First
“நடுகல் மரபும் –
அகமுடையார் பேரினமும்”
———————————————–
பழந்தமிழர்கள் தங்களின் முன்னோர்களின் நினைவை போற்றும் வகையில் நடுகல், பள்ளிப்படை அமைத்து வழிபட்ட வரலாற்று நிகழ்வுகள் ஏராளம்.
அந்த வழிமுறையில் பிற்காலத்தில் மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு ஜீவசமாதி, சமாதி அமைத்து வழிபடும் மரபு இன்றும் வழக்கில் உள்ளதை அறிவோம்.
அந்த வகையில் எனது தாயார் வழி முன்னோர் சமாதி பற்றியதே இந்த கட்டுரை.
எனது தாயார் (அம்மா) வழி முன்னோர்களின்
ஆதி பூர்வீக இடம்,
கரூர் மாவட்டம் (திருச்சி – கரூர் சாலையில் உள்ள) மதுக்கரை,
மேல மாயனூர் கிராமம் ஆகும்.
எனது தாயார் வழியினர் அகமுடையார் பேரினத்தில் “இராசகுல அகமுடையார்” உட்பிரிவில் “பிள்ளை” பட்டப்பெயர் சூடி வாழும் மரபினர் ஆவர்.
இவர்களின் குலதெய்வம், கரூர் மாவட்டம், மதுக்கரை (காவிரி ஆற்றுக்கரையில்) அமர்ந்துள்ள அருள்மிகு மதுக்கரை செல்லாண்டியம்மன் (பெண் தெய்வம்) ஆகும்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் செல்லாண்டியம்மனின் முன்னிலையில் தான் தங்கள் நாட்டின் எல்லையை பிரித்து கொண்டதாக இக்கோயில் தலவரலாறு கூறுகிறது. மூன்று நாடுகளின் எல்லை பிரிக்கும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
எங்கள் தாயாரின் முன்னோர்கள் கட்டிட கலையில் மிகச்சிறந்த வல்லுநர்களாக திகழ்ந்துள்ளனர். அரசு கட்டிட ஒப்பந்தகாரர்களாக பழனி நகரத்திற்கு குடிபெயர்கின்றனர். பழனியில் உள்ள பழைய வட்டாச்சியர் அலுவலகம், பழைய சார் நீதிமன்றம் உள்ளிட்ட பல அரசு கட்டிடங்கள், பாலம், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், பெரிய ஆவுடையார் கோவில் உள்ளிட்டவைகள் இவர்களின் கைவண்ணங்களால் எழுப்பப்பட்டது.
அப்படி வந்த போது இங்கேயே தங்களுடைய குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு பழனி நகரினிலே தங்கிவிட்டனர்.
மதுக்கரை, மேல மாயனூரில் இருந்து பழனி நகருக்கு வந்த முன்னோர்களில் சுப்பையா பிள்ளை என்ற சுப்பா கொத்தனார், நல்லையா பிள்ளை என்ற நல்லா கொத்தனார் என்ற இரு சகோதரர்கள் ஆவர்.
மூத்தவரான சுப்பையா பிள்ளை தற்போதைய பழனி நகரின் மையப்பகுதியான வட்டாட்சியர் அலுவலகம், காந்தி மார்க்கெட் பின்புறம் கச்சேரி புதுத்தெருவில் தங்களின் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார்.
இளையவரான நல்லையா பிள்ளை அவர்கள், பழனி மாரியம்மன் கோவில் பின்புறம் தங்களின் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்.
பழனி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள “ஐந்து ஊர் இராசகுல அகமுடையார்” சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட “அகமுடையார் மடம்”, எனது முப்பாட்டன் சுப்பையா பிள்ளை காலத்தில் வாங்கப்பட்டு, பழனி, கரிக்காரன்புதூர், மானூர், குப்பம்பாளையம், லெட்சுமாபுரம் ஐந்து ஊர் வாழ் அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட “இராசகுல அகமுடையார் மடம்” ஆகும்.
இந்த மடம், ஐந்து ஊர் அகமுடையார் சாதி பெரியதனக்காரர்களுக்கு கட்டுப்பட்டதாகும்.
பழனி நகர “அகமுடையார் சாதி” பெரியதனக்காராக எனது தாயாரின் முப்பாட்டனான சுப்பையா பிள்ளை அவர்கள் இருந்தார். இவர் காலத்திலேயே தான் அகமுடையார் மடம் உருவாக்கப்பட்டது.
சுப்பையா பிள்ளை அவர்களின்
கொடிவழியினர் பட்டியல்,
சுப்பையா பிள்ளை அவர்களின்
மனைவி பெயர் அறிய முடியவில்லை.
இவருக்கு 6 வாரீசுகள் பிறந்தனர், அவர்களில் இருவர் விவரங்கள் மட்டும் என்னால் அறிய முடிந்தது.
1) சு.பழனியப்ப பிள்ளை, (1)
(மனைவி – வெள்ளையம்மாள்)
2) சு.மாரிமுத்து பிள்ளை, (6)
(இவர் 23 வயதில் இறந்துவிட்டார்-
திருமணம் ஆகவில்லை). இவர் 1892 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவரின் சமாதி, பழனி சண்முகநதிக் கரையில் 118 ஆண்டுகள் கடந்து நிலைத்துள்ளது. (இச்சமாதியின் கல்வெட்டு புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
சு.பழனியப்ப பிள்ளை அவர்கள்,
திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி அருகில் உள்ள இடையகோட்டை, சாமியாடிபுதூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட தாந்தோணியா பிள்ளை அவர்களின் உடன்பிறந்த அக்காவான வெள்ளையம்மாள் அவர்களை கரம் பிடித்தார்.
சு.பழனியப்ப பிள்ளை – வெள்ளையம்மாள் இணையருக்கு 8 வாரீசுக்கள்.
(6 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள்).
1) பழ.அருணாச்சலம் பிள்ளை,
(மனைவி பெயர் -பொன்னுத்தாயம்மாள்,
த/பெ மு.கருப்பண்ணன் சேர்வை, வடக்காவணி மூல வீதி, மதுரை).
2) பழ.பொன்னுச்சாமி பிள்ளை,
(மனைவி பெயர் – குஞ்சரத்தம்மாள்,
த/பெ, நாகசுந்தரம் சேர்வை, இராமநாதபுரம்).
3) பழ.உண்ணாமலையம்மாள்,
(க/பெ அறிய முடியவில்லை).
4) பழ.சொக்கலிங்கம் பிள்ளை,
(மனைவி பெயர், இராஜம்மாள்,
த/பெ, நாகசுந்தரம் சேர்வை, இராமநாதபுரம்).
5) பழ.கந்தசாமி பிள்ளை,
(இளம் வயதில் மறைவு).
6) பழ.சுப்புக்குட்டியம்மாள்,
(க/பெ.மாரிமுத்து பிள்ளை).
7) பழ.மாரிமுத்து பிள்ளை,
(திருமணம் இல்லை).
8) பழ.கந்தப்பன் பிள்ளை,
(இளம் வயதில் மறைவு).
மேற்படி உள்ளவர்களில் மூத்தவரான பழ.அருணாச்சலம் பிள்ளை அவர்களே எனது தாயாரின் தாத்தா ஆவார்.
எனது அம்மாவின் முன்னோர்கள் பிள்ளை பட்டப்பெயரை சூட்டிய இருந்தாலும் தங்களின் சொத்துப் பத்திரங்களில் தங்களின் சாதியை “அகம்படியர்” என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
(இணைப்பு : எனது தாயாரின் முன்னோர் சொத்துப் பத்திரம் பற்றிய நான் முன்பே பதிவிட்ட கட்டுரையின் இணைப்பின் லிங்க் இத்துடன் இணைத்துள்ளேன்.
விரிவாக பார்க்க….
https://m.facebook.com/story.php?story_fbid=2764036747186764&id=100007413972239
இந்த விரிவான வரலாறு ஏனெனில்,
பழனி அருகில் உள்ள புண்ணிய நதியாகிய சண்முகநதிக் கரையில்,
பழனி வாழ் குடியான சாதி மக்களின் இடுகாடு அமைந்துள்ளது.
அந்த இடுகாட்டில் பழனி வாழ் அகமுடையார் சமூகத்தினர் தங்களின் இறந்த சொந்தங்களை காலம்காலமாக அடக்கம் செய்து வருகின்றனர்.
அங்கு எனது தாயாரின் முன்னோர் ஒருவரின் பழமையான சமாதி அங்கு உள்ளது. பலமுறை அந்த சமாதியை வணங்கி வழிபட்டு உள்ளேன். அந்த சமாதி மிகவும் பழுதுபட்டு சீர்கெட்டு உள்ளது. அதை மராமத்து செய்து எனது தாயாரின் முன்னோர்கள் வரலாற்றைப் பாதுகாக்க முடியும் என பலமுறை நினைத்ததுண்டு.
அந்த சமாதி யாருடையது எனில், மதுக்கரை கீழமாயனூரில் இருந்து
பழனி நகருக்கு வந்த சுப்பையா பிள்ளை அவர்களின் 6 வது மகனான சு.மாரிமுத்து பிள்ளை அவர்கள் சமாதி ஆகும். அவர் இளம் வயதிலே (23 வயது) மறைந்து விட்டார்.
அந்த காலகட்டத்தில் கட்டிட தொழிலில் ஈடுபட்ட காரணத்தால் சுப்பையா பிள்ளை அவர்கள் தனது மகனுக்கு உறுதியான வலுவான கட்டமைப்பில் சமாதி அமைத்தார். பூமிக்கு அடியில் பத்தடி ஆழத்திற்கு அஸ்திவாரம் அமைத்து வலுவாக கட்டப்பட்டதால், பலமுறை சண்முகநதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்குக்கு ஆட்பட்டு அடித்து செல்லாமல் இன்றும் உறுதியாக நிலைத்து உள்ளது.
அந்த சமாதியில் சிவலிங்கத்துடன் கூடிய கல்வெட்டு அமைக்கப்பட்டு அதில் இறந்தவரின் வரலாறு பதியப்பட்டுள்ளது.
இச்சமாதி (1892) கட்டப்பட்டது, 128 ஆண்டுகள் கடந்து தனது பழைமையை பிரதிபலித்து வருகின்றது.
சில நாளுக்கு முன்பு, இந்த சமாதியை சிறிது சீரமைத்து எங்கள் முன்னோர் மரபு அடையாளத்தை பாதுகாத்துள்ளேன்.
வரலாறு சொல்லி்!
தலைமுறையை உருவாக்கு!!
——————————————————–
அகமுடையார் வரலாற்றுத் தேடலில்….
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்