அகம்படியர் என்ற பெயரே
————————————–
இன்று அகமுடையார் என்று அழைக்கப்படும் சாதியினர் வரலாற்றின் முன் சென்று பார்த்தோம் என்றால் தென் தமிழகமாக இருந்தாலும் சரி வட தமிழகமாக இருந்தாலும் சரி அகம்படியர் ,அகம்படி என்றே அழைக்கப்பட்டதை பார்க்க முடியும்.
இதற்கு 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் ஆதாரமாக விளங்குகின்றன. இந்த கல்வெட்டு செய்தியிலும் இவ்வுண்மை விளங்குகின்றது.
800 வருடங்களுக்கு முன்பு வட தமிழ்நாடான காஞ்சிபுரம் பகுதியில் கிடைத்த கல்வெட்டு செய்தியில் அகமுடையார் இன பெண்டிரை குறிக்க அகம்படி என்ற பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே வடதமிழ்நாடு, தென் தமிழ்நாடு, டெல்டா, கொங்கு என உலகின் அனைத்து பகுதியில் வாழும் அகமுடையார் அனைவரும் இனத்தால் ஒருவரே என்பதை அறியலாம்.
இன்னும் நிறைய விசயங்களை சொல்ல ஆசை தான். பேசுவதற்கு 100க்கும் மேற்பட்ட கல்வெட்டு செய்திகளும் 1000 மணி நேரத்திற்க்கும் மேலான வரலாறு இருந்தாலும் நேரத்தின் அருமை கருதி இக்கட்டுரையை இத்தோடு நிறைவு செய்கின்றோம். அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
அகமுடையார் ஒற்றுமைக்காக
மதுரையில் இருந்து மு. சக்தி கணேஷ்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்